சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சந்தோஷி
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தோஷி

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கேட்டு வந்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார் இர்ஃபான்.

ரியல் லவ் ஜோடி ஹீரோ ஹீரோயினாக நடிக்கிற பிரைம் டைம் சீரியலில், ஹீரோவின் நண்பர் கேரக்டருக்காக, சமையல் நிகழ்ச்சியில் கோமாளி வேஷம் போட்டவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள். ‘ஒரு வாரத்துக்கு ஷூட் இருக்கும்’ என முதலில் சொன்னவர்கள், கடைசியில் மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கால்ஷீட் தந்தால் போதுமென்றார்களாம். ‘ரெண்டே நாள் நடிக்கறதுக்கு வீட்டுல சும்மாவே இருந்துட்டுப்போறேன்’ என மறுத்துவிட்டாராம்.

திருமணத்துக்குப் பிறகு சீரியலிலிருந்து ஒதுங்கிய சந்தோஷி இப்போது பொட்டிக் பிசினஸில் படு பிஸி. கொரோனா காலத்தில் கூட ஆன்லைனில் மேக்-அப் சொல்லிக் கொடுத்துவந்தாராம். ‘சீரியல்ல நடிக்கக் கேட்டு இப்பவும் வந்துட்டுதான் இருக்காங்க; ஃபேமிலி ப்ளஸ் பிசினஸ்க்கு இப்ப நேரம் சரியா இருக்கு; நடிக்க வரணுமான்னு குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துட்ட பிறகே யோசிக்கணும்’ என்கிறார்.

சீரியலில் நடிக்கும் சிறிய புதுமுக ஆர்ட்டிஸ்ட் என்றாலும் அவர்களுக்கொரு பிரச்னை என்றால், அதைச் சரிசெய்துவிட்டுதான் அடுத்த வேலையைக் கவனிப்பாராம் ஜீ தமிழ் சேனலில் ‘சத்யா’, ‘ராஜா மகள்’ என இரண்டு சீரியல்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்த ஆர்.கே. மனோகர். கடந்த வாரம் சாலை விபத்தில் இவர் திடீர் மரணமடைந்ததில் இரண்டு சீரியல்களின் யூனிட்டும் மொத்தமாக சோகத்தில் ஆழ்ந்து போனது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்துப் புகழ் பெற்ற சித்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு சில படங்களில் தலைகாட்டினார். அந்த நேரம் பார்த்து கொரோனா வந்துவிட தொடர்ந்து சினிமாவே முடங்கிவிட்டது. எனவே இனி சீரியல் வாய்ப்பு வந்தால் கவனம் செலுத்தலாமென முடிவெடுத்திருக்கிறாராம்.

சமீபத்தில் தனது திருமண நாளைக் கொண்டாடிய முன்னாள் தொகுப்பாளினி ஐஸ்வர்யா, ஒரே மாதிரியான ஆங்கரிங் போர் அடிக்கவே, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானதாகச் சொல்கிறார்.

‘குக்கு வித் கோமாளி’ இரண்டாவது சீசனுக்கு அழைத்தபோது மறுத்ததைப் போலவே தற்போது ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கேட்டு வந்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார் இர்ஃபான். கோவிட் முதல் அலையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறார்.