Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

நான் பத்தாவது பரீட்சை எழுதினபோது, எங்க சித்தி என் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்கிட்ட, ‘சாக்‌ஷிக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு.

சேனல் சைட் டிஷ்

நான் பத்தாவது பரீட்சை எழுதினபோது, எங்க சித்தி என் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்கிட்ட, ‘சாக்‌ஷிக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு.

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

அம்மன் கெட்டப்ல எனக்கே என்னை அடையாளம் தெரியாது! - பவித்ரா கௌடா

சேனல் சைட் டிஷ்

கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக 500 எபிசோடுகளைக் கடந்து மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் முதல் ஃபேன்டஸி தொடர் ‘அம்மன்’. எதிர்காலத்தை கணிப்பதில் கெட்டிக்காரியான சக்தி கதா பாத்திரத்தில் நடிக்கும் பவித்ரா கௌடாவுக்கு, கன்னட சீரியலைத் தொடர்ந்து இது இரண் டாவது சீரியலாம்.

``படிச்சது பயோ - டெக்னாலஜி.எதிர்பாராத விதமா நடிக்க வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல. சும்மா நடிப்போமேனு ட்ரை பண்ணினேன். நானே எதிர்பார்க்கலை. இப்ப நடிப்பு பிடிச்சுப்போச்சு...’’ - அம்மன் கெட்டப்பில் அடக்கமான இன்ட்ரோ கொடுத்துப் பேசுகிறார் பவித்ரா.

அம்மன் கெட்டப்புல நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு..?

அம்மன் கெட்டப் போடுறப்போ வேற ஒரு பெர்சனாலிட்டியாவே மாறின ஃபீல் இருக்கும்.அந்த மேக்கப்ல அது நான்தான்னு கண்டு பிடிக்கவே கஷ்டமா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. மத்தவங்க சொல்றது ஒருபக்கம் இருந்தாலும், எனக்கே என்னை பார்க்குறப்போ அடையாளம் தெரியாதுன்னா பார்த்துக்கோங்க.

கன்னடம் டு தமிழ் சீரியல்... அந்த எக்ஸ் பீரியன்ஸ்?

எதேச்சையா கன்னட சீரியல் வாய்ப்பு வந்தது. அதுக்குப் பிறகு அம்மன் சீரியல். எப்பவும் புடவை குங்குமம் மஞ்சள்னு மங்களகரமான லுக். செம இன்ட்ரெஸ்ட்டிங்கா போயிட்டிருக்கு.

அம்மன் வேஷத்துல நடிக்குறவங்க கண்டிப்பா விரதம் இருக்கணும்னு சொல்லுவாங்களே..?

ஹா... ஹா... ஆமா... உண்மையைச் சொல்லணும்னா அந்த கெட்டப் போடும்போது என்னை அறியாமலே நான்-வெஜ் சாப்பிடுறதை கட் பண்ணியிருக்கேன். ஆனா, விரத மெல்லாம் இருந்ததில்லை.

உங்க சீரியல் மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துறதா நிறைய கமென்ட்ஸ் வருதாமே..?

எது ரீல், எது ரியல்னு மக்களுக்கே தெரியும். இது வெறும் சீரியல். இது ஜஸ்ட் எ ஃபேன்டஸி ஸ்டோரி. இவ்ளோ ஏன்... நான் பயபக்தியா வர்றதைப் பார்த்துட்டு என் வீட்டு லேயே என்னோட நடிப்பை செம்மயா கலாய்ச்சு ஃபன் பண்ணுவாங்க. அதனால கமென்ட்ஸை எல்லாம் கண்டுக்கிறதில்லை.

உங்க கூட நடிக்குற டாக்டர் ஹீரோவுக்கும் உங்களுக்கும் லவ்ஸாமே..?

சீரியல்ல மட்டும்தான் நான் வருங்காலத்தை புட்டுப்புட்டு வைப்பேன். அப்படிப் பார்த்தா, சக்தியோட வருங்கால புருஷன் டாக்டர் ஹீரோதான். அம்மன் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ லாங்வேஜ் பிரச்னையால ஒருவித தயக்கம் இருந்துச்சு. ஹீரோ என்னைவிட இன்ட்ரோவெர்ட்டா இருந் தான். அப்பாடா நம்மளவிட ஒருத்தன் நெர்வசா இருக்கா னேன்னு எனக்கு ஹேப்பியாயிடுச்சு. அதுவே திரைக்குப் பின்னாடியும் எங்களுக்குள்ள பாண்டிங்கை ஏற்படுத்துச்சு. ஸோ... உங்கக் கேள்விக்கு என் பதில் ‘நோ கமென்ட்ஸ்’.

சம்திங்... சம்திங்... அந்த நாள் ஞாபகம் சின்னத்திரை பிரபலங்களின் சிறுவயது நினைவுகள்...

‘சின்ன வயசுல...’ என்று ஆரம்பித்து, முக மலர்ச்சியோடு பகிர்வதற்கு நம் ஒவ்வொருவரிடமும் சுவாரஸ்யமான பல கதைகள் இருக்கும். அப்படி தங்களின் சிறு வயது நினைவுகளைப் பகிர்கிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள் சிலர்.

