சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ராதிகா ப்ரீத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராதிகா ப்ரீத்தி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டி.வி முகங்களுக்கென்று குறிப்பிட்ட சதவிகிதம் இடம் ஒதுக்கப்படுவது வழக்கமாகி விட்டது.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டி.வி முகங்களுக்கென்று குறிப்பிட்ட சதவிகிதம் இடம் ஒதுக்கப்படுவது வழக்கமாகி விட்டது. வரும் 6வது சீசனில் தொகுப்பாளர்கள் ரக்‌ஷன், டி.டி இரண்டு பேரின் பெயர்களும் இந்தக் கோட்டாவில் அடிபடுகின்றன. இருவருமோ அல்லது இரண்டு பேரில் ஒருவரோ கலந்து கொள்ள நிறைய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

விகடன் TV: ரிமோட் பட்டன்

25,000 ரூபாய் சந்தா கட்டி ஆயுள் கால உறுப்பினராக சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சேர்ந்துள்ளார் ‘மௌன ராகம் 2' ரவீனா தாஹா. பதினெட்டு வயதே ஆன இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வருகின்றனவாம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாமல் சீரியல்களில் நடித்து வருபவர்களுக்குச் சிக்கல் வரலாம் எனப் பேச்சுகள் கிளம்பியதை யடுத்து பொண்ணு சரியான முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கலர்ஸ் தமிழ் சேனலில் `மந்திரப் புன்னகை' தொடரில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நடிகை வடிவுக்கரசி. ‘‘சீரியல் ஷூட்டிங்னா காலையில 7 மணிக்கெல்லாம் தொடங்கிடும். நிச்சயமா அந்த நேரத்துக்கு என்னால ஷூட் கிளம்ப முடியாது. மகள், பேத்திக்குக் காலையில் வீட்டுல தேவையான உதவிகளைச் செய்துட்டு பத்து மணிக்குதான் என்னால ஷூட் வர முடியும். இதை எல்லாரும் ஏத்துப்பாங்களா? அதனாலேயே நிறைய சீரியல் வாய்ப்புகளை வெவ்வேற காரணங்களைச் சொல்லி மறுத்துட்டு வந்தேன். ஆனா டைரக்டர் விக்ரமாதித்யன் (மந்திரப் புன்னகை இயக்குநர்) என் தம்பி மாதிரி. என் நிபந்தனையும் அவருக்குத் தெரியும்கிறதால எந்தப் பிரச்னையும் இருக்காது. அதான் கமிட் ஆயாச்சு'’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஒளிப்பதிவாளராகத் திரைப் பயணத்தைத் தொடங்கி நடிகராகவும் சினிமாவில் ரவுண்டு வந்துகொண்டிருக்கும் இளவரசு சீரியல் பக்கமும் வந்துவிட்டார். விரைவில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆனந்த ராகம்’ தொடரில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ‘பூவே உனக்காக' சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன் டி.வி-யின் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அக்கா-தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாம். தங்கையாக நடிக்கும் ராதிகா ப்ரீத்தியின் கேரக்டர் பெயர்தான் சீரியலின் டைட்டிலாக இருக்கும் என்கிறார்கள். அக்கா கேரக்டருக்கு முன்னணி நடிகைகள் சிலரிடம் பேசி வருகிறார்களாம். ஆகஸ்ட் 10-ம் தேதி பூஜை போட்டு ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க:

பெரிய திரையில் இப்போதும் அம்மாவாகக் கலக்கி வரும் நடிகையை சீரியலுக்குக் கேட்டு அணுகியிருக்கிறார்கள். ‘‘இங்கேயே கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிசியா இருக்கிறேனே’’ எனச் சொல்லிப் பார்த்திருக்கிறார். தேடிப்போனவர்கள் அப்போதும் விடாததால், சம்பளமாக ஒரு பெரிய தொகையைக் கேட்டாராம். அதைக் கேட்டதும், சென்றவர்கள் சத்தமில்லாமல் திரும்பிவிட்டார்களாம்.