என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
News
சேனல் சைட் டிஷ்

திருமணம் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. டயலாக் சொல்ல ரொம்ப கஷ்டப்படுவேன்

இன்னும் கொஞ்சம் லவ் பண்ணிக்கிறோமே... ஸ்ரேயா - சித்து

சீரியல்களில் ஜோடியாக நடிப்பவர்கள் பின் நிஜத்திலும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்வது தமிழ்த் தொலைக்காட்சி உலகில் புதிதல்ல. அந்த வரிசையில் அடுத்த ஜோடி ஸ்ரேயா ஆஞ்சன் - சித்து. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘திருமணம்’ சீரியலில் தம்பதியராக நடித்தவர்கள் தங்களுக்குள் காதல் மலர்ந்த தருணத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

“நான் மங்களூரு பொண்ணு. திருமணம் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. டயலாக் சொல்ல ரொம்ப கஷ்டப்படுவேன். எங்களோட முதல் மீட்டே பயங்கர சொதப்பல். சித்து தான் ஹீரோனு தெரியாது. ஸ்பாட்ல எல்லார்கூடவும் சேர்ந்து உட்கார்ந்துட்டு இருந்தார். எல்லாருக்கும் ஹாய் சொல்லிட்டு நான் மேக்கப் பண்ணப் போயிட்டேன். அப்புறம்தான் அந்தக் கூட்டத்துல ஒருத்தரான இவர்தான் ஹீரோனு தெரிஞ்சுது. சீரியல் தொடங்கின பிறகும் டாம் அண்டு ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருந்தோம். அப்புறம் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். சித்துகிட்ட தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். சீரியல்ல எங்க ஜோடி மக்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நான் எங்கே வெளிய போனாலும் சித்துவை பத்தி எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. நாங்க நிஜத்திலும் லவ் பண்றோமானு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க” என்று ஸ்ரேயா சிரிக்க, சித்து தொடர்கிறார்...

“எங்க அம்மாவுக்கு ஸ்ரேயாவை ரொம்ப பிடிக்கும். இப்போவரை சீரியல்ல அவங்க கேரக்டர் பெயரான `ஜனனி'ங்கிற பெயரைச் சொல்லிதான் கூப்பிடுறாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும் தருணங்கள் சந்தோஷமா இருக்குறதா உணர்ந்தோம். அது எப்போ காதலா மாறுச்சுனு தெரியல'' என்கிறார்.

சேனல் சைட் டிஷ்

“சித்து எல்லாருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவார். யார்கிட்டயும் ஈகோ பார்க்க மாட்டார். சூப்பரா சமைப்பார். லாக்டெளன்ல நான் சென்னையில மாட்டிக்கிட்டேன். சித்துதான் தினமும் சமைச்சு எடுத்துட்டு வந்தார். ரொம்ப அக்கறையா பார்த்துப்பார்...’’ என்றபடி சிக்குவை அறிமுகம் செய்கிறார் ஸ்ரேயா. “இவன் பெயர் சிக்கு. சித்து எனக்காக கிப்ஃட் பண்ண செல்ல நாய்க்குட்டி. விஜயகாந்த் சார் வீட்லேருந்து வாங்கிட்டு வந்து சர்ப்ரைஸா கொடுத்தார்” என்ற ஸ்ரேயாவின் கைகளை கோத்துக் கொள்கிறார் சித்து.

சரி... எப்போ கல்யாணம்..?

“எங்க வீட்டுல எல்லாருடைய சம்மதத்தோடும் ஸ்ரேயா வீட்டுல பேசினோம். எப்பவுமே பொண்ணுங்கதான் மாப்பிள்ளை வீட்டு மனுஷங்களை இம்ப்ரெஸ் பண்ண நிறைய மெனக்கிடுவாங்க. ஆனா, ஸ்ரேயா வீட்டுல இருக்குறவங்களுக்கு என்னை புரிய வைக்கிறதுக்காக நான் துளு கத்துக்க ஆரம்பிச்சேன். அவங்களோட சம்பிரதாயங்கள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இதெல்லாம் பார்த்து ஸ்ரேயாவை நான் நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை வந்து, அவங்களும் ஓ.கே சொல்லிட்டாங்க. நாங்கதான் இன்னும் கொஞ்சம் லவ் பண்ணிக்கிறோமேன்னு சொல்லி கல்யாணத்தைத் தள்ளி வெச்சுருக்கோம். இந்த வருஷக் கடைசிக்குள்ள தேதி சொல்லிடறோம். எங்க காதலலை மக்கள்தான் தொடங்கி வெச்சாங்க. அவங்ககிட்ட சொல்லிட்டுதான் கல்யாணம்” என்று விடைபெறுகிறார்கள்.

அண்ணியார் ரேகா
அண்ணியார் ரேகா

அடுத்த லாக்டௌனுக்குள்ள கோவா ட்ரிப்!

சினிமாவில் `படையப்பா' நீலாம்பரி என்றால் சீரியலில் அண்ணியார் ரேகா. `தெய்வமகள்' சீரியலில் அவர் செய்த வில்லத்தனத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் ரேகாவைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. லாக்டௌன் சீஸன் 1 செம ஜாலியாகப் போனதாம் ரேகாவுக்கு.

‘`யாருக்கு எப்படியோ எனக்கு லாக் டௌன் சூப்பரா போச்சு. ஆன்லைன் அந்தாக்‌ஷரில இருந்து ஆன்லைன் யோகா வரை குடும்பத்தோட என்ஜாய் பண்ணினோம். ஷூட்டிங் காரணமா குடும்பத்தோட நேரம் செலவழிக்க முடியாத கவலையெல்லாம் லாக் டௌன்ல காணாமப்போச்சு. மறுபடியும் லாக்டௌன் வருதுன்னு பேசிக்குறாங்க...அதுக்குள்ள எப்படியாச்சும் கோவாக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு வந்துடணும்னு பிளான்ல இருக்கேன்’’ என்கிறார்.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

மச்சானுக்குப் பிடிச்ச பேரு!

‘கறுப்பு ரோஜா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. ‘`என்ன பேரு வைக்கலாம்ன்னு ரொம்ப யோசிச்சோம்... ஒண்ணுமே சிக்கல. திடீர்னு இந்த பேரு தோணவே என் மச்சான்கிட்ட சொன்னேன். அருமையா இருக்கேன்னு சொன் னாரு, அதையே எங்க சேனலுக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டோம்.

`ஊரே யூடியூப் சேனல் ஆரம்பிச் சப்போ சும்மா இருந்துட்டு இப்போ போய் ஆரம்பிச்சிருக்காயா'னு என் மச்சானே என்னைக் கலாய்ச்சாரு. அட.. ஆமாங்க... டல்கோனா காபில இருந்து என்னென்னமோ வித்தையெல்லாம் லாக்டௌன்ல இறக்கினாங்களே... அப்ப அதையெல்லாம் பார்த்துகிட்டு ஜாலியா இருந்தேன். இப்போ சேனல் தொடங்கணும்னு தோணுச்சு, தொடங்கிட்டேன்...’' என்பவர், ஆங்கரிங், நடிப்பு என அடுத்த ரவுண்டில் செம பிஸியாம்.

செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு
செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு

டாட்டூவால சினிமா சான்ஸ் மிஸ் ஆகுது!

சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபுவின் ஒரு கையில் கிருஷ்ணா டாட்டூவும், இன்னொரு கையில் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ டாட்டூவும் கவனம் ஈர்க்கின்றன. ``டாட்டூஸ்னா ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை என் டாட்டூக்களை பார்க்கும்போதும் நிறைவா ஃபீல் பண்றேன். நிறைய படங்கள்ல அம்மாவா நடிக்க வாய்ப்பு வருது. ஆனா, நான் குத்தியிருக்கிற டாட்டூஸால அந்த வாய்ப்புகள் மிஸ் ஆயிடுது. டாட்டூ குத்தினா பணக்கார அம்மா, ஸ்டைலிஷ் அம்மான்னு சொல்லிடுவாங்களாமே. சிலர் டாட்டூ போட்டதுக்கு அப்புறம் அவசரப்பட்டுட்டோமே’ன்னு ஃபீல் பண்றாங்க. போடறதுக்கு முன்னாடி ஆயிரம் முறைகூட யோசிக்கலாம். ஆனா, போட்டதுக்கு அப்புறம் யோசிக்கவே கூடாது!’’ - சின்சியர் அட்வைஸ் கொடுக்கிறார் சுஜாதா.

சேனல் சைட் டிஷ்