Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

‘நான் நேஷனல் லெவல் த்ரோ பால் பிளேயர். மூணு முறை இந்தியாவை ரெப் ரெசென்ட் பண்ணி விளை யாடியிருக்கேன்.

சேனல் சைட் டிஷ்

‘நான் நேஷனல் லெவல் த்ரோ பால் பிளேயர். மூணு முறை இந்தியாவை ரெப் ரெசென்ட் பண்ணி விளை யாடியிருக்கேன்.

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

அந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா கல்யாணத்துக்கும் ஓகே! - பூவே உனக்காக’ ராதிகா ப்ரீத்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் `பூவே உனக்காக' சீரியலின் நாயகி, ராதிகா ப்ரீத்தி. `எம்பிரான்' படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் இவர்.

`` ‘ப்ரீத்தி’ என் அம்மா பெயர்... அம்மா பெயரை சேர்த்து வச்சுக்குறது எவ்ளோ அழகா இருக்குல்ல... அதுக்குன்னு அப்பா வைப் பிடிக்காதான்னு கேட்காதீங்க. அண்ணன்தான் அப்பா பெயரை பின்னாடி போட்டுக்கிறானே... நான் அம்மா பொண்ணு...’’ கலகலவென பேசும் ராதிகாவுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. ‘‘நல்லவேளை கொரோனா நெகட்டிவ்... தப்பிச்சிட்டேன்’’ என எக்ஸ்ட்ரா எனர்ஜி யுடன் பேசுகிறார் ராதிகா.

‘‘சீரியல்ல என் பெயர் பூவரசி. அது பூவச்சி அக்காவா மாறிடுச்சு. பக்கத்து வீட்டு அக்காவாவே நினைச்சு உரிமையா சில குழந்தைங்க அப்படித்தான் என்னை கூப்பிடுறாங்க. கர்நாடகாவுல பிறந்து வளர்ந்த எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் கிட்டயிருந்து இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சே பார்க்கல’’ என்பவர், நடிகையாவதற்கு முன் ஸ்போர்ட்ஸ் வுமனாம்.

‘‘நான் நேஷனல் லெவல் த்ரோ பால் பிளேயர். மூணு முறை இந்தியாவை ரெப் ரெசென்ட் பண்ணி விளை யாடியிருக்கேன். ஆனா, எங்க அப்பாவுக்கு ஏனோ பிடிக்கல. அதனால நடிகை ஆயிட்டேன். இந்த தேசம் ஒரு ஸ்போர்ட்ஸ் வுமனை மிஸ் பண்ணிருச்சு’’ எனக் கலாய்க்கிறார்.

சேனல் சைட் டிஷ்

உங்க கையில போட்டுருக்குற டாட்டூ பின்னாடி ஏதாவது கதை இருக்கா?

என் அண்ணனுக்கு டாட்டூஸ்னா ரொம்ப பிடிக்கும். அவன் மட்டும் டாட்டூ போட்டுட்டு வீட்டுக்குப் போனா அம்மா அப்பா தொலைச்சிடுவாங்க. அதனால பிளான் பண்ணி என்னையும் உள்ள இழுத்து விட்டுட்டான். சின்ன வயசுல இருந்தே எனக்கு நோட்டுல கிறுக்குற பழக்கம் இருக்கு. எப்போ கிறுக்குனாலும் அதுல தவறாம ஸ்டார்ஸ் வரைவேன். அதையே டாட்டூவா போட்டுட்டேன். இன்னொரு கைலயும் போட்டுக்கலாமேன்னு பட்டாம்பூச்சி டாட்டூ குத்தினேன். அது கண்றாவியாயிடுச்சு. இதுல என்னத்தை கதை இருக்கப்போகுது.

ரியல் லைஃப்ல நீங்க எப்படி..?

ரொம்ப பிடிச்சவங்ககிட்ட ஹா... ஹா... ஹாசினி டைப். உண்மையைச் சொல்லணும்னா எனக்கு மேக்கப்ல எல்லாம் ஆர்வமே கிடையாது. எங்கம்மாதான் என்னைத் திட்டித்திட்டி மேக்கப் பண்ண வைப்பாங்க. நம்ம டிசைனே அப்படிதாங்க.

லவ் மேரேஜா... அரேன்ஜ்டு மேரேஜா... எது ஓகே?

லவ்வோ... அரேன்ஜ்டோ... அது மேட்டர் இல்ல. கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அம்மா அப்பாவை என்கூடவே வெச்சு, கவனமா பார்த்துக்கணும். அது மட்டும் தான் கண்டிஷன். மத்தபடி எதுவானாலும் ஓகேதான்.

சேனல் சைட் டிஷ்

எப்படியிருந்த நான் இப்படி ஆயிருக்கேன்... - செலிபிரிட்டிகளின் வெயிட் லாஸ் சீக்ரெட்ஸ்

ஒரு மாதத்துக்கு முன்னால் பார்த்தபோது வேறுமாதிரி இருந்திருப்பார்கள். திடீரென ஆளே மாறிப்போய் அசத்துவார்கள். செலிபிரிட்டிகளுக்கு மட்டும் எப்படி வெயிட் லாஸ் இவ்வளவு ஈஸியாக இருக் கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். எடையைக் குறைக்க இவர்கள் என்ன வெல்லாம் செய்கிறார்கள்? சின்னத்திரை பிரபலங்கள் சிலர் பகிர்ந்த தகவல்கள் உங்களுக்காக...

