சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

கார்த்திக்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக்

‘குலதெய்வம்’, ‘பூவே பூச்சூடவா’, ‘யாரடி நீ மோகினி’ எனச் சில சீரியல்களில் நடித்த பவித்ரன், சீரியல்களில் ஹீரோ கேரக்டருக்காகக் காத்திருந்தார்

விகடன் TV: ரிமோட் பட்டன்

கோவிட் முதல் அலையின் போது ஷூட்டிங் வர மறுத்த காரணத்தால் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலிலிருந்து தூக்கப்பட்டவர் ரக்‌ஷா. பிறகு கொரோனா லாக்டௌன் முழுவதும் வீட்டிலேயே இருந்து நன்கு சாப்பிட்டதில் உடல் எடை கூடிவிட்டதாகச் சொன்னார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் ஜீ தமிழ் சேனலில் இருந்து ‘அன்பே சிவம்’ தொடருக்கு கமிட் செய்யச் சென்றவர்களிடம், ‘பத்துக் கிலோ குறைச்சுக் காட்டுறேன்’ எனச் சொல்லி அதேபோல் குறைத்த பின் சீரியலில் கமிட் ஆனார். மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்காது. தற்போது இந்த சீரியலில் இருந்தும் தூக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் உடல் எடைதான் பிரச்னை என்கிறார்கள். ரக்‌ஷாவோ, ‘ஆர்ட்டிஸ்டுகளை மாத்தறதைத் தப்பு சொல்லலை. ஆனா சம்பந்தப்பட்டவங்ககிட்ட நேரடியாச் சொல்லிட்டு மாத்தலாமே’ என்கிறார். ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில் நடிக்க உடல் பருமனான ஹீரோயினைத் தேடி ஆறு மாத காலம் அலைந்தார்கள். இப்போது அதே சேனல்மீது ‘குண்டாக இருக்கிறார்’ என ஹீரோயினை சீரியலை விட்டு அனுப்பிவிட்டதாகப் புகார் வாசிக்கிறார்கள். சேனல் தரப்பிலோ இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்த கார்த்திக் ‘சினிமா தயாரிக்கப் போகிறேன்’ எனத் தன்னுடைய ரசிகர்களிடம் நிதி கேட்டது நினைவிருக்கிறதா? ஓரளவு நிதி சேர்ந்துவிட்டதாகச் சொல் கிறார்கள். இந்த வருடத்தில் பட வேலைகளைத் தொடங்கி விடலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குலதெய்வம்’, ‘பூவே பூச்சூடவா’, ‘யாரடி நீ மோகினி’ எனச் சில சீரியல்களில் நடித்த பவித்ரன், சீரியல்களில் ஹீரோ கேரக்டருக்காகக் காத்திருந்தார். இந்நிலையில் சினிமாத் தயாரிப்பில் இறங்கிய அவரது உறவினர் ஒருவர் சினிமாப் பக்கம் கூட்டிச் சென்று விட்டாராம். நட்டி ஹீரோவாக நடிக்க, விரைவில் வெளியாக விருக்கும் ‘வெப்’ என்கிற அந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பில் இப்போது பிசியாக இருக்கிறார் பவித்ரன்.

`மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டி யாளர்களுக்கு அவர்கள் தரப்பில் செய்த போக்குவரத்து உள்ளிட்ட சில செலவினங்களைத் திருப்பி அளிப்பதாக ஆரம்பத்தில் வாக்குறுதி தந்தார்களாம். ஆனால் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு ஹிட் ஆகவில்லை என நினைத்தார்களோ என்னவோ, அந்தப் பணம் எதையும் யாருக்கும் திருப்பித் தர வில்லையாம். இதுதொடர்பாக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் பேச முயன்ற போட்டியாளர்களுக்கும் சரியான பதில் கிடைக்க வில்லையாம். எனவே போட்டி யாளர்களில் சிலர் ‘குறைந்தபட்சம் காது கொடுத்துக் கேட்கக்கூட மறுக்கிறார்கள், எனவே இந்த விவகாரத்தை விடக் கூடாது’ என சமூக வலைதளங்கள் மூலம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘அப்பா பிள்ளை’ கலந்துகொள்ளும் சூப்பரான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார் சேனலின் ஆஸ்தான காமெடி நடிகர். அவரின் மகளோ, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வசிக்கும் அவர் மனைவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மனைவியிடம் பேசி மகளை அழைத்து வர சேனலின் உதவியையே நாடினாராம். சேனலும் அவரின் மனைவியிடம் பேசியிருக்கிறது. ‘நீங்க காட்டின ஷோ எல்லாம் போதும்’ என சேனல் ஆட்களிடம் கொஞ்சம் கடுமையாகவே சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டாராம் அவர்.