தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ் ( Instagram )

நான் டெய்லரோட மகளா அவங்க பிசினஸை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போகும் கேரக்டர்ல நடிக்கிறேன். ரொம்ப ஹேப்பியா இருக்கு.

சீக்கிரமே கல்யாண தேதி சொல்றேன்! - ‘அபி டெய்லர்’ ரேஷ்மா

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘அபி டெய்லர்’. அபி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மாவுக்கு தமிழில் இது இரண்டாவது சீரியல். க்யூட்டான நடிப்பால் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள ரேஷ்மாவுக்கு விரைவில் டும், டும், டும்...

“சொந்த ஊரு கேரளா, சென்னையிலதான் காலேஜ் படிச்சேன். ஃபேஷன்ல இருந்த ஆர்வம் காரணமா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சில சீரியல், சினிமா ஆடிஷன்களுக்கும் போயிருக்கேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கல. திரும்ப எம்.பி.ஏ படிக்கலாம்னு நினைச்சப்போ, ஜீ தமிழ்ல `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ வாய்ப்பு வந்துச்சு. அப்புறம் `பூவே பூச்சூடவா’ சீரியல்ல கமிட் ஆனேன். இப்போ ‘அபி டெய்லர்’ சீரியல்ல நடிக்கிறேன்” என ஷார்ட் பயோ சொல்கிறார் ரேஷ்மா.

சேனல் சைட் டிஷ்

மாடலிங் டு சீரியல் அனுபவம் எப்படியிருக்கு..?

சீரியல் என்ட்ரி நானே எதிர்பார்க்காததுதான். நான் ரொம்ப அமைதியான பொண்ணு, தேவையான இடத்துல மட்டும்தான் பேசுவேன். சீரியல்ல என் கேரக்டர்கூட கிட்டத்தட்ட அப்படித்தான். இன்னொரு முக்கியமான விஷயம்... நிஜத்துல என் அம்மா ஒரு டெய்லர். சீரியல்லயும்

நான் டெய்லரோட மகளா அவங்க பிசினஸை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போகும் கேரக்டர்ல நடிக்கிறேன். ரொம்ப ஹேப்பியா இருக்கு.

நியூ இயர் அன்னிக்கு உங்க காதலை இன்ஸ்டாகிராம்ல சொல்லியிருந்தீங்க... கல்யாணம் எப்போ?

சீரியல்ல என் கூட நடிச்ச மதனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஆரம்பத்துல நண்பர்களா இருந்தோம். ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்ட பிறகு, இந்த உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக நினைச்சோம்.

ரெண்டு வீட்டிலும் சம்மதம் வாங்கியாச்சு. இப்போ அபி டெய்லர் சீரியல்ல ஜோடியா நடிக்கிறோம். கல்யாண தேதியை சீக்கிரமே சொல்றோம்.

சோஷியல் மீடியாவுல உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நிறைய போட்டோஸ் அப்லோடு பண்றீங்க... அந்த கேர்ள்ஸ் கேங் பத்தி சொல்லுங்க?

சபானா, சைத்தன்யா, நக்‌ஷத்ரா, ஸ்ரீநிதி நாங்களெல்லாம் வேற வேற சீரியல்கள் பண்ணாலும், ஒரே கேங். ஒண்ணா சேர்ந்தா அந்த இடமே கலகலனு இருக்கும். எங்களுக் குள்ள எந்த ஒளிவு மறைவும் கிடையாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீட் பண்றோம்.

சேனல் சைட் டிஷ்

சீரியல்ல டெய்லரா நடிக்கிறீங்க... நிஜத்துல உங்க டிரஸ்ஸை யார் டிசைன் பண்றாங்க?

அம்மா டெய்லராச்சே... அதனால எனக்கும் தையல்ல அடிப்படையான விஷயங்கள் தெரியும். சீரியலுக்காக டெய்லரிங்ல இன்னும் அதிகமான விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சு கிட்டேன். என்னோட காஸ்டியூம் டிசைனர் என் அம்மாதான். ஃபேஷன்ல அவங்க பயங்கர அப் டேட்டடா இருப்பாங்க. சீரியல்ல என் பிளவுஸ் எல்லாம் வித்தியாசமா இருக்குன்னு நிறைய பேர் சொல்லி ருக்காங்க. அதையெல்லாம் பார்த்துப் பார்த்து டிசைன் பண்றது அம்மாதான்.

ரியல் கப்புள் - ரீல் கப்புளா நடிக்கிறது எப்படி இருக்கு?

சீரியல்ல மதன் பணக்கார வீட்டுப் பையனா, ஆடம்பரமா நடிக்கிறார். ஆனால், நிஜத்துல ரொம்ப எளிமையா இருக்கக்கூடியவர். ஒரே சீரியல்ல நடிக்கிறதால, ஒருத்தருடைய கஷ்டத்தை இன்னொருத்தரால புரிஞ்சுக்க முடியுது. செம ஹேப்பியா நடிக்கிறோம்.

