சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ராதிகா ப்ரீத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராதிகா ப்ரீத்தி

`குக்கு வித் கோமாளி’ 3-வது சீசனுக்கு ஆசை காட்டி ஏமாற்றிவிட்டதாகக் கவலையில் இருக்கிறார் ‘தெய்வ மகள்’ ஷப்னம்

விகடன் TV: ரிமோட் பட்டன்

`பிக்பாஸ் அல்டிமேட்’ சென்றுள்ள தாடி பாலாஜி அங்கு தன் மகள் போஷிகா குறித்துப் பேச, அவருக்கு எதிராக நித்யாவும் போஷிகாவும் சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே மகள் விஷயத்தில் நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகளை பாலாஜி மதிக்கவில்லை எனச் சொல்லிவந்த நித்யா, விவாகரத்து வழக்கை விரைவுபடுத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கமிட் ஆன சில மாதங்களிலேயே ராதிகா ப்ரீத்தி `பூவே உனக்காக’ தொடரிலிருந்து வெளியேறியதன் பின்னணி குறித்து விசாரித்தால் சம்பளப் பிரச்னை என்கிறார்கள். சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்ததைச் சுட்டிக் காட்டி, சம்பளத்தை உயர்த்திக் கேட்டாராம். தயாரிப்புத் தரப்பு அதற்குச் சம்மதிக்காததாலேயே வெளியேறினாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`குக்கு வித் கோமாளி’ 3-வது சீசனுக்கு ஆசை காட்டி ஏமாற்றிவிட்டதாகக் கவலையில் இருக்கிறார் ‘தெய்வ மகள்’ ஷப்னம். நிகழ்ச்சியில் கோமாளியாக வருவது குறித்து முதலில் இவரிடம் பேசியிருந்தார்களாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ, கடைசியில் இவரது பெயர் போட்டியாளர் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜய் டி.வி-யில் பிக் பாஸ் யூனிட்டில் பணிபுரிந்து வந்தார் ஆங்கர் பிரியங்காவின் கணவர் பிரவீன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா அங்கிருந்த நாள்களில் ஒரு முறைகூட தன் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தற்போது போட்டி சேனல் ஒன்றில் சேர முயற்சி செய்துவருகிறாராம் பிரவீன். விரைவில் இந்த இடப்பெயர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

சன் டி.வி-யில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘பூவே உனக்காக’ சீரியலை 10.30 மணிக்கு மாற்றியிருக்கிறார்கள். `10 மணி ஸ்லாட்டில் நல்ல டி.ஆர்.பி. வாங்கிவந்த சூழலில் சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டதற்குக் காரணம் உள்ளரசியல்’ என முணுமுணுக்கிறார்கள் சீரியலில் நடித்துவரும் நட்சத்திரங்கள் சிலர்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

முன்னணி சேனலில், இனிபுதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல்களில் ஹீரோ ஹீரோயின் யாராக இருந்தாலும், அவர்களே டப்பிங் பேச அனுமதிக்க வேண்டாமென்கிற முடிவை எடுத்திருக்கிறார்களாம் சேனல் மற்றும் தங்களுடைய ஓ.டி.டி தளத்தில் சீரியல்களை ஒளிபரப்புவதில் நிகழும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்த முடிவு என்கிறார்கள்.