சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

யாரடி நீ மோகினி டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
யாரடி நீ மோகினி டீம்

கொரோனா ஊரடங்கின் போது காதல் திருமணம் செய்துகொண்ட கிரிஜாஸ்ரீ வீட்டில் விசேஷம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரைத் தம்பதியான ஷியாம் கணேஷ்-சிந்து ஜோடி கடந்த வாரம் தங்கள் திருமண நாளைக் கொண்டாடினார்கள், அன்றைய தினம், சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றவர்கள், அங்கிருக்கும் முதியோருக்கு அன்றைய தினத்துக்கான மூன்று வேளை உணவையும் வழங்கிவிட்டு வந்தார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலின் கடைசி நாள் ஷூட் ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் நடந்தது. சைத்ரா ரெட்டி, நட்சத்திரா, நடிகர் ஸ்ரீ, பரத், பவித்ரன் உள்ளிட்ட எல்லா ஆர்ட்டிஸ்டுகளும் அன்றைய தினம் கலந்துகொள்ள, மதியத்துக்கு மேல் ஸ்பாட்டில் ரியல் அழுகைக் காட்சிகள்தானாம். ‘சீரியல் முடிஞ்சுட்டாலும் எங்க இந்த டீம் பிரிய மாட்டோம். வாட்ஸ் அப் குரூப் தொடங்கி ரீ யூனியன்லாம் வைக்கலாம்னு இருக்கோம்’ என்றபடி கலைந்து சென்றிருக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கொரோனா ஊரடங்கின் போது காதல் திருமணம் செய்துகொண்ட கிரிஜாஸ்ரீ வீட்டில் விசேஷம். ‘சினிமாவோ டிவியோ, இனிமே பாப்பா வந்தபிறகுதான்’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஹீரோயின், அவருடைய அக்கா தங்கை இருவர், உடன் நடித்த‌ காமெடி நடிகை, வில்லி என ஒரே சமயத்தில் ஐந்து பேர் கர்ப்பமடைந்துவிட்டதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் ‘ஈரமான ரோஜாவே' சீரியலை முடித்து வைத்துவிட்டார்கள். ‘‘முடிக்கணும்னு நினைச்சுட்டா, சீரியல்ல இதெல்லாம் சகஜம் பாஸ்’' என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் தற்போது மூன்று நட்சத்திராக்கள் இருக்கின்றனர். ‘யாரடி நீ மோகினி’, `என்றென்றும் புன்னகை’, `தமிழும் சரஸ்வதியும்.’ இந்த மூன்று சீரியல்களின் ஹீரோயின்கள்தான் அவர்கள். இப்போதைக்கு அப்பா பெயரைப் பின்னால் சேர்த்து அழைத்து வந்தாலும், இவர்களில் சிலருக்கு இந்தப் பெயர்க் குழப்பம் பெரிய பிரச்னையாக இருக்கிறதாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

‘புடிச்சாலும் புளியங் கொம்பாப் புடிச்சிட்டாங்க’ என, சமீபத்தில் கல்யாணமான நடிகை குறித்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் சின்னத்திரை ஏரியாவில். அதேநேரம், அரேஞ்சுடு மேரேஜாக இருந்தும், என்ன காரணமோ தெரியவில்லை, கல்யாணத்தில் மாப்பிள்ளையின் ரத்த சொந்தங்கள் யாரையுமே காணவில்லையாம்.