Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
குமரன்

‘துணிவு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறிய வேடத்தில் நடித்த பிர்லா போஸுக்கு அந்தப் படமே அடுத்த வாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் பத்து ஆண்டுகள் கழித்து இந்தப் பொங்கலுக்குச் சொந்த ஊரான முத்துப்பேட்டைக்குச் சென்று வந்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘‘சினிமா, டி.வி வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்து பல வருடங் களாக வாய்ப்பு தேடிட்டிருந்த நாள்களில், சொந்த ஊருக்குப் போக ரெண்டு விஷயம் தடையா இருந்தது. முதல் விஷயம், ஊருக்குக் கிளம்பிப் போன நேரம் பார்த்து ஏதாவது வாய்ப்பு வந்தா என்ன பண்ணுறதுங்கிற நினைப்பு. ‘சினிமா வாய்ப்புங்கிறது அப்படித்தான் இருக்கும், கூப்பிடற நேரத்துல உடனே போய் நின்னுடணும்’னு நிறைய பேர் தங்களது அனுபவத்துல சொல்லக் கேட்டிருக்கேன். ரெண்டாவது விஷயம், சினிமாவுல நடிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தவனுக்கு ஒரு அடையாளமே கிடைக்காம இருந்த சூழல்ல ஊர்ல போய் நிற்கத் தயக்கம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இதனாலேயே ஊர்ப்பக்கம் போக முடியாம இருந்தது. சமீபத்துல அப்பாவுக்குக் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாம இருந்தது. குணமானதும் ஊர்ல இருக்கிற கோவில்ல போய் சாமி கும்பிடணும்னு அப்பாவுக்கு ஆசை. அவருடைய ஆசையை நிறைவேத்தணும்னுதான் முக்கியமா இந்த ட்ரிப். ரெண்டு நாள் தங்கியிருந்துட்டு வந்தோம். நண்பர்கள், அக்கம் பக்கத்துக் காரங்கன்னு எல்லோரையும் சந்திச்சுட்டு வந்தது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு'' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கடந்த ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்த ‘அழகு’ சீரியல் சஹானாவும் ‘வீட்ல விசேஷ’ச் செய்தி சொல்லிவிட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘துணிவு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறிய வேடத்தில் நடித்த பிர்லா போஸுக்கு அந்தப் படமே அடுத்த வாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் பெரிய படமாம். ரஜினி நடிக்க நெல்சன் இயக்கிவரும் ‘ஜெயிலர்’ படத்திலும் சிறியதொரு கேரக்டரில் பிர்லா தலை காட்டலாம் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய ஒரு ஆசை, கமல்ஹாசன் முன்னால் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிறார்களே, அந்த இடத்திற்காவது ஒரு முறை போய் வர முடியாதா என்பதுதான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸை அழைத்துச் செல்வது, அங்கு அவர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியில் செல்லாதவாறு பார்த்துக்கொள்வது என அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பு, சோஷியல் மீடியாவில் பிரபலமான இரட்டையர்கள் அருண் மற்றும் அரவிந்த் இருவரும்தானாம். காஸ்டிங் இயக்குநர்களான இவர்கள்தான் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டு வந்தவர்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சீரியல் ஆட்கள் கூடிப் பேசும் இடமான சங்க அலுவலகத்தை மாற்ற முடிவெடுத்திருக்கிறதாம், சமீபத்தில் வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்த நிர்வாகம். தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த முந்தைய தலைவர் சங்க அலுவலகத்தின் பக்கத்திலேயே ஒரு அலுவலகத்தை வாடகைக்குப் பிடித்து, எந்த நேரமும் அங்கேயே இருப்பதால், சங்கத்தில் நடக்கும் விஷயங்கள் அவர் காதுக்கு உடனுக்குடன் சென்றுவிடுகின்றன என்பதால் இந்த முடிவாம்.