கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
மகேஸ்வரி

பிக் பாஸ் அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என இப்போதே தகவல்கள் றெக்கை கட்டுகின்றன. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் இருப்பதால் அதில் கவனம் செலுத்தப்போகிறார் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றதாம். வெப் சீரிஸ் பண்ணலாமா என யோசித்து வருவதாகச் சொல்கிறார் மகேஸ்வரி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என இப்போதே தகவல்கள் றெக்கை கட்டுகின்றன. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் இருப்பதால் அதில் கவனம் செலுத்தப்போகிறார் என்கிறார்கள். பொதுவாக ஜூலை மாதத்துக்குப் பிறகே பிக் பாஸ் தொடங்கும். தேர்தலோ ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள்ளேயே முடிந்துவிடலாமென்பதால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அது சரி, நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஆறு விரலைக் காட்டுகிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சொந்தமாக பிரைடல் மேக்கப் கற்றுத் தரும் இன்ஸ்டிட்யூட்டை சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் திறந்தார் ‘செம்பருத்தி’ பரதா. பிசினஸ் கொஞ்சம் பிக் அப் ஆகத் தொடங்கிய நிலையில், இப்போது வீட்டில் அடுத்த மகிழ்ச்சி யான செய்தி கிடைத்திருக்கிறது. விரைவில் அம்மா ஆகப்போகிறார். இது எட்டாவது மாதமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

திருப்பதி சென்று வர வேண்டும் என்பது கிறிஸ்தவரான ரியோவின் மனதில் நீண்ட நாள்களாக இருந்து வந்த விருப்பமாம். சமீபத்தில் அந்த விருப்பம் நிறைவேறியிருக்கிறது. குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை தரிசித்து வந்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி யிலிருந்து தான் வெளியேறியது தொடர்பாகப் பரவிய தகவல்களில் உண்மையில்லை என்கிறார் ஓட்டேரி சிவா. ‘நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் நான் நடந்துகொண்ட விதம் குறித்து சக போட்டியாளர்களைக் கேட்டாலே தெரிந்துகொள்ளலாம்’ என்கிற இவர், தன்னைப் போட்டியாக நினைக்கும் சில யூடியூபர்களே தாறுமாறாக வெளியான தகவல்களின் பின்னணியில் இருப்பதாக நம்புகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லதீங்க...

சிற்பத்துக்குப் பெயர் பெற்ற நகரத்தில் பணி புரியும் காவல் உயரதிகாரி அவர். அவரது மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன் சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ‘கடற்கரைச் சாலைக் குதூகலங் களுக்கு உதவுவார்’ என்கிற ஒரே காரணத்துக் காக, அந்த அதிகாரியின் நட்பு வட்டத்தில் இருக்கும் சின்ன, பெரியதிரைப் பிரபலங்கள் பலரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். சமீபத்தில் சிறைக்குச் சென்று திரும்பிய நடிகரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். ‘இவ்ளோ தொடர்பு இருந்தும் எப்படி உள்ளே அனுப்பிட்டாங்க’ என பார்த்த பலரும் அவரிடம் துக்கம் விசாரிக்காத குறையாக அந்தச் சம்பவத்தையே பேச, கடுப்பாகிப் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.