Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

குறைப்பிரசவம்ங்கிறதால குழந்தைக்கு தாய்ப்பால் குடிக்கத் தெரியாது. தாய்ப்பாலை பம்ப் பண்ணி சிரின்ஜ்ல ஏத்தி ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும்

சேனல் சைட் டிஷ்

குறைப்பிரசவம்ங்கிறதால குழந்தைக்கு தாய்ப்பால் குடிக்கத் தெரியாது. தாய்ப்பாலை பம்ப் பண்ணி சிரின்ஜ்ல ஏத்தி ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும்

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

தாய்மைக்கு எல்லாத்தையும் தாங்கும் சக்தி இருக்கு! - கிருத்திகா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிப்பவர் கிருத்திகா. மாடலிங், ரியாலிட்டி ஷோக்கள், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்சர் என பிஸியாக இருக்கும் கிருத்திகாவிடம் பேசினோம்...

ஹெச்.ஆர் வேலையிலேருந்து ஆக்டிங்... எப்படி நடந்தது இந்த மாற்றம்?

சின்ன வயசுல இருந்தே நடிப்பு பிடிக்கும். படிச்சு முடிச்சிட்டு ஹெச்.ஆரா வேலை பார்த்திட்டிருந்தேன். அது மீடியா சம்பந்தப்பட்ட கம்பெனி. அதனால் நடிப்பு ஆசை இன்னும் அதிகமாயிருச்சு. பல போராட்டங்களுக்குப் பிறகு, கஷ்டப்பட்டு குடும்பத்தை சம்மதிக்க வெச்சு சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தேன். இப்ப எல்லாரும் என்னை கொண்டாடுறாங்க.

கிருத்திகா
கிருத்திகா

உங்களுடைய பிரசவம் ரொம்ப சிக்கலா இருந்ததாமே...

ஆமாம்.... கர்ப்பத்தின் ஏழாவது மாசத்துல டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துட்டு, குழந்தை ஆபத்தான நிலையில இருக்கு... உடனே சிசேரியன் பண்ணணும்னு சொல்லிட் டாங்க . அடுத்த ரெண்டு மணி நேரம், என்ன நடக்குதுனு யோசிக்குறதுக்கு முன்னாடி எனக்கு சிசேரியன் நடந்து முடிஞ்சுருச்சு. ஒரு நாள் கழிச்சுதான் குழந்தையைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. குழந்தையைப் பார்த்த போது ஷாக் ஆயிட்டேன். 750 கிராம்ல இருந்த குழந்தையை எப்படிக் காப்பாத்தப் போறோம்னு பயமா இருந்துச்சு. வேண்டாத சாமி இல்ல.

குறைப்பிரசவம்ங்கிறதால குழந்தைக்கு தாய்ப்பால் குடிக்கத் தெரியாது. தாய்ப்பாலை பம்ப் பண்ணி சிரின்ஜ்ல ஏத்தி ஒவ்வொரு டிராப்பா கொடுக்கணும். 15 மில்லி லிட்டர் பால் குடிக்கவே 2 மணி நேரம் ஆகும். என்னுடைய 24 மணி நேரத்தையும் குழந்தைக்காகவே செலவு பண்ணேன். குழந்தைக்கு கதகதப்பைக் கொடுக்க கங்காரு மாதிரி, குழந்தையை நெஞ்சுக்கு மேலேயே படுக்க வெச்சிருக்கணும். சளி, காய்ச்சல்னு எதுவும் வராம பார்த்துக்கணும்னு கா பிறந்த முதல் மூணு வருஷத்துக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய ஸ்ட்ரெஸ் இருந்துச்சு. ஆனா, தாய்மைக்கு எல்லாத்தையும் தாங்கும் சக்தியும் பொறுமையும் இருக்கு. ஒவ்வொரு நாளும் எல்லாம் மாறிரும்னு நம்பிக்கையோட இருந்தேன். அந்த நம்பிக்கைதான் காவை காப்பாத்துச்சு. இப்போ கா என் விரல் பிடிச்சு நடக்கும் ஒவ்வொரு நிமிஷமும், ஏதோ தேவதை கூட வாழற மாதிரி இருக்கு.

செமயா வெயிட்டை குறைச்சிருக்கீங்க... என்ன பண்ணீங்க?

