
தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்கிற அடையாளத்துடன் இணைய உலகில் பிரபலமான சசிலயா முதன் முறையாக சீரியலுக்கு வந்திருக்கிறார்.



ஜீ தமிழ் சேனலில் சபானாவின் கணவர் ஆர்யன் ஹீரோவாக நடிக்கிற சீரியலுக்கு ஏப்ரல் 3-ம் தேதி பூஜை போட்டு ஷூட்டிங் தொடங்கியிருக்கிறார்கள். சீரியலில் அவருக்கு ஜோடியாக முதலில் சபானாவையே கமிட் செய்யும் ஒரு எண்ணம் இருந்ததாம். ஆனால் செந்தில்-ஜா, தினேஷ்-ரச்சிதா, மதன்-ரேஷ்மா என ரியல் ஜோடிகள் திருமணத்துக்குப் பிறகும் ஜோடியாக நடித்த சீரியல்களின் ரேட்டிங் வரிசையாக அடிவாங்கியதைக் கவனத்தில் கொண்டவர்கள், அந்த முடிவைக் கைவிட்டுவிட்டார்களாம்.

ஜெயா டி.வி-யில் பரத நாட்டியத்துக்கு முக்கியத்துவம் வரும் வகையில் ஒளிபரப்பாகிவருகிற நிகழ்ச்சி `தக திமி தக ஜனு.' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் `அருவி' அதிதி பாலன். என்ன பிரச்னை எனத் தெரியவில்லை, திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

பையன் மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு நடித்த `சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. எனவே அடுத்த சீரியலிலும் அதே லுக் இருக்கட்டுமென்கிறார்களாம் சேனலில். அந்தக் கேரக்டர் போலீஸ் கேரக்டராக விரிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர், நடிகைகள் சிலரை கேஷுவலாக `வாம்மா, போம்மா' எனப் பேச, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் மேடையிலேயே இதைக் கண்டித்ததுடன், ரோபோ சங்கரையும் கூப்பிட்டுக் கலாய்த்துவிட்டாராம். `டி.வி விருது வழங்கும் விழா மேடையில் மன்சூர் எப்படி என்கிறீர்களா, `சுந்தரி' சீரியலை மன்சூரின் வீட்டில் அனைவரும் பார்ப்பார்களாம். அதில் நடித்திருக்கும் கேப்ரில்லாவிடம், ‘‘ஒருமுறை எங்க வீட்டுக்கு வந்து போங்க'’ என அங்கேயே கோரிக்கையும் வைத்துவிட்டார்.

தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்கிற அடையாளத்துடன் இணைய உலகில் பிரபலமான சசிலயா முதன் முறையாக சீரியலுக்கு வந்திருக்கிறார். அம்மா கேரக்டரில் இவர் நடித்திருக்கும் சீரியல் விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
யார்கிட்டயும் சொல்லாதீங்க!
‘உங்க பஞ்சாயத்து இப்போதைக்குத் தீர்கிற மாதிரித் தெரியலை. புள்ளையப் போய் போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வைங்க, அதுதான் குழந்தைக்கு நல்லது’ என்கிற ஒரேயொரு அட்வைஸ்தான் தந்தாராம் ‘பெரிய’ நடிகர். அதற்குத்தான் அம்மாவிடமிருந்து கேரக்டரையெல்லாம் இழுத்து கோப வார்த்தைகளாம்.