Published:Updated:

சேனல் சைட் டிஷ்

தேவயானி
பிரீமியம் ஸ்டோரி
தேவயானி

‘சூர்ய வம்சம்’ படத்துல சின்ன வயசு பிரியா ராமன் கேரக்டர்ல நடிச்ச திவ்யாதான் இந்த சீரியலோட எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்.

சேனல் சைட் டிஷ்

‘சூர்ய வம்சம்’ படத்துல சின்ன வயசு பிரியா ராமன் கேரக்டர்ல நடிச்ச திவ்யாதான் இந்த சீரியலோட எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்.

Published:Updated:
தேவயானி
பிரீமியம் ஸ்டோரி
தேவயானி

‘கோலங்கள்’ சென்டிமென்ட்... ‘சூர்யவம்சம்’ இட்லி உப்புமா... சீரியல் ரீ என்ட்ரி... - நடிகை தேவயானி ஷேரிங்ஸ்

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு திரும்பியி ருக்கிறார் நடிகை தேவயானி. ஜீ தமிழ் சேனலில் அவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் `புதுப்புது அர்த்தங்கள்' சீரியல் 200 எபிஸோடுகளை கடந்திருக்கிறது.

“நான் நடிச்ச படங்கள் நடிகையா எனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்தாலும் சீரியல்கள்தான் மக்களை என்னை அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்க வெச்சது. விகடன் டெலிவிஸ்டாஸின் ‘கோலங்கள்’ சீரியல் தொடங்கி, இப்போ ‘புதுப்புது அர்த்தங்கள்’ வரை பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள்ல தான் நடிக்கிறேன்.

`கோலங்கள்' சீரியல் மூலம் நிறைய பேர் என்னை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டதா சொல்லியிருக்காங்க. ‘கோலங்கள்’ல எனக்கு ஜோடியா நடிச்ச அபிஷேக்தான் ‘புதுப்புது அர்த்தங்கள்’லயும் எனக்கு ஜோடி. சீரியல்ல ஏற்கெனவே எங்க காம்பினேஷன் ஹிட் ஆச்சு. அந்த சென்டிமென்ட்ல இந்த சீரியலும் மக்களுக்குப் பிடிக்கும்னு நம்பினேன். அதை இப்போ கண்கூடா பார்க்கிறோம்.

சேனல் சைட் டிஷ்

‘சூர்ய வம்சம்’ படத்துல சின்ன வயசு பிரியா ராமன் கேரக்டர்ல நடிச்ச திவ்யாதான் இந்த சீரியலோட எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர். சின்ன பொண்ணா நான் பார்த்தவங்க இன்னிக்கு மொத்த டீமையும் தன் கன்ட்ரோல்ல வெச்சிருக்குறது பெருமையா இருக்கு'' என்ற தேவயானி, ‘சூர்யவம்சம்’ படம் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘`சமீபத்துல ஷூட்டுக்காக தஞ்சாவூர்ல ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ரூமுக்கு டிபன் கொண்டு வரச் சொல்லி யிருந்தேன். ஹோட்டல் மேனேஜர் எனக்கு போன் பண்ணி, ‘மேடம் நீங்க வந்திருக்கீங்கனு ஹோட்டல்ல ஸ்பெஷலா இட்லி உப்புமா பண்ணிருக்கோம். சாப்பிடுவீங்களா’னு கேட்டார். ‘சூர்யவம்சம்’ படத்துல யதார்த்தமா இடம்பெற்ற இட்லி உப்புமா சீன், மக்கள் மனசுல இவ்வளவு ஆழமான இடத்தைப் பிடிச்சுருக்குனு நினைக்கும்போது சந் தோஷமா இருக்கு’’ என்கிறார்.

“நாங்க ரொம்ப பிஸி...” - சீரியல் குட்டீஸின் படிப்பும் நடிப்பும்!

ஒரு பக்கம் நடிப்பு... இன்னொரு பக்கம் படிப்பு... சீரியல்களில் நடிக்கும் குட்டீஸ் எப்படி இரண்டையும் சமாளிக்கிறார்கள்? ஓவர் டு குட்டீஸ்...