****

சேனல் சைட் டிஷ்

அதை மட்டும் மறக்கவே முடியாதுங்க...

ஆரம்பகால நடிப்பு அனுபவங்களை யாராலும் மறக்க முடியாது. போராட்டங்கள், சவால்கள், கண்ணீர், கலாட்டா எனப் பலதைத் தாண்டியே முதல் வெற்றி பலருக்கும் சாத்தியமாகியிருக்கும். ஆரம்பகால நடிப்பு அனுபவங்களைப் பகிர்கிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள் சிலர்....

சேனல் சைட் டிஷ்

வித்யா வினு மோகன்: சின்ன வயசுல ரஸ்னா விளம்பரத்துல நடிக்குற வாய்ப்பு வந்துது. ஆனா, அப்பா அம்மா விடல. நான் பண்ணின ஆர்ப்பாட்டத்துல, `உனக்கு அப்படி என்னம்மா நடிக்கத் தெரியும்’னு எல்லாரும் என்னைக் கலாய்ச்சாங்க. ‘திடீர்னு அம்மாவுக்கே ஏதோ ஆயிடுச்சுன்னு வச்சிக்கோ... நீ எப்படி அழுவே’ன்னு சிச்சுவேஷன் சொல்லி நடிக்கச் சொன்னாங்க. நான் ஓடிப்போய் தலகாணியை எடுத்துட்டுவந்து அதைக் கட்டிப்பிடிச்சு அழ ஆரம்பிச்சிட்டேன். `பரவால்லையே... கண்ணீரெல்லாம் வருதே. வருங்காலத்துல நீ பெரிய ஆளா வர்றதுக்கான வாய்ப்பு தெரியுதே’ன்னு அம்மா சொன்னாங்க. அதுதான் என் முதல் நடிப்பு அனுபவம். `அப்பவே என்னை நடிக்க விட்டிருந்தா இன்னிக்கு நான் பெரிய ஸ்டார் ஆகியிருப்பேன். நீங்கதான் என் கரியரையே கெடுத்துட்டீங்க’ன்னு இப்பவும் அம்மா அப்பாவை வம்பிழுப்பேன்.

சேனல் சைட் டிஷ்

ஸ்வேதா சுப்ரமணியன்: என்னோட முதல் படம் ‘சிலம்பாட்டம்’. அந்தப் படத்துல நான் நடிச்சிருக்கேன்னு ஃபிரெண்ட்ஸ்கிட்ட ஆசை ஆசையா சொன்னேன். படம் பார்க்கப் போனபோது நான் எப்போ ஸ்க்ரீன்ல வருவேன்னு எல்லாரும் ஆர்வமா எதிர்பார்த்திட்டிருந்தாங்க. நான் நடிச்சதுல எடிட்டிங் போக, சில சீன்ஸ்தான் படத்துல வந்துச்சு. அதனாலயே, அதுக்கப்புறம் நான் நடிச்ச படங்களைப் பத்தி வெளியில சொல்றதையே விட்டுட்டேன். தொடர்ந்து டிவில டான்ஸ் ஷோஸ் பண்ணிட்டு இருந்தேன். என்னைத் தவிர அங்க எல்லாருமே பெரிய செலிபிரிட்டீஸ். அந்த ஷோவுக்கு ஜட்ஜா வந்த சிம்பு சார் ‘இவங்க என் கூட சிலம்பாட்டம் படத்துல தங்கச்சியா நடிச்சாங்க’ன்னு சொல்ல, அத்தனை பேரும் என்னை ஆச்சர்யமா பார்த்தாங்க. அந்த சந்தோ ஷத்தை மறக்கவே முடியாது.

சேனல் சைட் டிஷ்

ஸ்ரீவித்யா: விவரம் தெரியாத வயசுல டிவி பார்க்கும்போதெல்லாம் `அம்மா... நான் இதுக்குள்ள எப்போ வருவேன்’னு கேட்டுகிட்டே இருப்பேனாம். இன்னிக்கு நானும் நடிகையாயிட்டேன். வில்லி கேரக்டர் பண்றபோது அதுதான் என் நிஜம்னு நினைச்சு வெளியில என்னைப் பார்க்கிறவங்க கூப்பிட்டுத் திட்டற அளவுக்கு நடிப்புல தேறியிருக்கேன். என்னோட ஃபர்ஸ்ட் லாங்வேஜ் படுகா. அதனால என் தமிழ் உச்சரிப்பு செம்ம காமடியா இருக்கும். நடிக்க வந்த புதுசுல டப்பிங்ல என்னை அடிச்சுக்க முடியாது. அந்த அளவுக்கு சொதப்பி யிருக்கேன். ஆனா, இப்போ `டயலாக்ல பின்றியேம்மா’ன்னு பாராட்டு வாங்குறேன்னா பாருங்களேன்.