சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தினி

விஜய் டி.வி-யில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் `செல்லம்மா' சீரியலில் நடிக்கக் கேட்டு முதலில் சாயா சிங்கை அணுகியிருக்கிறார்கள்

விகடன் TV: ரிமோட் பட்டன்

உடன்பிறந்த சகோதரிக்குத் திருமணம் நடத்தி வைத்துவிட்டு, தம்பிக்கும் ஒரு பிசினஸை ஆரம்பித்துக் கொடுத்துவிட்டார் ‘கலக்கப் போவது யாரு' நாஞ்சில் விஜயன். இந்த இரண்டு கடமைகளை முடித்த பிறகே தன்னுடைய திருமணம் என்று முடிவு செய்திருந்தாராம். எனவே வீட்டில் இப்போது பெண் பார்க்கத் தொடங்கி யிருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜய் டி.வி-யில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் `செல்லம்மா' சீரியலில் நடிக்கக் கேட்டு முதலில் சாயா சிங்கை அணுகியிருக்கிறார்கள். ‘சன் டி.வி-யில் கமிட் ஆன சீரியல் இப்போதான் ஹிட் ஆகிட்டு இருக்கு, இந்தச் சமயத்துல இடம் மாறுவது நல்லா இருக்காது' என மறுத்துவிட்டாராம். தற்போது நடிகை சாந்தினியை ‘செல்லம்மா' ஹீரோயினாகக் கமிட் செய்திருக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வம் மீண்டும் சன் டி.வி-யில் இயக்குநர் கம் தயாரிப்பாளராக வருகிறார். இவர் தயாரிக்கும் ‘எதிர் நீச்சல்' என்கிற தொடரில் நடிகைகள் கனிகா, ஹரிப்ரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் நடிகர் நடிகைகளில் சம்பள விஷயத்தில் கலர்ஸ் தமிழ் சேனலின் பேமென்ட்தான் வேற லெவல் என்கின்றனர். பொதுவாக மற்ற சேனல்களில் பிரைம் டைம் சீரியலில் ஹீரோவுக்கு எபிசோடுக்கு 15,000 முதல் சம்பளம் வழங்கப் பட்டால், இங்கு அது டபுள் மடங்காம். எனவே இப்போது ஆர்ட்டிஸ்டுகள் பலரின் பார்வையும் இந்தச் சேனலை நோக்கித் திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜனவரி 27-ம் தேதி தொடங்க இருக்கிறது ‘குக்கு வித் கோமாளி’ மூன்றாவது சீசனின் ஷூட்டிங். கடந்த சீசனில் கலந்துகொண்ட சில போட்டியாளர்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைத்து, சினிமா வாய்ப்புகளும் அமைந்ததால், இந்த சீசனில் கலந்துகொள்ள சேனலுடன் தொடர்பிலிருக்கும் ஆர்ட்டிஸ்டுகள் நிறைய பேர் முட்டி மோதுகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

முன்னணி சேனலில் பொங்கல் தினத்தன்று நகைச்சுவை நடிகரின் பட்டிமன்றம் ஒளிபரப்புவதென்பதுதான் முதலில் இருந்த திட்டமாம். நகைச்சுவை நடிகரும் ரொம்பவே நம்பியிருந்த சூழலில் திடீரென என்ன நடந்ததோ, அந்த பிளான் கைவிடப்பட்டு, பட்டிமன்றம் கை மாறியிருக்கிறது. `இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள். பழைய பஞ்சாயத்து எதுவும் மிச்சமிருக்கான்னு தெரியலை' என்கிறார்கள் இருவரையும் அறிந்தவர்கள்.