சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

`முள்ளும் மலரும்’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது சேனலுடன் கோபித்துக்கொண்டு போன தேஜஸ்வினி, மீண்டும் ஜீ தமிழ் சேனலில் ஹீரோயினாக ரீ என்ட்ரி தந்திருக்கிறார்.

எட்டு வருடங்களுக்கு முன் காதலித்த நாள்களில் கணவர் தினேஷ் வாங்கித் தந்த செல்ல நாய்க்குட்டி இறந்துவிட்ட சோகத்தில் இருக்கிறார் ரச்சிதா. சில தினங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்ட அந்த நாய்க்குட்டியின் பெயர் ஹேப்பி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர் பாவினிக்கு முத்தம் கொடுத்து வைரலான அமீர், ஊட்டியில் டான்ஸ் ஸ்டூடியோ வைத்திருக்கிறார். சாண்டியின் சிபாரிசில்தான் இவர் பிக் பாஸில் கலந்துகொண்டார் என்றொரு தகவல் கிளம்பியது. சாண்டியிடம் கேட்டால், ‘‘நான் ஜட்ஜா இருந்த ஒரு ஷோவுல போட்டியாளரா வந்தவர். அந்த வகையில மட்டுமே அவரை எனக்குத் தெரியும்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

படிக்கிறபோது நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர் ராதிகா ப்ரீத்தி. இப்போது சீரியல் நடிகை ஆகி விட்ட பிறகு விளையாட்டுடனான தொடர்பு விடுபட்டு விட்டதாம். விளையாட்டு வீராங்கனையாக நல்ல ஒரு படம் பண்ண வேண்டுமென்கிற ஆசையும் இவருக்கு இருக்கிறது.

`முள்ளும் மலரும்’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது சேனலுடன் கோபித்துக்கொண்டு போன தேஜஸ்வினி, மீண்டும் ஜீ தமிழ் சேனலில் ஹீரோயினாக ரீ என்ட்ரி தந்திருக்கிறார். இந்த சீரியலில் தேஜஸ்வினிக்கு ஜோடியாக நடிக்கும் இனியனும் இதே சேனலில் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே பாதியில் வெளியேறியவர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

டிவி நடிகர் சங்கத் தேர்தல் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க ஆதரவாளர் என கடந்த காலங்களில் அறியப்பட்ட தற்போதைய தலைவர் ரவி வர்மாவை எதிர்த்துப் போட்டியிடும் அணியில், தி.மு.க-வில் கடந்த தேர்தலில் சீட் கேட்ட போஸ் வெங்கட் முக்கியமானவராக இருக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...!

பெரிய வீட்டுக்குச் சென்று அங்கு பிரச்னைக்கு ஆளாகி வெளியில் வந்த நடிகரின் வீட்டில் புயல் அடித்து ஓய்ந்துள்ளது. முதல் மனைவிக்குச் சேர வேண்டியதைத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்திருக்கிறார். பொங்கியெழுந்த முதல் மனைவி, ‘விவகாரத்தை வீதிக்குக் கொண்டு செல்லட்டுமா’ எனக் கேட்டாராம். அவருடைய ஆக்ரோஷத்தைக் கண்டு ஆடிப்போன நடிகர், சேர வேண்டியதை சைலன்டாக செட்டில் செய்து விட்டாராம். ‘பண்ணலைன்னா வீட்டுல ஆனந்தம் விளையாடுதோ இல்லையோ, விதி விளையாடியிருக்கும்’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.