சினிமா
பேட்டிகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

‘செம்பருத்தி’ சீரியலில் தன்னுடைய கேரக்டரின் போக்கு பிடிக்கவில்லையென சீரியல் யூனிட்டில் சொல்லிவந்தாராம் நடிகை ராணி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமா வாய்ப்புகள் வந்ததும் சீரியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு பெரிய திரைப் பக்கம் போன ‘மைனா’ சூசனை இப்போதும் சீரியலுக்கு அழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்களாம். ‘‘நீங்க ஓ.கே-ன்னா நிச்சயம் உங்களுடைய நெகட்டிவ் கேரக்டருக்காகவே அந்த சீரியல் பேசப்படும்’’ என அவரிடம் அணுகினார்களாம் சிலர். எனவே சூசன் மீண்டும் சீரியல் பக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமிழ்த் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. தலைவராக பிரபுதாசன், துணைத் தலைவராக மோகன் ராஜ், சன் டிவியில் முன்பு செய்தி வாசித்த ஜெய உள்ளிட்ட பலர் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘‘டிவி வந்த காலத்துல இருந்தே செய்தி வாசிக்கிறவங்களும் இருக்கோம். ஆனா, போட்டி பொறாமை இல்லாம எங்களுக்குன்னு ஒரே சங்கமா செயல்பட்டு வர்றோம்கிறதே பெரிய செய்திதானே’’ என்கிறார்கள் இவர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி’ சீரியலில் தன்னுடைய கேரக்டரின் போக்கு பிடிக்கவில்லையென சீரியல் யூனிட்டில் சொல்லிவந்தாராம் நடிகை ராணி. ஆனாலும் தொடர்ந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் அவரது கேரக்டர் பயணிக்கவே, சீரியலிலிருந்து வெளியேறிக்கொள்வதாகச் சொல்லிவிட்டாராம். ‘‘ஸ்கிரிப்ட் சரி செஞ்சா பண்ணுறேன்’னு சொன்னேன்; அவங்க அதைச் செய்யாததால் வேற வழி தெரியல’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

டிவி ஏரியாவில் இப்போது கார் வாங்கும் சீசன் போல. புகழ், சரத், ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, ஷிவானி, ஜாக்குலின் என சமீபத்தில் புதுக் கார் வாங்கிய சின்னத்திரைப் பிரபலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கொஞ்சம் வித்தியாசமாக நடிகை ரச்சிதாவோ தனக்கு புல்லட் ஓட்டுவது ரொம்பவே பிடிக்கும் என, புதிய புல்லட் வாங்கியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மோனிகா, நீலிமா ராணி இருவருமே தத்தம் கணவரையும் டிவி ஏரியாவுக்குள் கூட்டி வந்து விட்டார்கள். மோனிகாவின் கணவர் ஜீ தமிழ் சேனலில் ‘டாக் ஷோ’வைத் தயாரிக்க, நீலிமா ராணியின் கணவரோ சீரியல் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த வரிசையில் ‘மைனா’ நந்தினி உள்ளிட்ட மேலும் சில டிவி நடிகைகளும் தங்களது கணவன்மார்களை டிவி பக்கம் கூட்டி வரும் ஐடியாவில் இருக்கிறார்களாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சினிமா ஹீரோவின் உறவினருடைய சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீரியல் ஒன்று பண்ணினாராம் தெலுங்கு தேசத்திலிருந்து வந்த அந்த நடிகை. அப்போது மேற்படி நடிகரின் மைத்துனருக்கும் நடிகைக்கும் இடையே நட்பு உருவானதாம். தற்போது நடிகைக்கும் அந்த மைத்துனருக்குமிடையே திருமணம் நடந்துவிட்டது என்கிறார்கள் சிலர். சிலரோ ‘இல்லை, அவர்கள் லிவ் இன் ரிலேஷனில் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.