Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷமீதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷமீதா

அண்ணன் தங்கை கதையான ‘வானத்தைப் போல’ சீரியலில் தங்கை துளசியின் பாத்திரம் சமீபத்தில்தான் மாறியது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இப்போதைய மியூசிக் ரியாலிட்டி ஷோக்கள்மீது தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பாடகி அனிதா குப்புசாமி. ‘`நாட்டுப்புறப் பாட்டுன்னு இன்னைக்கு டி.வி-க்கள் பிரபலமாக்கி விடுகிற பாடல்களெல்லாம் உண்மையான நாட்டுப்புறப் பாடல்களே இல்லை. வெறும் காதலை மட்டுமே பாடறவங்களைத்தான் இந்த ஷோக்கள் வளர்த்து விடுகின்றன. சமயங்களில் அந்தப் பாடல்களுமே எல்லை மீறி சினிமா குத்துப்பாட்டு போலத்தான் இருக்கு’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து இமான் அண்ணாச்சியிடம் கேட்டால், ``என்னைப் பொறுத்தவரைக்கும் சாதாரண விஷயமில்லைன்னு நினைக்கிறேன். அதன் மூலமா சினிமா வாய்ப்பு வருதா, சம்பாதிக்க முடியுமான்னு நினைச்செல்லாம் நான் போகலை. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. நிறைய அரசியல் விஷயங்களைப் பேச முடிஞ்சது. அதுல எதை ஒளிபரப்புனாங்க, எதைக் கட் பண்ணினாங்கன்னு தெரியாது. கமல் சாருடன் வாரா வாரம் பேச முடிஞ்சது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்னை ஒரு காமெடியனாத்தான் மக்களுக்குக் காட்டின, ஆனா இந்த ஷோ என் இயல்பான குணத்தைத் தமிழக மக்களுக்கு ஓரளவு காட்டிடுச்சுன்னு நினைக்கிறேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

2022 ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடக்கவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா மீண்டும் போட்டியிடலாமெனச் சொல்லப் படுகிறது. தற்போது ராஜ் டி.வி-யில் சீரியல் தயாரித்து வரும் நிரோஷா, கடந்த தேர்தலின்போது போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய நிலையில், இப்போது மீண்டும் களம் காண அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஸ்டேண்ட் அப் காமெடியில் இருந்தவரை ஷூட்டிங் சமயத்தில் சென்னை வருவார் அறந்தாங்கி நிஷா. ஷூட்டிங் முடிந்தால் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவார். இப்போது சீரியல் நடிகையாகவும் ஆகிவிட்டதால் தொடர்ந்து சென்னையில் இருக்க வேண்டியிருப்பதாலும், சினிமா வாய்ப்புகளும் வந்தபடி இருப்பதாலுமே சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

அண்ணன் தங்கை கதையான ‘வானத்தைப் போல’ சீரியலில் தங்கை துளசியின் பாத்திரம் சமீபத்தில்தான் மாறியது. அந்தக் கேரக்டரில் நடித்த ஸ்வேதா விலகி மன்யா கமிட் ஆகியிருக்கிறார். தொடர்ந்து இப்போது அண்ணனாக நடித்த தமன்குமாரும் விலகியிருக்கிறார். தமனுக்குப் பதில் இப்போது அண்ணனாக கமிட் ஆகியிருப்பவர் நடிகர் ஸ்ரீ. இதன் மூலம் இதுவரை ஜீ தமிழ் சேனலில் நடித்துவந்த ஸ்ரீ, சன் டி.வி-க்கு வந்திருக்கிறார். இதேவேளையில் இதுவரை சன் டி.வி-யில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீயின் மனைவி ஷமீதாவோ ஜீ தமிழின் புதிய சீரியலான ‘பேரன்பு’வில் கமிட் ஆகியிருக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

மார்கழி மாத மென்றாலே நினைவுக்கு வருகிற படத்தில் நடித்தவர் அவர். சினிமா ஒர்க் அவுட் ஆகாததால் டி.வி-க்கு வந்தவர், உடன் நடித்த வரையே வாழ்க்கைத் துணை யாகவும் ஆக்கிக் கொண்டார். இப்போது சேனல் மாறி இவர் நடிக்கிற சீரியலுக்கும் அதிக டி.ஆர்.பி கிடைக்க, தலைகால் புரியவில்லையாம். சக சீரியல் ஹீரோக்கள் சிலருக்கு வாலண்டியராக போன் செய்து தற்பெருமை பேசிவருகிறாராம்.