Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா

ஷபானா - ஆர்யன் காதலுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது ‘அபி டெய்லர்' ரேஷ்மாதானாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷபானா - ஆர்யன் காதலுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது ‘அபி டெய்லர்' ரேஷ்மாதானாம்.

Published:Updated:
ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘நிறம் மாறாத பூக்கள்' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்த நிஷ்மாவுக்கு இப்போது `தெய்வம் தந்த பூவே' சீரியலில் ஹீரோயின் புரொமோஷன் கிடைத்துள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் அளவுக்கு தமிழில் நிலைக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்ததாம் இவருக்கு. இப்போது கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாராம்.

ரேஷ்மா
ரேஷ்மா

ஷபானா - ஆர்யன் காதலுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது ‘அபி டெய்லர்' ரேஷ்மாதானாம். மாடலிங் துறையில் இருந்த போது ஆர்யன் ரேஷ்மாவுக்கு அறிமுகமாகி யிருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் சேர்ந்து நடித்த வகையில் ஷபானா, ரேஷ்மா இருவரும் நண்பர்களாக, அப்படியாகத்தான் இந்தக் காதல் வளர்ந்திருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`கதை கேட்ட போது தூங்கிட்டேன்' என அஸ்வின் பேசிய பேச்சுக்கு சின்னத்திரை நடிகர்கள் தரப்பிலிருந்தும் பலர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். ‘‘ஏற்கெனவே சீரியல்ல இருந்து போறவங்களை சினிமா ட்ரீட் பண்ற விதம் வெளியில சொல்லிக்க முடியாத மாதிரிதான் இருக்கு. இந்த நிலையில் என்ன, எதுக்குப் பேசறோம் என்று பேசத் தெரியாமல் பேசியிருக்கிறார். டி.வி-யில இருந்து சினிமாவுக்குப் போறவங்க, முடிஞ்சா நாலு பேரை அங்க கூட்டிட்டுப் போகணும். இல்லாட்டி இவங்களுக்குத் தானா வர்ற வாய்ப்பையாவது கெடுக்காம இருக்கணும்’' என்கின்றனர் இவர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இயக்குநர் அகத்தியன் குடும்பம் இப்போது செம ஹேப்பி. முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஜயலட்சுமி. ‘குக்கு வித் கோமாளி' விஜயலட்சுமியின் சகோதரி கனிக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. இப்போது ‘சர்வைவர்' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார் விஜயலட்சுமி. ‘சர்வைவர்' நிகழ்ச்சியில் வென்றதற்கான பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய்.

நடித்து முடித்த சில படங்களின் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்ட போது வர மறுத்துவிட்டாராம் நடிகர் உமாபதி. `சினிமாவுக்குள் வந்தும் வராததுமா இந்த மாதிரி நடந்துக்கிடறது நல்லதில்லன்னு தம்பிக்கு யார் புரிய வைக்கிறதோ' என முணுமுணுக்கின்றனர், சம்பந்தப்பட்ட படக் குழுவினர். `தீவுக்குப் போறோம்'னு கூட்டிட்டுப் போன சேனல் விதித்த நிபந்தனையால்தான் பேச மறுத்தார் என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சீரியல் வாய்ப்புகள் முன்புபோல இல்லாததால் மேக் அப் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார் அந்த சந்தோஷ நடிகை. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுக்க நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இப்போது மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார். ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இப்போது கட்டணத்தைப் பல மடங்கு கூட்டிவிட்டாராம். ‘‘சாதாரணமா வாங்குற கட்டணமே அதிகமா இருக்கு; இதுல வி.ஐ.பி சீட்னு ரெண்டு மடங்கு கட்டணமும் வாங்குறார்’’ எனப் புலம்புகின்றனர் கலந்துகொண்டவர்கள்.