சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஹீமா பிந்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீமா பிந்து

சினிமா தனக்கு ஓய்வு கொடுத்துவிட்டது என நினைத்தே சீரியல் ஏரியாவுக்கு வந்தார் ‘மகாநதி’ சங்கர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சமூக வலைதளங்களில் தேவையற்ற கமென்டுகள் மூலம் தொந்தரவு தருபவர்களை உடனுக்குடன் பிளாக் செய்துவிடுகிறார் நீலிமா ராணி. ‘‘உண்மையான ரசிகர்களைச் சந்திக்கவே சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். அதனாலதான் இந்த நடவடிக்கை’’ என்கிறார். நீலிமாவை நன்கு தெரிந்த அவர் நண்பர்கள் இன்னொரு தகவல் சொல்கிறார்கள். அது நீலிமாவின் கோபம் குறித்தது. ஒரு முறை யாராவது ஏதாவது செய்து அவரை ஆத்திரப்படுத்தியிருந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் அதை மறக்கவே மாட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமிழ் சீரியல்களின் சிறந்த வில்லிகளைப் பட்டியலிட்டால், ராணியைத் தவிர்க்க முடியாது. 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது இவரது சின்னத்திரைப் பயணம். நெகட்டிவ் கேரக்டர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இவரைக் கூப்பிடுகிறார்கள். ஆனால் இவரது நிறைவேறாத ஒரு விருப்பம், காமெடி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். சில வருடங்களுக்கு முன் ‘ப்ராங்க் பண்ணுகிறோம்’ என சேனல் ஒன்று இவரிடம் செய்த கலாட்டாவில் விபத்துக்குள்ளாகி பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தார். அப்போது முதல் டி.வி சேனல்கள் நேர்காணல் எனக் கூப்பிட்டால் மறுத்துவந்தாராம். அந்தக் கசப்பான அனுபவத்தைத் தற்போது மறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, ப்ராங்க் செய்த அதே குழும சேனலில் நீண்டகாலமாகக் கலந்து கொள்ளக் கேட்டு வந்த ஒரு நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சென்று வந்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆரம்பத்தில் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்த சித்தார்த் குமரன், அந்த வேலையை உதறிவிட்டு டி.வி-க்கு வந்தார். பல ஹிட் சீரியல்கள் மூலம் ஒரு டி.வி நடிகராக ரசிகர்கள் மனதில் ஓரளவு இடம் பிடித்துவிட்டாலும், பெரும்பாலான சீரியல் நட்சத்திரங்களின் கனவான சினிமாதான் இவருக்கும் இலக்காக இருந்ததாம். அந்தக் கனவு நனவாகும் நாள் நெருங்கி விட்டது போலவே தெரிகிறது. விரைவில் இவரது சினிமாப் பயணம் குறித்த அப்டேட் வெளியாகும் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சொந்த வாழ்க்கையில் சந்தித்த சில சங்கடமான நிகழ்வுகளால் கடந்த சில மாதங்களாக அப்செட்டில் இருந்த ஹீமா பிந்து மறுபடியும் நடிக்க வந்துவிட்டார். இப்போது நடிக்கும் ‘இலக்கியா’ தொடரும், தன் முதல் சீரியலான ‘இதயத்தைத் திருடாதே’ போலவே தனக்கு நல்ல வரவேற்பைத் தருமென நம்புவதாகச் சொல்கிறவர், இனி முழுக்க சீரியல், சினிமா என நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமா தனக்கு ஓய்வு கொடுத்துவிட்டது என நினைத்தே சீரியல் ஏரியாவுக்கு வந்தார் ‘மகாநதி’ சங்கர். ஆனால் சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் நடித்து, அவரது கேரக்டரும் படம் முழுக்க வந்து ரசிகர்கள் மனதில் பதிந்திருப்பதால், சினிமாவில் கேரக்டர் ரோலில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாமென நம்புகிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

ஒரு காலத்தில் மண் மணம் கமழ நிகழ்ச்சிகளை வழங்கிய தொலைக்காட்சி அது. இந்த வருடப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒரு தொகுப்பாளினி கிடைக்காமல் நாலாபுறமும் வலை வீசினார்களாம். அந்தத் தொலைக்காட்சியால் வளர்ந்த சிலரிடம் பேசியபோது, அவர்களுமே ஊதியம் பெரியதாகக் கேட்டதாகத் தெரிகிறது. `மக்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள் பாருங்க' என நொந்து புலம்பியிருக்கிறார்கள்.