Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜனனி

பிக் பாஸ் தொகுத்து வழங்குவதை இந்த சீசனுடன் கமல் நிறுத்திக்கொள்வார் என்றொரு பேச்சு கேட்கத் தொடங்கியிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பல்வேறு இணையதளங்கள் பிக் பாஸ் தொடர்பாக ஓட்டெடுப்புகள் நடத்திவருவது அறிந்ததே. ஆனால் விஜய் டி.வி-யைப் பொறுத்தவரை ஹாட் ஸ்டார் தளத்தில் பதிவாகும் ஓட்டுகளை மட்டுமே கணக்கில் எடுக்கிறது. இலங்கையில் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக இந்த அப்ளிகேஷனில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், இதனால் ஜனனிக்கு அங்கிருக்கும் அவரின் ரசிகர்களால் ஓட்டு போட முடியவில்லை என்றும் ஒரு தகவல் இப்போது உலா வருகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் தொகுத்து வழங்குவதை இந்த சீசனுடன் கமல் நிறுத்திக்கொள்வார் என்றொரு பேச்சு கேட்கத் தொடங்கியிருக்கிறது. 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுக் கவனத்தையும் செலுத்தப்போவதாகச் சொல்கிறார்கள். ‘ஒரு வருடம் முன்னதாகவே அரசியல் வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார் ஆண்டவர்' என உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவரது கட்சித் தொண்டர்கள், ‘தேர்தல் சமயத்தில் மூன்று மாதங்களை இந்த நிகழ்ச்சிக்கு ஒதுக்குவது சரியாக இருக்காது' என கமல் நினைப்பதாகத் தெரிகிறது. கமல் இல்லாவிட்டால் அந்த இடத்தில் ஏற்கெனவே பி.பா தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்புவை எதிர்பார்க்கலாமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற அஷ்வந்த் முதன்முதலாக இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்தி தெரியாத போதும், தொடரின் முழு வசனத்தையும் மனப்பாடம் செய்து நடித்தது பல தரப்பிலும் இருந்து சிறுவனுக்குப் பாராட்டுகளைக் குவித்துவருகிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்தது முதலே நிற்க நேரமில்லாமல் விளம்பரங்களில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார் ஜி.பி முத்து. ‘ப்ளைட் டிக்கெட் போட்டுத் தர்றோம்; வந்து ஒரு எட்டு நம்ம கடைக்குள் கால் வச்சிட்டுப் போயிடுங்க போதும்' என்றெல்லாம்கூட அழைக்கிறார்களாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

யூடியூப் பிரபலம் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த நடிகர் காவல்துறைக்கே சில நிகழ்ச்சிகள் செய்து தந்தவராம். அந்த தைரியத்தில்தான் தன்னைக் கைது செய்யமாட்டார்கள் என நம்பி அசால்ட்டாக இருந்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், கைது செய்யப்பட்ட அன்றும், காவல்துறையினர் அவரை அணுகி, ‘‘ஒரு நிகழ்ச்சி பண்ண வேண்டும். அது தொடர்பாகப் பேசலாம்'’ என்றே அழைத்துச் சென்று கைது செய்திருக்கிறார்கள்.