Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சைத்ரா ரெட்டி

கஜினி முகமதுபோல பல முறை முயற்சி செய்தே சின்னத்திரைக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார் ‘எதிர் நீச்சல்’ மதுமிதா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்கள்மீது அதிக அக்கறை காட்டுகிற ஒருவராக இருக்கிறார் சைத்ரா ரெட்டி. ரசிகர்கள் என யாராவது ஏதாவது கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றித் தருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து, முடித்துக்கொடுத்துவிடுகிறாராம். செய்த உதவிகளைப் பொது வெளியிலும் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தன்னுடைய பதினாறு வயதில் இரண்டாவது ஹீரோயினாக தெலுங்குப் படம் ஒன்றில் நடித்தாராம் ஸ்ரீலேகா ராஜேந்திரன். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தெலுங்கு சினிமாப் பக்கம் செல்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் ‘மங்கள வாரம்’ என்கிற அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்குத் திரைப்பட உலகில் அதிக வாய்ப்புகள் வரலாம் எனச் சொல்கிறார்.

‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 4 வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. நிகழ்ச்சிக்கான புரொமோ ஷூட் முடிந்துவிட்டது. போட்டியாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாம். வழக்கமான விஜய் டி.வி முகங்கள் இந்த முறை குறைவாகவே இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. போட்டியாளர்களாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்த இர்ஃபான் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆரம்பத்தில் சன் டி.வி-யில் தொகுப்பாளராகக் கலக்கியவர் நிஷா. பிறகு சீரியல் நடிகையாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார். விஜய் டி.வி-யில் ‘தெய்வம் தந்த வீடு’ உள்ளிட்ட சில சீரியல்கள், தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல் என ஒரு ரவுண்ட் வந்தவர், இப்போது ‘திருமகள்’ தொடரில் அம்மாவாக நடிக்கிறார். இந்தக் கேரக்டருக்குக் கேட்டதும் முதலில் ரொம்பவே தயங்கினாராம். ஆனால் முதன்முதலில் முகம் காட்டிய சேனலுக்குத் திரும்ப ஒரு வாய்ப்பாகக் கருதியதால், அம்மா வேடத்தை ஏற்றுக்கொண்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கஜினி முகமதுபோல பல முறை முயற்சி செய்தே சின்னத்திரைக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார் ‘எதிர் நீச்சல்’ மதுமிதா. ‘‘ஆமாங்க, சரியா 17 முறை ‘நடிக்கறேன்’னு ஆடிஷன் போய் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டேன். அப்பல்லாம் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஆனா ஒரு கட்டத்துல உள்ளுக்குள் ஒரு வைராக்கியம் வந்துச்சு. நெகட்டிவ் எண்ணங்களைத் தூக்கி எறிஞ்சுட்டு, தொடர்ந்து ஆடிஷன் போய்த்தான் இன்னைக்கு ஒரு நடிகையா உங்க முன்னாடி நிக்குறேன்’’ என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘நாற்பது கதைகளைக் கேட்டுத் தூங்கியவருக்கு இந்தக் கதையைக் கேட்டப்ப தூக்கம் வரலையாக்கும்' என மீண்டும் அந்த நடிகரைக் கலாய்த்துக் காயப் போடுகிறார்கள். முதல் படம் சரியாகப் போகாதபோதும் இப்படித்தான் கிண்டல் செயதார்களாம். மலைவாசஸ்தலத்தில் எடுக்கப்பட்ட படத்தை அவர் ரொம்பவே நம்பியிருந்த நிலையில், இந்தப் படத்திலும் இவரது கேரக்டர் சர்ச்சைக்குள்ளானதில் ரொம்பவே நொந்துபோய் இருக்கிறாராம்.