Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘நல்லபடியா ஒரு பிசினஸ்ல இருக்கேன்; டிவி, சீரியல்ங்கிற டாபிக் பத்தியே நான் இப்ப ஒரு வார்த்தைகூடப் பேச விரும்பலை’

பிரீமியம் ஸ்டோரி

தான் வசிக்கும் சென்னை, துரைப்பாக்கத்திலிருந்து மெரினாக் கடற்கரை வரை கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று தினமும் உணவு வழங்கிவருகிறார் சரண்யா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இதற்காக `ஷோர் விமன் சொசைட்டி’ (மீடியாவில் பணிபுரிந்தபோது மீனவர் பிரச்னைகள்மீது அதிக கவனம் செலுத்தி வந்ததால், மீனவப் பெண்களைப் பிடித்துப்போய் இந்தப் பெயர் வைத்தாராம்) என்கிற பெயரில் சமூக வலைதளத்தில் தனிப்பக்கமே தொடங்கியிருக்கிறார். ‘‘கடந்த ஊரடங்கில் புத்தகம் படிக்கறதும், சினிமாப் பார்க்கிறதுமா பொழுது போயிடுச்சு. இந்த ஊரடங்கை அப்படிக் கடக்க விரும்பலை. போன வருஷம் முழுக்கவே பொருளாதாரம் முடங்கித்தான் கிடந்தது. இந்தச் சூழல்ல மக்களின் கஷ்டத்துல பங்கெடுத்துக்கிடலைன்னா எப்படி?’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘மெட்டி ஒலி’ சீரியல் தற்போதும் மீள் ஒளிபரப்பு செய்துவருகிற சூழலில், அதில் நடித்த விஷ்வா என்ன செய்கிறார் என விசாரித்தால், ‘நல்லபடியா ஒரு பிசினஸ்ல இருக்கேன்; டிவி, சீரியல்ங்கிற டாபிக் பத்தியே நான் இப்ப ஒரு வார்த்தைகூடப் பேச விரும்பலை’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சோஷியல் மீடியா மூலம் தொடர்ந்து தன்னிடம் ஆபாசமாகப் பேசிவந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர் குறித்துப் பொதுவெளியில் தைரியமாகப் பேசியிருக்கிறார் ‘சூப்பர் சிங்கர்’ சௌந்தர்யா. ‘‘இப்பக் கூட ‘அந்தாளு அப்படிப் பேச நீங்களும்தான் காரணம்’னு நாலு பேர் சொல்றப்பதான் கோபம் தலைக்கேறுது; என் எதிர்ல அப்படிச் சொன்னா, மறுபடியும் பேச அவங்களுக்கு வாயே இருக்காது’’ எனக் கண் சிவக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் எதிரொலிக்கும்போல் தெரிகிறது. தலைவர்மீது `ஏற்கெனவே ஆண்ட கட்சியைச் சேர்ந்தவர்’ என்கிற முத்திரை இருந்ததென்கிறார்கள். ஆனால், ‘அப்படியெல்லாம் இல்லைங்க, சில மாதங்களுக்கு முன்னாடி அவரைப் பதவியில இருந்து இறக்க நினைச்சவரும் அதே கட்சியிலதானே இருந்தார்’ என்கிற சிலரோ, சென்ற லாக்டௌனில் உதயநிதி ஸ்டாலின் சங்கத்துக்கு உதவியதைச் சுட்டிக்காட்டி, `இங்க அரசியல் எதுவுமில்லை’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`சோனி பிபிசி எர்த்’ சேனலில் புதிய ரியாலிட்டி ஷோ `லைஃப் ஆஃப் தி லீஷ்’ மே கடைசி வாரத்திலிருந்து ஒளிபரப்பாகவுள்ளது. வேறொன்றுமில்லை, மும்பையின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர்களான தன்வீர் தாஜ் மற்றும் பிரியங்கா ஜீனா இருவரும் தங்களுடைய செல்ல நாய்களுடன் இமாசலப்பிரதேசம் தொடங்கி, கேரளா, புதுச்சேரி வரை சுமார் 20 மாநிலங்கள் வழியே 12,500 கி.மீட்டர் தூரம் காடு, மலைகளைக் கடக்கும் நான்கு மாத சாகசப் பயணம்தான் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `உலகை ரசிக்கக் கிளம்புகிற பயணங்களில் நம் செல்லப் பிராணிகளையும் தவற விடக் கூடாது’ என்பதை வலியுறுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கமாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

என்ன விந்தையோ, `பெரிய முதலாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை ஒரேமாதிரியான புகாரே சுற்றி வருகிறது. ‘சமூக வலைதளத்தில் சில பெண்களுடன் வம்பு வளர்த்தார்’ எனச் சில தினங்களுக்கு முன் ஒருவர் பற்றி வந்த சர்ச்சை அடங்கும் முன் கொரோனாத் தாக்குதலுக்கு ஆளானவர் குறித்தும் அதே புகார் கிளம்பியுள்ளது. இவர் விஷயத்தில் விவகாரம் வீடு வரைக்கும் தெரிந்து விட்டதாம். ‘யார் அந்தப் பொண்ணு’ என பரேடு எடுத்துவிட்டாராம் அவர் மனைவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு