Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

நிறைய விஷயங்களை மிஸ் பண்ணியிருக்கேன். ரெகுலரா ஸ்கூலுக்கு போக முடியாது. அதனால எனக்கு ஃபிரெண்ட்ஸும் இல்லை

சேனல் சைட் டிஷ்

நிறைய விஷயங்களை மிஸ் பண்ணியிருக்கேன். ரெகுலரா ஸ்கூலுக்கு போக முடியாது. அதனால எனக்கு ஃபிரெண்ட்ஸும் இல்லை

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

ஆமாம்... அம்மாவுக்கு நான்தான் வளைகாப்பு பண்ணிவெச்சேன்! - ‘பாக்கியலட்சுமி’ நேஹா

சன் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிள்ளை நிலா’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நேஹா. `வாணி - ராணி’ உட்பட சன் டிவியில் சில தொடர்களிலும், `ஜாக்சன் துரை’ திரைப்படத்திலும் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹாவுடன் ஒரு ஜாலி சாட்.

“நான் நடிக்கணுங்கிறது என் அம்மாவோட ஆசை. நிறைய ஆடிஷன்களுக்கு கூட்டிட்டுப் போவாங்க. என்னோட எட்டு வயசுல, ‘பிள்ளை நிலா’ சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல்ல நடிச்சிட்டிருந்தபோதே `வாணி - ராணி’ சீரியல்ல தேனு கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ ‘பாக்கியலட்சுமி’ சீரியல்ல இனியா ரோல் பண்றேன்” - சீரியல் என்ட்ரி பகிர்ந்து தொடர்கிறார் நேஹா.

சேனல் சைட் டிஷ்

சின்ன வயசுலேயே நடிக்க வந்த அனுபவம் எப்படி இருந்தது?

நிறைய விஷயங்களை மிஸ் பண்ணியிருக்கேன். ரெகுலரா ஸ்கூலுக்கு போக முடியாது. அதனால எனக்கு ஃபிரெண்ட்ஸும் இல்லை. நினைச்ச நேரத்துல மருதாணி கூட வெச்சுக்க முடி யாது, ஹேர்கட் பண்ண முடியாது. சின்ன வயசுல சீரியல்ல நடிக்கும்போது நிறைய டேக் வாங்கியிருக்கேன். அதனால் நிறைய திட்டும் வாங்கிருக்கேன். ஒவ்வொரு முறை திட்டு வாங்கும்போதும், நான் இனி நடிக்க மாட்டேன்னு அம்மாகிட்ட அழுவேன். அம்மாதான் சமாதானப்படுத்தி கேமரா முன்னாடி நிக்க வைப்பாங்க. அந்த வயசுல நான் இழந்தது மட்டும் தான் எனக்குப் பெரிசா தெரிஞ்சது. ஆனா, இப்பதான் தெரியுது, நான் எவ்ளோ லக்கியான பொண்ணுன்னு.

உங்க அம்மாவுக்கு நீங்க வளைகாப்பு பண்ண புகைப் படங்களை இன்ஸ்டாகிராம்ல பார்த்தோம்... அந்த ஃபீல் எப்படியிருந்துச்சு?

எனக்கு 18 வயசு ஆகும்போது எனக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கா. எங்க அம்மா அவங்களோட பிரெக்னன்சி பத்தி சொன்னதும் முதல்ல நான் நம்பல. ரெண்டு நாள் வீட்டுல யார்கிட்டயும் பேசல. அம்மாதான் பேசிப் புரிய வெச்சாங்க. எங்க அம்மாவுக்கு வளைகாப்புகூட நான்தான் பண்ணேன். என் தங்கச்சிக்கு டிரஸ், மெத்தைனு எல்லாத்தையும் நான் பார்த்துப் பார்த்து வாங்கினேன். அவளுக்கு நான் இன்னோர் அம்மா. இப்போ எங்க வீடு முழுக்க அவளோட சிரிப்பு சத்தம் நிறைஞ்சு இருக்கு. சோஷியல் மீடியாவுல இது பத்தி நிறைய பேர் கமென்ட் பண்ணியிருந்தாங்க. அவங் களுக்கெல்லாம் நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன். கல்யாணம், குழந்தை எல்லாமே ஒரு பெண்ணோட தனிப்பட்ட உரிமை, விருப்பம். அதுல கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேனல் சைட் டிஷ்

உங்களை யாராவது உருவகேலி பண்ணி யிருக்காங்களா?

அதையெல்லாம் நான் கண்டுக்கிற தில்லை. இது என் உடம்பு. நான் ஒல்லியா, இருக்கணுமா பப்ளியா இருக்கணுமாங்கிறதை நான்தான் முடிவு பண்ணணும். எப்பவும் நெகட்டிவிட்டியை நம்மகிட்ட இருந்து தள்ளி வெச்சுட்டு, முன்னேறிப் போயிட்டே இருக்கணும். அதுதான் நமக்கு நல்லது.

சீரியல்ல இனியா மாதிரி நிஜத்துலயும் அம்மாகூட சண்டை போடுவீங்களா?

என் அப்பா வெளிநாட்டுல இருக்கார். ஒரு வருஷத்துல நான் அப்பாகூட இருக்கும் நாள்கள் ரொம்பவே குறைவு. என் அம்மாதான் என்னோட உலகம். என் பெஸ்ட் ஃபிரெண்டும்கூட. இதுவரை அம்மாகிட்ட இருந்து எதையும் மறைச்சதில்ல. என் அடையாளம் என் அம்மாதான். அதனால சண்டையெல்லாம் போட மாட்டேன்.

