Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா

சினிமாவுக்கு வந்த பிறகு அவர் நடிக்கிற படத்துல அதுவும் அவருடைய மருமகளா நடிக்கவும் எனக்கு வாய்ப்பு அமைஞ்சது

விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமாவுக்கு வந்த பிறகு அவர் நடிக்கிற படத்துல அதுவும் அவருடைய மருமகளா நடிக்கவும் எனக்கு வாய்ப்பு அமைஞ்சது

Published:Updated:
இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா

பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இளையராஜா பங்கேற்கவிருக்கும் இசை நிகழ்ச்சி. இளையராஜா டி.வி பக்கம் வருவது ஒரு ஆச்சரியமென்றால், அவரைக் கூட்டி வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை மிரட்சியுடன் பார்க்கிறது மொத்த டி.வி ஏரியாவும். விளையாட்டாக இளைஞர்கள் சிலர் சேர்ந்து யூடியூப் சேனலாகக் தொடங்கி, இன்று முன்னணி சேனலில் நிகழ்ச்சி தயாரிக்குமளவுக்கு வளர்ந்திருக்கும் ‘பிளாக் ஷீப்’புக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அன்வர் - சமீரா ஜோடி. கோவிட் தொடங்கியதுமே தமிழில் சீரியல்கள் தயாரிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, சொந்த ஊரான ஹைதராபாத் சென்றார்கள். இப்போது மகன் பிறந்த நேரம் சில இந்தி புராஜெக்டுகளுக்குப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறதாம். தமிழில் வருங்காலத்தில் படத்தயாரிப்பில் ஈடுபடும் எண்ணமும் இருப்பதாகச் சொல்கிறார் அன்வர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கிய லட்சுமி’ ‘தேன் மொழி பி.ஏ.’ என சீரியல்களில் பிசியாக இருக்கும் கம்பம் மீனா, தன்னுடைய சீரியல் டு சினிமாப் பயணத்தில் மறக்க முடியாத நபராக இயக்குநர் பாரதி ராஜாவைக் குறிப்பிடுகிறார். “முதன் முதலா நடிகையா அவருடைய சீரியல்ல என்னை அறிமுகப்படுத்தினார். அங்க இருந்தே என் வாழ்க்கை மாறுச்சு. சினிமாவுக்கு வந்த பிறகு அவர் நடிக்கிற படத்துல அதுவும் அவருடைய மருமகளா நடிக்கவும் எனக்கு வாய்ப்பு அமைஞ்சது. இதைவிட எனக்கு வேறென்ன வேணும்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

தாங்கள் நடிக்கிற ஷூட்டிங் ஸ்பாட். டப்பிங் ஏரியாக்களையே கவர் செய்து தங்களுடைய யூ டியூப் சேனல்களில் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள் பல நட்சத்திரங்கள். இந்த வேலையில் இப்போது சுஜிதா, ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி ஆகியோர் தான் முன்னிலையில் இருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆனந்தி முதன்முதலில் முகம் காட்டியது விஜய் டி.வி-யில்தான். ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல், சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர், சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து தற்காலிகமாக டி.வி-க்கு பிரேக் விட்டார். தொடர்ந்து மகன் வருகைக்குப் பிறகு சேனல் மாறி ஜீ தமிழ் பக்கம் போனார். இப்போது மறுபடியும் விஜய் டிவி சீரியலான ‘ராஜ பார்வை’யில் கமிட் ஆகியிருக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க:

விலையுயர்ந்த கார் வாங்கிய அந்த நடிகர், தகவலை ஊருக்குத் தெரிவித்தாலும் தெரிவித்தார், அந்த நிமிடம் தொடங்கி வசைபாடத் தொடங்கிவிட்டாராம் அவரின் மனைவி. கணவன் மனைவி இடையிலான பிரச்னை ஊரறிந்ததே. `பிள்ளைக்கு மாதா மாதம் கோர்ட் தரச் சொன்ன பணத்தைத் தந்தபாடில்லை, கார் வாங்க மட்டும் எங்கிருந்து காசு வருதாம்' எனக் குமுறுகிறவர், தன் வக்கீலிடம் `இதை நோட் பண்ணிக்குங்க' எனச் சொல்லியிருக்கிறாராம்.