குழந்தை பிறந்த பிறகு 99 கிலோ எடைக்கு வந்துட்டேன். ‘குழந்தைக்குக் கொடுக்க வேண்டியதையும் சேர்த்து நீயே சாப்பிடுவியா’னு நிறைய பேர் கிண்டல் பண்ணிருக் காங்க. கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது எனக்கே என்மேல கோபம் வர ஆரம்பிச்சது. எப்படியாவது எடையைக் குறைக்கணும்னு டயட்டீஷியனை பார்த்தேன். அவங்க சொன்னபடி ஆறு மாசம் எந்தத் திட உணவுகளும் எடுத்துக்காம வெறும் லிக்யுட் டயட்தான் எடுத்துக்கிட்டேன். சர்க்கரை, அரிசினு வெள்ளை நிற உணவுகள் எல்லாத்தையும் தவிர்த் துட்டேன். தினம் 3 மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி பண்ணேன். ஆறு மாசத்துல 37 கிலோ குறைச்சேன். உடல் எடையைக் குறைக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு நான் சொல்ற ஒரே டிப்ஸ், பொறுமையோட மருத்துவர்கள் சொல்றதைக் கடைப்பிடிங்கன்றது மட்டும்தான்.

போட்டோ ஷூட், சீரியல், ஃபேமிலி... எல்லாத்தையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க?

வொர்க்-லைஃப் பேலன்ஸ் எல்லாப் பெண்களும் சந்திக்கிற சவால்தான். எனக்கு இருக்கும் எந்தக் கஷ்டத்தையும் குழந்தைகிட்ட காட்டிக்க மாட்டேன். அவகூட இருக்கும்போது எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பேன். ஷூட்டிங் இல்லாத நாள்ல அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் செய்வேன். ஷாப்பிங், லாங் டிரைவ்னு ரொம்ப ஜாலியா இருப்போம். ஹேப்பி லைஃப்க்கு பிளானிங் ரொம்ப முக்கியம். எல்லாத்தையும் தாண்டி என்னை தாங்கிப்பிடிக்க என் குடும்பம் கூடவே இருக்கு.

****

சேனல் சைட் டிஷ்

அம்மான்னா சும்மா இல்லீங்க... சீரியல் அம்மாக்களின் பேரன்ட்டிங் ஸ்டைல்

பாசக்கார அம்மா முதல் படு ஸ்ட்ரிக்ட்டான மம்மிவரை சீரியலுக்கு சீரியல் விதம் விதமான அம்மாக்களைப் பார்க்கிறோம். ரியல்லைஃப்ல நீங்க எப்படி... உங்க பேரன்ட்டிங் ஸ்டைல் எப்படிப்பட்டது..? சீரியல் அம்மாக்கள் சிலரிடம் பேசினோம்...

சேனல் சைட் டிஷ்

நித்யா தாஸ்: பொண்ணும் பையனும் என் செல்லம்தான். ஸ்கூல் இருக்கோ, இல்லையோ... ஆறு மணிக்கு எழுந்தாகணும்னு ஒத்த கால்ல நிக்குற அளவுக்கு அவங்கப்பா செம ஸ்ட்ரிக்ட். என் பொண்ணு எப்பவாச்சும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பண்ணுவா. அதுக்கான வயசு இது இல்லைன்னு அவங்கப்பா திட்டுவாரு. நான்தான் பஞ்சாயத்தைத் தீர்த்துவைப்பேன். யாராச்சும் ஒருத்தராவது கண்டிப்பா இருக்கணும்னு சண்டை நடக்குறப்போ தலையிட மாட்டேன். என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட், சீக்ரெட் கீப்பர் எல்லாமே என் பொண்ணுதான். எனக்கு பரதநாட்டியம் பிடிக்கும். என்னால கத்துக்க முடியலைன்னு என் மகளாவது பரதநாட்டியம் கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவளுக்குப் பிடிக்கலைன்னதும் விட்டுட்டேன். குழந்தைங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணவிட்டுட்டு, அவங்க சிக்கல்களைக் கவனிச்சு சரியான நேரத்துல கைடு பண்றதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியான பேரன்டிங்.

