சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

தர்ஷா குப்தா
பிரீமியம் ஸ்டோரி
News
தர்ஷா குப்தா

யு டியூப் சேனல் தொடங்கி அதிகமாகச் சம்பாதிக்கும் டிவி பிரபலங்களை லிஸ்ட் எடுத்தால் ஆங்கர் மணிமேகலை அந்தப் பட்டியலில் கட்டாயம் வருவார் என்கிறார்கள்

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்குக்கூட சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. ஆனால் `குக்கு வித் கோமாளி' பிரபலங்களின் காட்டில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. பாலா, புகழ் இருவரும் இப்போது ரொம்ப பிஸி. பட வாய்ப்புகளைக் காரணம் காட்டி விஜய் டிவி ஷோவிலிருந்தே புகழ் சமீபத்தில் வெளியேறியது நினைவிருக்கலாம். இப்போது தர்ஷா குப்தாவும் அதே காரணத்துக்காக `செந்தூரப் பூவே' சீரியலிலிருந்து வெளியேறியுள்ளார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

யு டியூப் சேனல் தொடங்கி அதிகமாகச் சம்பாதிக்கும் டிவி பிரபலங்களை லிஸ்ட் எடுத்தால் ஆங்கர் மணிமேகலை அந்தப் பட்டியலில் கட்டாயம் வருவார் என்கிறார்கள். ஹோம் டூர். ஃபிரிட்ஜ் டூர் என இவர் தன்னுடைய வீடு மட்டுமல்லாது தெரிந்த, நண்பர்கள் இடங்களுக்கும் சென்று ரொம்பவே மெனக்கெட்டு வெளியிடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதாம். சில விளம்பரப் பொருள்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியலில் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் `செம்பருத்தி'யில் நடித்த நெகட்டிவ் கேரக்டர்தான் (நந்தினி) ஓரளவுக்குப் பெயர் வாங்கித் தந்திருக்கிறதாம் வி.ஜே. மௌனிகாவுக்கு. சீரியலோ, சினிமாவோ, போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது பெரிய ஆசை.நிஜ போலீஸ் அதிகாரியாக இருக்கும் அண்ணனைப் பார்த்தே காக்கி உடைமீது ஈர்ப்பாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`அழகு', `கண்ணான கண்ணே' தொடர்களில் நடித்திருக்கும் சஹானா கரம் பிடித்திருக்கும் மருத்துவ மாப்பிள்ளை மேட்ரிமோனியல் மூலம் வரன் தேடியபோது அமைந்தவர்தானாம். `வரதட்சணையாக ஒரு ரூபாய்கூட வாங்க மாட்டேன்' என்றவர், திருமணத்துக்குப் பிறகு குடும்பம் நடத்தத் தேவையான பொருள்களையுமே சஹானா வீட்டிலிருந்து வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தொடர்ந்து தி.மு.க-வில் இயங்கிவரும் போஸ் வெங்கட், கடந்த சட்டமன்றத் தேரதலில் சீட் கேட்டிருந்தார். ஆனால் வழங்கப்படவில்லை. எனவே, அவருக்கு சினிமா தொடர்புடைய வாரியங்கள் ஏதாவதொன்றில் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

ஒரே ஒரு வாரம் ரேட்டிங்கில் சீரியல் ஹிட் அடித்ததும், கூடவே கிளம்பி விட்டது பஞ்சாயத்தும். ஹீரோ மாறினார் அல்லவா, ‘அந்த இடத்துக்கு முதலில் வந்தவர் ஹீரோவா... அல்லது, சில தினங்கள் கழித்துக் கொஞ்சம் லேட்டாகச் சேர்ந்தவர் ஹீரோவா’ என்பதே பஞ்சாயத்தாம். இருவருமே அவரவர் கேரக்டர்தான் லீடு ரோல் எனச் சொல்லிவருவதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் பனிப்போர்ச் சூழல்தானாம்.