சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பாவனி-அமீர்
பிரீமியம் ஸ்டோரி
News
பாவனி-அமீர்

பிக் பாஸ் மூலம் இணைந்த அமீர்-பாவனி இருவரும் ஜோடியாகவே ‘அஜித் 61' படத்தில் கமிட் ஆகியிருப்பதாகத் தெரிகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவத் தனியாளாக அங்கு சென்று வந்திருக்கிறார் பிளாக் பாண்டி. ‘‘நகரங்கள்ல வாழ்கிற மக்களின் நிலைமை ஓரளவு பரவால்ல. கிராமப் புறங்கள்ல ரொம்பவே கஷ்டப்படுறாங்க. அதனால எங்களது ‘உதவும் மனிதம்' மூலம் இலங்கை கிராமங்களுக்குப் போக முடிவெடுத்தேன். என்னுடன் ரெண்டு பேரைக் கூட்டிட்டுப் போயிருக்கலாம். ஆனா அந்த ரெண்டு பேர் போய் வர ஆகிற பணத்துல அங்க பத்துக் குடும்பங்களுக்கு உதவலாம்னு தோணுச்சு. அதனால ஏற்கெனவே என் அமைப்பு மூலமா என்னுடன் தொடர்பிலிருந்த இலங்கை நண்பர்களின் உதவியுடன் சுமார் 500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு முதலான அடிப்படைத் தேவைகளுடன் பண உதவியும் செய்தோம். மறுபடியும் இந்த மாதக் கடைசியில் போக இருக்கேன். இலங்கை மக்களுக்கு உதவ நினைக்கிறவங்க தாராளமா என்னைத் தொடர்பு கொள்ளலாம்’' என்கிற பாண்டி, சென்னையில் இருக்கிற இலங்கைத் தூதரகம் இந்த விஷயத்தில் தனக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாகவும் சொல்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் மூலம் இணைந்த அமீர்-பாவனி இருவரும் ஜோடியாகவே ‘அஜித் 61' படத்தில் கமிட் ஆகியிருப்பதாகத் தெரிகிறது. அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சீரியலில் நடிக்க வந்தார் அமலா. ஏனோ தெரியவில்லை அந்த ஒரேயொரு சீரியலுடன் மறுபடியும் ஆந்திராவுக்கே போய் விட்டார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அவரைப் பார்த்த சில சீரியல் தயாரிப்பாளர்கள், மறுபடியும் அவரை சீரியலுக்குக் கூட்டி வருவது குறித்து யோசித்து வருகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி' தொடரிலிருந்து விலகிய பின் சொந்தமாகப் படம் எடுக்கப் போவதாகச் சொல்லி அதற்காகத் தன் ரசிகர்கள் நிதி உதவி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார் நடிகர் கார்த்திக். அந்தப் படத்தின் நிலைமை என்னவெனத் தெரியாத நிலையில், தற்போது முழுக்க அவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கியிருப்பதாக அவர் குறித்துத் தகவல்கள் கசிகின்றன.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘மைனா' நந்தினியின் மாமியார், ரஜினியுடன் ‘பாண்டியன்', ‘ராஜா சின்ன ரோஜா' முதலான சில படங்களில் நடித்த சீனியர் நடிகை. ‘‘கமல் படத்துல (விக்ரம்) நடிச்சிட்ட. ரஜினி படத்துக்கும் முயற்சி செய்யலாமே'’ என மருமகளிடம் சொல்லியிருக்கிறார். ‘பார்க்கலாம்' எனச் சொல்லியிருக்கிறாராம் மைனா.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

‘இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்’ என்றாலே விவகாரம்தான் போல‌. வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்தான் என ஆரம்பத்தில் சேனல் தரப்பிலிருந்தே சொல்லப்பட்டது. ஆனால் ‘‘யாருங்க அப்படிச் சொன்னது? அது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்லாம் இல்ல, நான்தான் சீரியலின் ஹீரோ’’ என்கிறார் ஒருவர். அந்த இரண்டாமவரைக் கேட்டால், ‘‘யார் என்ன வேணாலும் சொல்லட்டும், என்னை சீரியல்ல கமிட் பண்ணினபோது ‘நீங்களும் ஹீரோ’ன்னுதான் சொன்னாங்க’’ என்கிறார். எங்கு போய் முடியுமோ இந்த ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்து?