சேனல் சைட் டிஷ்

நடிப்பு... போட்டோஷூட்... இன்ஸ்டா ரீல்ஸ்... - சின்னத்திரை பிரபலங்களின் ‘தாய்மை’ அனுபவங்கள்...

கர்ப்பகாலம் பெண்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல். ஓர் உயிரை உலகத்துக்குக் கொண்டுவரும் வலியும் சுகமும் கலந்த அனுபவங்கள் பற்றி சின்னத்திரை பிரபலங்களிடம் பேசினோம்.

சேனல் சைட் டிஷ்

ஃபரீனா ஆசாத்: நான் ப்ரெக்னன்ட்டுங்குறது எங்களோட `பாரதி கண்ணம்மா’ டீமை தவிர யாருக்குமே தெரியாது. இவ்ளோ ஏன்... சொந்தக்காரங்களுக்கே தெரியாது. இன்ஸ்ட்டாவுல விஷயத்தைச் சொன்னதும் எல்லாருக்குமே செம்ம ஷாக். `நேத்துகூட உங்களை சீரியல்ல பார்த்தோமே வெண்பா... நிஜமாவா சொல்றீங்க’ன்னு கேட்டாங்க. வாழ்த்து மழையால என் மனசை நிறைச்சுட்டாங்க.கிட்டத்தட்ட ஆறாவது மாசத்துலதான் குழந்தையோட அசைவு வெளிய தெரியவே ஆரம்பிக்கும். கண்ணு பட்டுடும்... பார்க்கக் கூடாது... காட்டக் கூடாதுன்னு அதை எதுக்கு மறைச்சு வச்சிக்கிட்டு... அதான் இந்த ப்ரெக்னன்சி கால நினைவுகளை பத்திரப்படுத்த போட்டோஷூட் மூலமா என்ஜாய் பண்றேன். `பாப்பா வெளியே தெரியாதே... அம்மாவுக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கணும் சரியா’னு முன்னயெல்லாம் அடிக்கடி என் பாப்பாகிட்ட சொல்லிக்கிட்டிருப்பேன். இப்போ ஏழாவது மாசம் நடக்குது. ஆனாலும், எனக்கு வயிறு பெருசா தெரியாது. புடவை கட்டும்போது லேசா தொப்பை மாதிரி தெரியும் அவ்வளவுதான். ஆறு மாசமா பாப்பா பெருசா வெளிய தெரியாததாலயோ என்னவோ இதைப் பண்ணாத... அதைப் பண்ணாதங்குற இம்சையில இருந்து தப்பிச்சிட்டேன். மக்கள்கிட்ட இருந்து ஒரே அட்வைஸ் மழை. கூடவே, நெகட்டிவ் கமென்ட்ஸுக்கும் பஞ்சமில்லை. நான் செம்ம பாசிட்டிவ்வான ஆளு... இந்த நெகட்டிவிட்டிக்கெல்லாம் பயப்படுற ஆளில்லீங்க நான்.

சேனல் சைட் டிஷ்

சமீரா: நான் என்னோட ப்ரெக்னன்சியைக் கொண்டாடுறேன். அதனால் சீரியல், ஷூட்டிங்னு கரியர்ல பிரேக் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு நிமிஷத்தையும் எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம ஹேப்பியா அனுபவிச்சுக்கிட்டிருக்கேன். குழந்தையைக் கையில தூக்கப்போற அந்த நிமிஷத்துக்காக ஏங்கிக்கிட்டு இருக்கேன். என் தங்கச்சியும் இப்போ ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. அதனால் மொத்தக் குடும்பமும் ஹேப்பி. சோஷியல் மீடியாவுல ஆக்டிவ்வா இருக்கேன். நிறைய ரீல்ஸ் பண்றேன். குழந்தை வயித்துல இருக்கும்போது போட்டோ எடுக்காதே, டான்ஸ் ஆடாதே, விளையாடாதேனு நிறைய பேர் நெகட்டிவ் கமென்ட்ஸ் பண்றாங்க. அவங்களுக் கெல்லாம் நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன் ப்ரெக்னன்சிங்கிறது ஒரு நோய் இல்ல. இதெல்லாம் பண்ணக் கூடாதுனு சொல்றதுக்கு. உங்களுக்குப் பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணிட்டுப் போங்க. நெகட்டிவ் கமென்ட்ஸ் வேணாமே ப்ளீஸ்.

சேனல் சைட் டிஷ்

ஷாமிலி சுகுமார்: ப்ரெக்னன்ட்டா இருக்குறதே அப்பப்ப என்னோட வயித்த பார்க்குறப்போதுதான் ஞாபகமே வருதுன்னா பார்த்துக்கோங்க. ப்ரெக்னன்ட்டா இருக்குறதுல நிறைய சலுகைகள் கிடைக்குது. ஒருவழியா எத்தனையோ மாசங்களா என் புருஷன்கிட்ட கேட்ட மருதாணி ஆசை இப்போ நிறைவேறிடுச்சு. ப்ரெக்னன்சி நினைவுகளைப் பத்திரப்படுத்தி வச்சிக்க என்னோட அடுத்த டார்கெட் போட்டோ ஷூட்தான். ‘வண்டி ஓட்டாதே’ல தொடங்கி `இதைப் பண்ணாதே... அதைப் பண்ணாதே’ன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். என்னோட ஆறாவது மாசத்துலயும் ஓடுறது, விளையாடுறதுன்னு எப்போதும் போலவே இருக்கேன். வாந்தி, தலைசுத்தல், அது இதுன்னு எந்த பிரச்னையையும் தராம என் பாப்பாவும் சமர்த்தா இருக்கு. குழந்தை பிறந்துட்டா பேபியோட அசைவுகளை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் போலிருக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism