ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

சொந்த ஊரு மதுரை. சின்ன வயசிலேயே பட்டுக்கோட்டையில செட்டிலாயிட்டோம். நடிப்பு மேல பயங்கர ஆர்வம். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருந்தேன்

தெரியாதுன்னு சொல்ல வெட்கப்படவே மாட்டேன்! - ‘பாவம் கணேசன்’ ப்ரியங்கா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘கங்கா’ சீரியல் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் பிரியங்கா. ‘காற்றின் மொழி’, ‘சுந்தரி நீயும்... சுந்தரன் நானும்’, ‘பாவம் கணேசன்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள பிரியங்காவுடன் பேசினோம்.

எப்படி ஆரம்பிச்சுது உங்க மீடியா பயணம்?

சொந்த ஊரு மதுரை. சின்ன வயசிலேயே பட்டுக்கோட்டையில செட்டிலாயிட்டோம். நடிப்பு மேல பயங்கர ஆர்வம். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருந்தேன். என் ஃபிரெண்ட் கொடுத்த ஊக்கத்தால் சீரியல் ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஒரே நேரத்துல சீரியல் வாய்ப்பும் பேங்க் வேலையும் கிடைச்சுது. பேங்க் வேலையை வேணாம்னு சொல்லிட்டு நடிப்பை செலக்ட் பண்ணேன். ஆரம்பத்துல அப்பா, அம்மாவை சம்மதிக்க வைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனா, அப்புறம் அவங்க என் ஆசையைப் புரிஞ்சுகிட்டு ஓகே சொல்லிட்டாங்க.

எப்போ பார்த்தாலும் ஒரே போட்டோஷூட்டா இருக்கே... என்ன விஷயம்?

சென்னை வாழ்க்கையில நிறைய பிரச்னைகளைக் கடந்து வந்திருக்கேன். நான் பார்த்த ஒவ்வொரு மனிதரும் எனக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துருக்காங்க. நடிப்பு தொடங்கி, சாப்பாடு, டிரஸ்ஸிங்னு எல்லாத்தையும் சீனியர்கள்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். போட்டோ ஷூட்டும் அப்படித்தான். உண்மையைச் சொல்லணும்னா நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நான் போர்ட்ஃபோலியோ ஷூட் பண்ணதே இல்ல. எனக்கு அது புது அனுபவமா இருக்கு. எனக்கு ஒரு விஷயம் தெரியாதுனு சொல்றதுக்கு நான் வெட்கப்படவே மாட்டேன். தெரியாதுன்னு ஏத்துக்கிறதுதான் அடுத்தகட்ட தேடலுக்கான ஆரம்பமா இருக்கும்னு நம்புறேன்.

சேனல் சைட் டிஷ்

ஊர்லேருந்து வந்து நடிப்பையோ, மாடலிங்கையோ கரியரா தேர்ந்தெடுக்குற பெண்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

யாரையும் உடனே நம்பாதீங்க. எல்லா இடத்திலேயும் உங்களோட பாதுகாப்பை உறுதி செய்துக்கோங்க. சின்ன வாய்ப்பா இருந்தாலும் அதைத் தவிர்க்காமப் பயன்படுத்திக்கோங்க. பொறுமை அவசியம். யார் உங்களை கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்தினாலும் நம்பிக்கையை இழந்துடாதீங்க. தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருங்க. நிச்சயம் சாதிக்க முடியும்.

“நாங்க ரொம்ப நல்லவங்க...” சொல்றாங்க சீரியல் மாமியார்கள்

கதையே இல்லாமல்கூட சீரியல் எடுத்துவிட முடியும். ஆனால், மாமியார் கேரக்டர் இல்லாமல் ஒரு எபிசோடுகூட நகர்வதில்லை. சீரியஸ் மாமியார் முதல் சிரிக்க வைக்கும் மாமியார்வரை சீரியலுக்கு சீரியல் பின்னியெடுக்கும் சிலரிடம் பேசினோம்.
சேனல் சைட் டிஷ்

‘ராஜா ராணி’ பிரவீணா: எனக்குச் சத்தமா பேசுறது, யாரையாவது பகடி பண்றது, திட்டுறது... இதெல்லாம் பிடிக்காது. எங்க வீட்டுலயும் யாருமே அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. அதனாலேயே சீரியல்ல ஆல்யாவை திட்டுற சீன்ல எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். சீன் முடிஞ்சதும் உடனேயே ஓடிப்போய் அவளைக் கட்டிப்புடிச்சிப்பேன். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சேச்சி’ன்னு ஆல்யாவும் எதையும் மனசுல வெச்சுக்க மாட்டா. ஒருநாள், எதுக்குத்தான் இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்குறோமோன்னு ஃபீல் பண்ணி, இப்படியெல்லாம்கூடவா நிஜத்துல மாமியாருங்க இருக்காங்கன்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். செட்ல இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க. ‘என் மாமியார் இப்படித்தான்... அட என்னோட மாமியாரும் இப்படித் தான்’னு ஆளாளுக்கு அவங்கவங்க மாமியாரைப் பத்தி புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியெல்லாம் ஒரு மாமியார் இருக்க வாய்ப்பே இல்லன்னு நினைச்சிட்டிருந்த எனக்கு, ஒரு பட்டாளமே மாமியார் தொல்லையை பத்தி சொன்னது நிஜமாவே செம ஷாக்!

‘தமிழும் சரஸ்வதியும்’ மீரா கிருஷ்ணன்: நிஜ வாழ்க்கையில எனக்கு மாமியாரால பிரச்னையே வந்ததில்லை. அதனால ரியலான மாமியார் மருமக சண்டை எப்படி யிருக்கும்னே எனக்குத் தெரியாது. சொல்லப்போனா, அவங்க இருக்குற தாலதான் என்னால சீரியல்கள்ல நடிக்கவே முடியுது. அதுக்குன்னு மாமியார் கொடுமையெல்லாம் சினிமாக்கள்ல மட்டும்தான்னு சொல்லிட முடியாது. மாமியார்களை சமாளிக்குற கஷ்டத்தை பத்தி என் ஃபிரெண்ட்ஸ் நிறைய சொல்வாங்க.

இந்தக் காலத்து மருமகள்களும் சளைச்சவங்க கிடையாது. பவ்யமா அடங்கிப்போற மருமகள்களை சீரியல்ல மட்டும்தான் பார்க்க முடியும்... நிஜத்துல வாய்ப்பே இல்ல. மாமியார்கள் மருமகள்கள்கிட்ட பாசமாவும் இருக்கணும், அப்டேட்டடாவும் இருக்கணும். அப்பதான் வாழ்க்கை சுமுகமா போகும். இந்த டெக்னிக்கை கத்துக் கிட்ட நான் எதிர்காலத்துல அன்பான மாமியாராத்தான் இருப்பேன்.

சேனல் சைட் டிஷ்

‘தாலாட்டு’ தாரிணி: தாலாட்டு சீரியல்ல நெகட்டிவ் ரோல் பண்றேன். தயக்கத் தோடதான் நடிச்ச சம்மதிச்சேன். நெகட்டிவ் கேரக்டர் பண்றதுக்கு முன்னாடிவரைக்கும், என் மாமியார் வெளிய போகும்போது ‘உங்க மருமக சூப்பரா நடிச்சிருக் காங்க’ன்னு யாராவது பாராட்டினா, அத்தை ஆசையா வந்து என்கிட்ட சொல்லுவாங்க. இப்பல்லாம் நோ கமென்ட்ஸ். நான் நடிச்ச சீனை என் பொண்ணு பார்த்துட்டாள்னா நான் தொலைஞ்சேன். சீன் நல்லா இருந்தா நான் தப்பிச்சேன். இல்லைன்னா என்னை வச்சு வச்சுக் கலாய்ப்பா. சீரியல்ல டெரர் மாமியாரா வர்றதெல்லாம் தொழில்... நாங்க பண்றது நடிப்பு. அதை நிஜம்னு நம்பாதீங்க. நிஜ வாழ்க்கையில மாமியாரா இருந்தாலும் அம்மாவா இருங்க.

சேனல் சைட் டிஷ்

‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா: நிஜ வாழ்க்கையில நான் மாமியார் அவதாரம் எடுக்க இன்னும் பல வருஷங்கள் இருக்கு. அதுக்கான ஒத்திகையாதான் என்னோட நடிப்பைப் பார்க்கறேன். எல்லா வீடுகள்லயும் மாமியாருங்கதான் கொடுமைப்படுத்துவாங்கன்னு இல்லை. புருஷன் பிரச்னை பண்ணும்போது மாமியார் தன் மருமகள் பக்கம் நின்னா, அந்த சப்போர்ட் வேற லெவல்ல இருக்கும். எதுவா இருந்தாலும் மாமியார் பாத்துப்பாங்கன்னு அந்த மருமகளுக்கு நம்பிக்கை கிடைக்கும். இந்த ஜெனரேஷன் அம்மாக்கள் சென்சிட்டிவ்வா, மெச்சூர்டா இருக்காங்க. அந்த குணங் களை அவங்க மாமியார் ஆன பிறகும் கடைப்பிடிச்சா பிரச்னையே இருக்காது. உண்மையான அன்பை மட்டுமே கொடுத்தா ஒருநாள் அதே அன்பு நம்மகிட்ட திரும்ப வந்து சேரும். இது மாமியார்களுக்கும் பொருந்தும்.