ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

எங்க வீட்டுல எல்லாரும் `ராஜா ராணி' சீரியல் பார்ப்பாங்க. ஆரோக்கியமா விமர்சனம் செய்வாங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி' சீரியலில் வில்லியாகத் தெறிக்கவிடுபவர் அர்ச்சனா. முதல் சீரியலிலேயே ரசிகர்களின் நல்லாதரவைப் பெற்றுள்ள அர்ச்சனாவிடம் பேசினோம்.

உங்க சீரியல் என்ட்ரி பத்தி சொல்லுங்க?

``சன் நெட்வொர்க்ல நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்தேன். டிக் டாக்ல பயங்கர ஆக்டிவ்வான பொண்ணு நான். சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்தப்போ முதல்ல பயமா இருந்துச்சு. ஆனா, ரிஸ்க் எடுத்தா தான் அடுத்த ஸ்டெப் போக முடியும்னு துணிஞ்சு இறங்கினேன். இப்போ எனக்கு ஹேட்டர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. உண்மை யைச் சொல்லணும்னா சீரியல்லயும், நிஜத்துலயும் என் பேர் அர்ச்சனா என்பதால, நான் நிஜத்துலயும் வில்லியாதான் இருப்பேன்னு மக்கள் நினைக்கிறாங்க. நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க... நம்புங்கப்பா ப்ளீஸ்.''

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

சீரியல்ல நீங்க ஓவர் ஆக்டிங் பண்றதா ஒரு பேச்சு இருக்கே...

``இந்தக் கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டுட்டாங்க. `ராஜா ராணி' சீரியல்ல அர்ச்சனா கேரக்டர் பத்தி என்கிட்ட சொல்லும் போதே, அந்த கேரக்டருக்கான மேனரிசம் பத்திதான் அதிகமா சொன்னாங்க. அதனால அந்த கேரக்டருக்குத் தேவையானதைத்தான் நான் பண்றேன். சீரியல் தவிர்த்து வெப்சீரிஸ்ல நடிச்சிருக்கேன். நிறைய ரீல்ஸ் பண்றேன். அதுல எல்லாம் என்னுடைய நடிப்பு இயல்பாதான் இருக்கும்.''

சீரியல்ல நிறைய ரொமான்ஸ் சீன்கள்ல நடிக்கிறீங்க... வீட்டுல உள்ளவங்களை எப்படி சமாளிக்கிறீங்க?

``எங்க வீட்டுல எல்லாரும் `ராஜா ராணி' சீரியல் பார்ப்பாங்க. ஆரோக்கியமா விமர்சனம் செய்வாங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்கு பொதுவாவே நெகட்டிவ் கேரக்டர் பண்றவங் களைப் பிடிக்காது. நான் காமெடி கலந்த நெகட்டிவ் ரோல்தான் பண்றேன். ஆனாலும், சீரியல் பத்தி அப்பா என்கிட்ட எதுவும் கேட்டதே இல்லை. நான் நடிச்ச ரொமான்ஸ் சீனை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க எனக்கே கூச்சமா இருக்கும். அதனால அந்த மாதிரி சீன் டெலிகாஸ்ட் ஆகுதுனு தெரிஞ்சுட்டா காலை யிலேயே வீட்டைவிட்டு வெளியே கிளம்பிரு வேன்.''

சீரியல்ல ஆலியா மானஸாவும் நீங்களும் எதிரெதிர் துருவங்கள். நிஜத்துல எப்படி?

``ஆலியா என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்டு. பொறாமை குணம் இல்லாதவங்க. தான் வளர்வது மாதிரி தன்னைச் சுத்தி உள்ளவங் களும் வளரணும்னு நினைப்பாங்க. அவங்க இருக்குற இடம் ஹேப்பியா இருக்கும். நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. நிஜத்துல நாங்க ரொம்ப குளோஸ். இந்த நட்பு இப்படியே தொடரணும்னு ஆசைப்படுறேன்.''

****

உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், வடித்த கஞ்சி... சின்னத்திரை பிரபலங்களின் பியூட்டி சீக்ரெட்ஸ்...

‘`இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் ஸ்கின் னும் ஹேரும் இவ்வளவு சூப்பரா இருக்கோ....’’ - சின்ன, பெரிய திரை பிரபலங்களைப் பார்க்கும் பலரும் இப்படி நினைக்கக்கூடும். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கிய சீக்ரெட்ஸ் சிலவற்றைப் பகிர்கிறார்கள் சின்னத்திரை நட்சத்திர முகங்கள் சிலர்...

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

அனிதா வெங்கட்

“40 வயசுலயும் என் முகத்துல சுருக்கங்களை நீங்க பார்க்க முடியாது. அதுக்கு முக்கியமான காரணம் உருளைக்கிழங்குதான். உருளைக் கிழங்கைக் கழுவி சுத்தம் செஞ்சு, துருவிப் பேன். அதை ரெண்டு கண்கள் மேலயும் வெச்சுப்பேன். அந்த உருளைக்கிழங்கு லேருந்து, சாறு முகத்துல வடியும். அதை முகம் முழுக்கத் தடவிவிடுவேன். ஒரு மணி நேரம் கழிச்சு முகம் கழுவினா ஃப்ரெஷ்ஷா இருக்கும்.”

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

வைஷ்ணவி அருள்மொழி

“தேங்காய் எண்ணெய், செம்பருத்திப்பூ, மருதாணி இலை, வெந்தயப்பொடி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை... இந்தப் பொருள் களையெல்லாம் இரும்புக் கடாய்ல சேர்த்துக் கொதிக்க வெச்சு நிறம் மாறுனதும் இறக்கணும். மறுநாள் காலையில வடிகட்டி வெச்சுக்கணும். இந்த எண்ணெயைத் தலைக்குத் தடவி, மசாஜ் செய்தா முடி அடர்த்தியா, கருமையா இருக் கும்.”

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

ஆனந்தி

“முதல் நாள் சாதம் வடிச்ச கஞ்சியை மறுநாள் தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் மண்டையோட்டுப் பகுதியில் அப்ளை பண்ணி அரை மணி நேரம் ஊறவிடணும். சீயக்காய் அல்லது மைல்டு ஷாம்பூ யூஸ் பண்ணி வாஷ் பண்ணணும். சாதக் கஞ்சியோடு வெந்தயப்பவுடர் கலந்தா கூடுதல் ஆரோக் கியம். ஒரு டீஸ்பூன் ஆளி விதைகளை தண் ணீர்ல ஊறவெச்சு அரைச்சு, முகத்துக்கு பேக் போட்டு, அரை மணி நேரம் கழிச்சுக் கழுவினா முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.’’

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

கண்மணி மனோகரன்

“100 கிராம் சின்ன வெங்காயத்தை அரைச்சு ஜூஸ் எடுத்துப்பேன். அதை தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் மண்டையோட்டுப் பகுதியில் தேய்ச்சு, அரை மணிநேரம் கழிச்சு மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி வாஷ் பண்ணு வேன். இதைச் செய்ய முடியாத நாள்கள்ல, தேங்காய்ப்பாலைத் தடவி, ஷாம்பூ வாஷ் பண்ணுவேன். இந்த ரெண்டும்தான் என் தலைமுடியை பளபளப்பா வெச்சிருக்கு.’’

சேனல் சைட் டிஷ்: நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க! - ‘ராஜா-ராணி’ அர்ச்சனா

லாஸ்லியா

``ஓட்ஸ் - 2 டீஸ்பூன், உருளைக்கிழங்குச்சாறு - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன் மூன்றை யும் கலந்து முகத்துல பேக் போட்டுப்பேன். முடிக்கு தேங்காய் எண்ணெய் தவிர்த்து வேற எதுவும் பயன்படுத்துறது இல்ல. ஸ்கின் அலர்ஜி வராமலிருக்க, மேக்கப் பொருள்கள் தரமா இருக்கணும். அதைவிட முக்கியமா, மேக்கப்பை ரிமூவ் பண்ணாம தூங்கவே கூடாது.’’