சேனல் சைட் டிஷ்

ரியா மனோஜ் (அபியும் நானும்)

“ஜீ தமிழ்ல ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி மூலமா மீடியாவுக்கு வந்தேன். அப்புறம் ‘செந்தூரப்பூவே’ சீரியல்ல நடிக்குற சான்ஸ் கிடைச்சுது. கொரோ னாவால அந்த சீரியலை பாதியிலேயே நிறுத்திட்டாங்க. இப்போ சன் டிவியில ‘அபியும் நானும்’ சீரியல்ல நடிக்கிறேன். ‘பெண்குயின்’ உட்பட சில படங்கள்லயும் நடிச்சிருக்கேன். ஆக்டிங் ஃப்ளஸ், படிப்பு கொஞ்சம் கஷ்டம்தான். மாசத்துல பதினஞ்சு நாள் ஷூட்டிங் இருக்கும். ஷூட்டிங் இல்லாதப்ப எங்க அம்மா மிஸ்ஸா மாறி க்ளாஸ் எடுப்பாங்க. ஷூட்டிங்ல, கொஞ்ச நேரம் கிடைச்சாலும் ஹோம் வொர்க் பண்ணுவேன். சீரியல்ல வர்ற மாதிரி நான் சமத்துப்புள்ள இல்லை யாம்... எங்கம்மா சொல்றாங்க.’’

சேனல் சைட் டிஷ்

ஷெரின் (பாக்கியலட்சுமி)

“நாலு வயசுல, `சத்யா’ படத்துல நடிச்சேன். அப்புறம் `பாசமலர்', `பைரவி'னு சீரியல்கள்ல யும் வெப்சீரிஸ்லயும் நடிச்சுட்டு இருந்தேன். `மெளனராகம்' சீரியலோட ஷூட் மாசத்துக்கு பத்து நாள்கள் கேரளாவுல நடக்கும். அதனால் ஸ்கூல் போக முடியாது. ஸ்கூல்ல ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு, ஆன்லைன்லதான் க்ளாஸ் அட்டெண்ட் பண்ணுவேன். அதனால் கொரோனாவுக்கு முன்னாடியே ஆன்லைன் க்ளாஸ் எனக்குப் பழகிப்போச்சு. எனக்கு ஸ்போர்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஸ்கூலுக்கு போகாததால, ஸ்போர்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன்.”

சேனல் சைட் டிஷ்

ரக்‌ஷா (பாரதி கண்ணம்மா)

‘`எங்க அக்கா சீரியல்ல நடிச்சாங்க. அவங்க டப்பிங் போகும்போது, நானும் போவேன். அப்போ ஒரு அங்கிள், ‘ரெமோ படத்துல நடிக்க ஒரு குட்டிப்பாப்பா தேவைப்படுது, விருப்பம் இருந்தா ஆடிஷனுக்கு வாங்க’ன்னு அம்மாகிட்ட சொன்னாங்க. ஆடிஷன்ல நான் செலக்ட் ஆயிட்டேன். `ரெமோ' படத்துக்குப் பிறகு, `வனமகன்’ படத்துல நடிச்சேன். இப்போ ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்ல நடிக்கிறேன். கொரோனா நேரத்துல ஆன் லைன் க்ளாஸ் நடந்திட்டிருந்தப்பதான் சீரியல் சான்ஸ் கிடைச்சுது. ஆன்லைன் க்ளாஸ்ல படிக்கிறது கஷ்டமா இல்ல. ஷூட் முடிச்சுட்டு வந்து அரை மணி நேரத்துல ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிருவேன். மீதியிருக்கிற கொஞ்ச நேரத்துல என்னோட யூடியூபுக்கு வீடியோ பண்ணுவேன், ஸோ நான் ரொம்ப பிஸி.’’

சேனல் சைட் டிஷ்

ஆல்யா (இதயத்தை திருடாதே)

“மூன்றரை வயசுல யூடியூப் சேனல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் ‘நாயகி’ சீரியல்ல சான்ஸ் கிடைச்சுது. ஷூட் முடிச் சுட்டு வந்ததும் அம்மா எனக்குப் பாடங்களை சொல்லிக் கொடுப்பாங்க. எங்கே போனாலும், என் விளையாட்டு பொம்மைகளை எடுத் துட்டுப் போயிருவேன். கொஞ்சம் டைம் கிடைச்சாலும் விளையாட ஆரம்பிச்சிருவேன். டைரக்டர் அங்கிள், `ரெடி, ரோல் ஆக்‌ஷன்' சொல்லிட்டா அடுத்த நிமிஷம் நடிக்க ஆரம் பிச்சுருவேன்.”