சேனல் சைட் டிஷ்

கிருத்திகா அண்ணாமலை

“நான் மொத்தம் 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். குழந்தை பிறந்த பிறகு, 83 கிலோ எடையில இருந்தேன். நிறைய கேலி, கிண்டல்களுக்கு ஆளானேன். வெயிட்டைக் குறைக்கணும்னு முடிவெடுத்தேன். ஒவ்வொரு டயட்டீஷியன் ஒவ்வொரு டயட்டை பரிந்துரை பண்ணாங்க. கடைசியா நானே என் உடம்புக்கு ஏத்தபடி, ஒரு டயட்டை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.

நடிப்புலேருந்து ஆறு மாசம் பிரேக் எடுத்தேன். காலையில யோகா, வொர்க் அவுட் முடிச்சுட்டு வழக்கமான வேலைகள் பார்ப்பேன். மாலையில ஒரு மணி நேரம் வொர்க் அவுட் . அரிசி சாப்பாட்டை முழுக்க தவிர்த்தேன். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துகிட்டேன். வெயிட் லாஸும் விரதம் இருக்கிறது மாதிரிதான். மனசும் உடம்பும் ஒத்துழைக்கணும். சில அயிட்டங்களைக் கண் முன்னே காட்டி, ‘ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்தா ஒண்ணும் ஆயிடாது’ன்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்வாங்கதான். ஆனால், அந்த ஒரு ஸ்பூன் அடுத்தடுத்து சாப்பிடுறதுக்கான ஆசையைத் தூண்டி விடும். அதனால் யார் கட்டாயப்படுத்தி னாலும், நான் கட்டுப்பாடாவே இருப்பேன். இப்போ

63 கிலோ எடைக்கு வந்துட்டேன். இப்பவும் டயட்டையும் வொர்க் அவுட்டையும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன்.’’

- வெயிட் லாஸ் குறித்த இவரது முழு பேட்டியை https://bit.ly/3hqI9A0 இந்த லிங்க்கில் படிக்கவும்

சேனல் சைட் டிஷ்

ஷெரின்

“பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் வெயிட்டைப் பார்த்து நிறைய பேர் என்னைக் கிண்டல் பண்ணாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, எடையைக் குறைக்கும் முயற்சியில இறங்கி, 10 கிலோ குறைச்சுருக்கேன். வொர்க் அவுட்டையும் டயட்டையும் ஃபாலோ பண்ணேன். எடையைக் குறைக்க பட்டினி இருக்கணும்னு அவ சியம் இல்ல. அளவா சாப்பிட்டாலே வெயிட் லாஸ் சாத்தியம்தான்.

வழக்கமாக சாப்பிடறதையே அஞ்சு வேளை களா பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சேன். இனிப்பு அயிட்டங்களை முழுக்கத் தவிர்த்துட்டேன். பழங்கள், நார்ச்சத்துள்ள உணவை அதிகமா

எடுத்துக்கிட்டேன். தினமும் எத்தனை கலோரிகள் சாப்பிடறேனோ அதைக் கரைக்கிற அளவுக்கு வொர்க் அவுட் பண்ணிடுவேன். உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது ஒரு டயட்டை ஃபாலோ பண்ணி வெயிட் குறைச்சிருக்காங்கன்னு

அதையே நீங்களும் ஃபாலோ பண்ணாம, உங்க உடம்புக்கேத்த டயட் மற்றும் வொர்க் அவுட்டை தேர்வு செய்யுங்க.”

சேனல் சைட் டிஷ்

திவ்யா கணேஷ்

“சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சபோது சரியான எடையிலதான் இருந்தேன். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா எடைகூட ஆரம்பிச்சது. பழைய போட்டோ வையும், லேட்டஸ்ட் போட்டோவையும் வெச்சு பார்த்தப்போ தான் எவ்வளவு வெயிட் போட்டுருக்கேன்னு தெரிஞ்சது. நிறைய போராட்டங்களுக்குப் பிறகுதான் சீரியல்ல நடிக்குற வாய்ப்பே கிடைச்சுது. எடை அதிகமான காரணத் துக்காக வாய்ப்புகளை இழந்துடக் கூடாதுன்னு வெயிட் லாஸ் பண்ண ஆரம்பிச்சேன். வெளியிடங் கள்ல சாப்பிடறதை முதல்ல நிறுத்தினேன். ஷூட்டுக்குப் போகும்போதும், அடுப்பு எடுத்துட்டுப் போய் நானே சமைச்சு சாப்பிடுவேன். ஷூட் இல்லாத நேரமெல்லாம் ஜிம்லதான் இருப்பேன். சைக்கிளிங் போவேன்.

என்னோட வெயிட் லாஸுக்கு முக்கியமான காரணம் ஸ்கிப்பிங்தான். தினமும் காலையில் 500 முறை ஸ்கிப்பிங் பண்ணுவேன். பச்சைக் காய்கறிகள் அதிகம் சாப்பிட ஆரம்பிச்சேன். ஆறு கிலோ வரை குறைச்சதுல செம ஹேப்பி.”