Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் மதுரை முத்து, பால சரவணன் ஆகியோர் கலந்துகொள்ளலாமெனத் தெரிகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் மதுரை முத்து, பால சரவணன் ஆகியோர் கலந்துகொள்ளலாமெனத் தெரிகிறது.

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan
விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரையில் ஒரே சேனலின் பிரைம் டைம் சீரியல்களில் நடித்த போது ரேஷ்மா, ஷபானா இருவரிடையே நட்பு உண்டானது. இந்த நட்பு தற்போது சினிமாவிலும் இருவரையும் சேர்ந்தே அழைத்துச் செல்கிறது. விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் நடிக்க இருவருமே கமிட் ஆகியிருக்கிறார்கள். ரேஷ்மாவுக்கு சினிமாவில் இது முதல் படமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடங்கிய சில நாள்களிலேயே ஷிவானி வெளியேறியதில் சேனலுக்கு அதிருப்தி என்கிறார்கள். நிகழ்ச்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லையென்றும், புரொமோவில் தன்னைக் காட்டுவதில்லை எனவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் அடிக்கடி சண்டை பிடித்தாராம். ‘‘சீரியல், பிக் பாஸ்னு வளர்த்து விட்டதற்கு நல்லாப் பண்ணிடுச்சுப்பா'’ என்கிற குரல்கள் சேனல் தரப்பில் கேட்கின்றன.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் மதுரை முத்து, பால சரவணன் ஆகியோர் கலந்துகொள்ளலாமெனத் தெரிகிறது. சேனல் தரப்பிலிருந்து இருவரிடமும் முதல் சுற்று பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தனது வீட்டில் நான்கு நாய்க்குட்டிகள், நான்கு பூனைக்குட்டிகள் வளர்த்து வருகிறார் நடிகை ஷப்னம். இது போதாதென்று கொரோனா காலத்தில் சாப்பாடு கிடைக்காமல் இவரது வீட்டைச் சுற்றி வந்த தெரு நாய்கள் சிலவற்றிற்கும் அடைக்கலம் தர, அவையுமே இப்போது இவரது வீட்டு கார் ஷெட்டிலேயே தங்கத் தொடங்கி விட்டனவாம். ஆக மொத்தத்தில் பத்துக்கும் மேற்பட்ட இந்த வாயில்லா ஜீவன்களுடன்தான் இவரது ஷூட்டிங் இல்லாத பொழுதுகள் நகர்வதாகச் சொல்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தன்னுடைய நடவடிக்கை களால் சீரியல் வாய்ப்புகளை இழந்த ஸ்ரீநிதி பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் போட்டியாளர்கள் தேர்வு ஏறக்குறைய முடிவடைந்துவிட்ட நிலையில், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டதாம். எனவே இப்போதைக்கு உடனடியாக ஒரு வேலை தேவை என வேலை தேடத் தொடங்கி விட்டாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க..!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிரபல ஜோடி அது. கல்யாணத்துக்குப் பிறகு அவர்களை ஜோடியாகவே தங்களுடைய விளம்பரங்களில் நடிக்க வைத்தன பல முன்னணி நிறுவனங்கள். யார் கண் பட்டதோ... தற்போது நடிகர் வேறொரு டி.வி பிரபலத்துடன் விளம்பரத்தில் தோன்றுகிறார். விசாரித்தால், நடிகரின் மனைவி பாதி நாள் சொந்த மாநிலத்தில்தான் இருக்கிறார் என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ, ‘‘ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்னை. அதுதான் விளம்பரத்தில் நடிகை வராததற்குக் காரணம்’’ என்கிறார்கள்.