சேனல் சைட் டிஷ்

வனஜா: என் மூத்த பொண்ணு பயங்கர அமைதி. ஷூட்டிங் முடிஞ்சு டயர்டா வந்தா எனக்காக ஸ்பெஷலா சாப்புடுறதுக்கு ஏதாவது ரெடி பண்ணி வச்சிருப்பா. என் பையன் அப்படியே நேரெதிர். `நான் சொல்றத நீ கேக்கணும்... இல்லைன்னா தூக்கி அடுச்சிருவேன் பாத்துக்க’ன்ற ரேஞ்சுல நடந்துப்பான். எல்.கே.ஜிதானே படிக்குறான்னு அவனை கொஞ்சம் ஃப்ரீயா விட்டு வச்சிருக்கோம். நாங்கல்லாம் குழந்தைங்களா இருந்தப்போ குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுவோம், பேசுவோம். யார்கிட்ட எப்படி நடந்துக்கணும், எப்படிப் பேசணும்ங்குறதுல இருந்து எல்லாத்தையுமே அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எல்லாரும் சொல்லித்தருவாங்க. இந்தக் காலத்துக் குழந்தைக அதையெல்லாம் ஆச்சர்யமா பார்க்குறாங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சாகூட நான் குழந்தைங்ககூட இருக்கணும்னு நினைப்பேன். வெறும் கொண்டையை மட்டும் போட்டுக்கிட்டு குழந்தைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வருவேன். என்ன இவங்க ஆர்ட்டிஸ்ட் மாதிரியே இல்லையேன்னு கமென்ட் அடிச்சிருக்காங்க. குழந்தை வளர்ப்பு எல்லாருக்கும் ஒண்ணுதாங்க.

சேனல் சைட் டிஷ்

காயத்ரி ப்ரியா: ‘ நாளைக்கு ஆன்லைன் எக்ஸாம் இருக்கே... உனக்கு ஷூட்டிங் இல்லைன்னு தானே சொன்னே.. இப்போ திடீர்னு ஷூட்டிங் இருக்குன்னு சொல்றியேம்மா’ன்னு என் பசங்க பாவமா கேட்பாங்க. இப்படி ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்னு ஷூட்டிங்கையும் குடும்ப வாழ்க்கையையும் சமாளிக்குறேன். பொண்ணு சும்மா இருந்தாலும் அவளை சீண்டி வம்புக்கு இழுப்பான் என் மகன். பதிலுக்கு ‘உன்ன எங்கிருந்தோ அம்மா அப்பா தூக்கிட்டு வந்துட்டாங்க’ன்னு அவனை வெறுப்பேத்துவா அவ. அவன் அழ ஆரம்பிச்சிடுவான். கொஞ்ச நேரத்துக்கு ரணகளமாயிடும் எங்க வீடு. எப்பவுமே சவாலான விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேரன்ட்டிங் சவால்கள் மட்டும் பிடிக்காமப் போயிடுமா என்ன?

சேனல் சைட் டிஷ்

சாந்தி: என் ரெண்டு பிள்ளைங்களுக்கும் என் மேல பாசம் அதிகம். சீரியல்ல நான் நெகட்டிவ்வா நடிச்சாலும், ‘நல்லா இருக்கீங்க மம்மி... அழகா இருக்கீங்க மம்மி’ன்னு... பாராட்டிக்கிட்டே இருப்பா என் பொண்ணு. கொரோனா உச்சத்துல இருந்தபோது, உயிர் பயத்தையும் மீறி, குழந்தைங்களை டியூஷனுக்கு அனுப்பின பேரன்ட்ஸ் பலரை பார்த்தேன். ஆனா, நான் ஒருவருஷம் போனா போகட்டும். எதுவானாலும் அப்புறம் பாத்துக்கலாம்னு குழந்தைங்களை பிரஷர் இல்லாம விட்டுட்டேன். படிப்பு, ஸ்ட்ரெஸ்னு எல்லாத்தையும் தூரமா வச்சிட்டு லாக்டௌனை என்ஜாய் பண்ணினோம். சின்ன வயசுல குழந்தைங்ககூட எந்த அளவுக்கு நெருக்கமா இருக்கோமோ... அதுதான் டீன் ஏஜ்ல நல்ல உறவை உருவாக்கும்.