தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV: ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் டாஸ்க்கில் அசீம், ரச்சிதா, ஷிவின் ஆகிய மூவர் குறித்தே அதிக எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்தன.

தொகுப்பாளர் பாவனா
தொகுப்பாளர் பாவனா

ஜோதிடத்தில் முழு நம்பிக்கை கொண்ட தொகுப்பாளர் பாவனாவுக்கு 2022 நம்பியபடியே அமைந்ததாம். வழக்கமான கார்ப்பரேட் நிகழ்ச்சிகளைத் தாண்டி டி20 உலகக்கோப்பை, இந்தியா பாகிஸ்தான் போட்டியை லைவாகத் தொகுத்து வழங்கியது, விராட் கோலி, பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் பேட்டிகள், சினிமாவில் ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக மேடை ஏறிய ‘செஸ் ஒலிம்பியாட்’ மற்றும் தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல்’ ஆகிய நிகழ்ச்சிகளையும் இந்த ஆண்டின் முக்கியமான வாய்ப்புகளாகக் குறிப்பிடுகிறார். ‘‘விகடனும் ‘நாணயம் விகடன்’ விருது விழான்னா என்னையே கூப்பிடறது ரொம்பவே பெருமையா இருக்கு’’ என்கிறவர், ‘‘மொத்தத்துல கொஞ்சம்கூட ஓய்வு எடுக்க முடியாதபடி ஓட்டமாகக் கடந்தது வருஷம்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோக்களைக் கௌரவிக்கும் ‘ஜீ குடும்ப விருதுகள்’ விழா ஜனவரி 7ம் தேதி சென்னைப் பூந்தமல்லியில் அமைந்துள்ள ஈ.வி.பி.வளாகத்தில் நடக்கவிருக்கிறது. ‘வீடு’ அர்ச்சனா, ‘மாரி’ சீரியல் டீம், கார்த்திக்கின் கம் பேக் மூலம் இப்போது ஓரளவு ரேட்டிங் பெற்று வரும் கார்த்திகை தீபங்கள் யூனிட் என பலரும் விருதுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

டாஸ்க் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று மிமிக்ரி செய்து அசத்திய அமுதவாணனின் மகன் இளந்தமிழன், ஏற்கெனவே ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் பெரியார் வேடத்தில் அசத்தி தமிழக முதல்வர் உட்பட பலரிடமும் பாராட்டு பெற்ற அதே பையன்தான். சீசன் 4ன் வின்னரும்கூட. அதே ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி பிரதமர் மோடியைக் கலாய்த்ததாக ஒரு சர்ச்சை எழ, அதனாலேயே தன் மகனைப் பொதுவெளியில் அடையாளப்படுத்த வேண்டாமென அப்போது கேட்டுக்கொண்டாராம் அமுதவாணன். எனவே அன்று யாருக்கும் இவரைத் தெரியவில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் டாஸ்க்கில் அசீம், ரச்சிதா, ஷிவின் ஆகிய மூவர் குறித்தே அதிக எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்தன. அசீமைச் சந்திக்க அவர் மகன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், நீதிமன்ற உத்தரவுப்படியே மாதம் இருமுறை மகனைப் பார்த்துவந்தார் அசீம். இந்தப் பின்னணியில், தன்னுடன் இருக்கும் மகனை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப அசீமின் முன்னாள் மனைவி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவேதான் அசீமின் தம்பியும் நெருங்கிய நண்பரும் நிகழ்ச்சிக்குச் சென்றிருக் கிறார்கள். ரச்சிதாவைப் பார்க்க அவர் கணவர் தினேஷ் செல்லலாமென எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் ரச்சிதாவின் அம்மாவும் சகோதரருமே சென்று வந்தனர். ஷிவின் விஷயத்திலுமேகூட அவரின் பெற்றோரை வரவழைக்கவே சேனல் தரப்பில் முயற்சி செய்திருக் கிறார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லையாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் அரசியல் பிரமுகர் பேசி, அது சர்ச்சையானதும் பின்வாங்கியது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டதில் சிலர் ரொம்பவே அப்செட்டாம். ‘இனி விவாதமென்றால் கட்சி சார்பாக இவர்கள்தான் கலந்துகொள்வார்கள் எனப் பட்டியல் வந்ததன் பின்னணி இதுதான்’ என்கிறார்கள்.