சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா

குழந்தைகள் வளரத் தொடங்கிவிட்டால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என யோசித்துவருகிறதாம், பிரஜின்-சாண்ட்ரா ஜோடி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீீரியலுக்கு வருவதற்கு முன் ரேடியோ, டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ‘பூவே பூச்சூடவா’ கிருத்திகா, தன் மகள் ஸ்ரீகாவையும் தன்னைப்போலவே டிவி, சினிமாப் பக்கம் கொண்டு வர நினைக்கிறாராம். நேரம் கிடைக்கிற போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூடவே கூட்டி வருவது, ஷோக்களில் பங்கெடுக்க வைப்பது என மகளைத் தயார்படுத்திவருகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

குழந்தைகள் வளரத் தொடங்கிவிட்டால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என யோசித்துவருகிறதாம், பிரஜின்-சாண்ட்ரா ஜோடி. கொரோனா ஓய்ந்த பிறகு அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாமெனத் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பிரஜின் மொட்டையடித்துக்கொண்டுள்ளார். புதிய படத்திற்கான கெட்டப்பா?

விகடன் TV: ரிமோட் பட்டன்

`குக்கு வித் கோமாளி’ சாய் சக்தியின் நிஜப் பெயர் அப்துல் ஹமீது. சாய்பாபாவின் மீது கொண்ட பற்றினால் சாய் சக்தி எனப் பெயர் வைத்துக்கொண்டார். கடந்த வாரம் பிறந்த தன் மகளுக்கும் சாயிஷா என்கிற பெயரைச் சூட்ட முடிவெடுத்திருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஓ.டி.டி தளத்தில் கால் பதித்ததைத் தொடர்ந்து டிவி ரியாலிட்டி ஷோ பக்கமும் வந்து விட்டார் தமன்னா. தெலுங்கில் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தான். தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்படவுள்ளதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

அதகளம் செய்யும் வில்லி வேடமென்றால் வெளுத்து வாங்கும் நடிகை கன்யா பாரதி, சமயங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். நகைச்சுவையோ, அல்லது, வில்லி வேடமோ... சீரியல்களில் அந்தந்தக் கதாபாத்திரங் களுக்கு ஏற்றபடி தன்னுடைய காஸ்ட்யூம்களை தானே டிசைன் செய்துகொள்கிறார் இவர்.

யார்கிட்டயும சொல்லாதீங்க!

பரபரப்புக்குப் பஞ்சம் வைக்காதவர், சகோதர பந்தம் குறித்துப் பொதுவெளியில் பேசியதை எதிர்த்தரப்பில் ரசிக்கவில்லையாம். ‘நீங்க என்ன உறவு முறைன்னு யாரும் இப்பக் கேட்டாங்களா, எதுக்கு வலியப் போய் தம்பட்டம் அடிக்கணும்?’ என்கிற முணுமுணுப்பு அங்கு கேட்டதாகச் சொல்கிறார்கள்.