சினிமா
பேட்டிகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

அக்‌ஷிதா
பிரீமியம் ஸ்டோரி
News
அக்‌ஷிதா

பிரபல இரண்டெழுத்துக் குழந்தைகள் சேனல், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சூர்யா ஜோதிகாவை அணுகியதாகச் சொல்கிறார்கள்

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘அன்பே வா’ அக்‌ஷிதாவை அடுத்த ஷிவானி என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தில். மாலை மணி 4 ஆனால் சமூக வலைதளத்தில் போட்டோக்களாகப் போட்டு ஷிவானி பிரபலமானதைப் போலவே இவர் ரீல்ஸ் போட்டு வருகிறார். தன் அண்ணன் அவினாஷின் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்து சீரியல் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர் இவர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மீண்டும் சினிமாப் பக்கம் வந்திருக்கிறார் பிரஜின். ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற இவரது அடுத்த படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டி.வி-யில் அறிமுகமாகிப் பிரபலமானபோதும், சினிமாவுக்காகப் பல வருடங்கள் டி.வி-யை விட்டு ஒதுங்கி யிருந்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் சீரியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் சினிமா என்ட்ரி!

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிரபல இரண்டெழுத்துக் குழந்தைகள் சேனல், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சூர்யா ஜோதிகாவை அணுகியதாகச் சொல்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்தோ அல்லது ஜோதிகா மட்டுமாவது வந்தாலோ தேவலை என நினைத்தார்களாம். அந்த முயற்சி என்னவானது எனத் தெரியவில்லை. தற்போது நடிகை மீனாவிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்களாம்.

ரங்கராஜ் பாண்டே தான் எழுதியிருக்கும் புத்தகத்துக்கு வைத்திருக்கும் பெயர் ‘கருப்பு சிவப்பு காவி.’ காவியில் வரும் ‘வி’யை `லி’ என்று வாசிக்கக் கூடிய அளவில் லே அவுட் செய்யப்பட்டுள்ளது அவரது இந்துத்துவ அரசியல் சார்பைக் காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அவற்றின் ருசிக்கு சர்ட்டிபிகேட்(?) தந்துவந்த யூ டியூப் பிரபலம் இர்பானைத் திட்டித் தீர்க்கிறார்கள் நெட்டிசன்கள். சமீபத்தில் இவர் நல்ல உணவு என சர்ட்டிபிகேட் தந்த பிரியாணிக்கடை ஒன்று தரமற்றது என உணவுத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதுதான் காரணம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

காமெடி நடிகரின் மனைவி பெரிய வீட்டுக்குள் போக ஆசைப்படுவதாக சேனலிடம் வாய்விட்டே கேட்டிருக்கிறார். ஆனால், ‘உங்க மகள்தான் வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்துட்டாரே, அப்புறமென்ன’ எனக் கேட்டு ‘நோ’ சொல்லி விட்டதாம். ‘தீவு’க்குப் போன மகளும் பத்து நாளில் திரும்பிவிட, ‘அவ அங்க போகாம இருந்தி ருந்தாலாவது எனக்கு இங்க வாய்ப்பு கிடைச்சிருக்கும்’ என அங்கலாய்க்கிறார் அம்மா.