சேனல் சைட் டிஷ்

ப்ரீத்தா ராகவ்

“வருஷா வருஷம் யு.எஸ்ல யூத் கான்ஃபெரன்ஸ் நடக்கும். ப்ளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தப்ப இந்தியாவை ரெப்ரசென்ட் பண்ணிப்போனது வேற லெவல் ஃபீல். நானும் என் தம்பியும் ட்வின்ஸ். அவனை விட்டுட்டு முதல்முறையா தனியா போனது அப்போதான். அஞ்சாங் கிளாஸ்லேருந்து ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ், ஒரே செக்‌ஷன்னு ஒண்ணாவே இருந்தோம். ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாழ்க்கையோட பல வருஷங்கள் முழுக்க அவன்கூட தான் போச்சு. அதுக்கப்புறம் படிப்பு, கல்யாணம்னு அடுத்தகட்ட வாழ்க்கை. அவனோட கிராஜுவேஷனுக்காக அமெரிக்கா போனப்போ ரெண்டு பேரும் சேர்ந்து டிஸ்னிலேண்ட் போனோம். அன்னிக்கு வேர்ல்டு ட்வின்ஸ் டே. சின்னக்குழந்தையில இருந்து வயாசனவங்க வரை நிறைய ட்வின்ஸைப் பார்த்தோம். செம்ம ஹேப்பியா இருந்துச்சு. அந்த நினைவு இன்னிக்கும் மனசுல நிக்குது!”

சேனல் சைட் டிஷ்

ரேமா அசோக்

“நீச்சல் ரொம்ப பிடிக்கும்னு சின்ன வயசிலேயே ஸ்விம்மிங் கத்துக்க ஆரம்பிச்சேன். ஒருமுறை வெளியூர் போனபோது தங்கியிருந்த ஹோட்டல்ல நீச்சல் குளம் இருந்துச்சு. என் அண்ணன், மாமா எல்லாரும் நீச்சல் குளத்துல இறங்கி விளையாடிட்டு இருந்தாங்க. நானும் நீச்சல் குளத்தில் இறங்கிட்டேன். தண்ணில விளையாடிட்டிருந்தபோதே, தெரியாம ஆழம் அதிகமான இடத்துக்குப் போயிட்டேன். மூச்சுத் திணற ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் ஒரு வழியா என்னைக் காப்பாத்திட்டாங்க. உசுரு போயி, உசுரு வந்த அந்த நிமிஷத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. வளர்ந்த பிறகு, நல்லா நீச்சல் கத்துக்கிட்டாலும்கூட, நீச்சல் குளத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பயம் இருந்துகிட்டேதான் இருக்கு.”

சேனல் சைட் டிஷ்

நவ்யா சுஜி

“சின்ன வயசுல நான் ரொம்ப அமைதியான பொண்ணு. ரொம்ப பயப்படுவேன். என் அக்கா, சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டாங்க. எனக்கும் ஆசை இருந்துச்சு. ஆனா, பயம். என் அப்பாதான் என்னைக் கட்டாயப்படுத்தி சைக்கிள் ஓட்ட கூட்டிட்டுப் போனார். பயத்துலயே ஓட்டுனதால, கீழே விழுந்து ரத்த காயமாயிடுச்சு. அதுலேருந்து சைக்கிள் ஓட்ட மாட்டேன்னு சொன்னேன். ஆனா அப்பா விடல. தினமும் காலைல சைக்கிள் ஓட்ட கூட்டிட்டுப் போயிடுவார். ரெண்டு மாசத்துல எப்படியோ ஒரு வழியா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன். கம்பீரமா எங்க தெருவுக்குள்ள நான் முதன்முதலா சைக்கிள் ஓட்டுனதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. நான் எந்த ஊர்ல சைக்கிள் ஓட்ட பயந்தேனோ அதே ஊர்ல இப்போ புல்லட், பல்சர், கார் எல்லாம் ஓட்டுறேன். ரொம்ப கெத்தா இருக்கு. அப்பாவுக்குதான் நன்றி சொல்லணும்.”

சேனல் சைட் டிஷ்

சாக்‌ஷி அகர்வால்

``நான் பத்தாவது பரீட்சை எழுதினபோது, எங்க சித்தி என் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்கிட்ட, ‘சாக்‌ஷிக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு. அவங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அதனால் அவளுக்கு பெர்மிஷன் கொடுக்க முடியுமா’னு கேட்டாங்க. ஆனா, எக்ஸாம் போயிட்டு இருந்ததால வெளிய போக அனுமதி கிடைக்கல. சீக்கிரம் எக்ஸாம் முடிச்சுட்டு கிளம்பினேன். அம்மா இருந்த ரூமுக்குள்ள போனதும், க்யூட்டான தங்கச்சி பாப்பா தொட்டில்ல படுத்துட்டு இருந்தா. அவளை முதல்முதலா கையில் தூக்குன அந்த நிமிஷம்தான் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனக்கும் அவளுக்கும் 15 வயசு வித்தியாசம். தங்கச்சியை என்னோட பொண்ணு மாதிரிதான் பார்க்குறேன்.”

சேனல் சைட் டிஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism