Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரேஷ்மா  - நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா - நட்சத்திரா

நான் ‘ஜோடி' நிகழ்ச்சியில் ஆடியபோது ‘அப்படி ஆடக் கூடாது, இப்படி ஆடக் கூடாது' எனப் புகார் வாசித்ததே சங்க ஆட்கள்தான்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நான் ‘ஜோடி' நிகழ்ச்சியில் ஆடியபோது ‘அப்படி ஆடக் கூடாது, இப்படி ஆடக் கூடாது' எனப் புகார் வாசித்ததே சங்க ஆட்கள்தான்.

Published:Updated:
ரேஷ்மா  - நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா - நட்சத்திரா
ரேஷ்மா
ரேஷ்மா

‘செம்பருத்தி' சபானா-ஆர்யன் திருமணத்துக்குப் பெரிதும் உதவினார் என நடிகை ரேஷ்மாவின் பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம். அதேபோல் மன அழுத்தத்துக்கு ஆளான ஸ்ரீநிதியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கிடைக்கச் செய்திருக்கிறார். ‘‘ரேஷ்மா மற்றும் அவரின் கணவர் மதன் இருவரும் செய்த உதவிகளை மறக்கவே முடியாது'’ என்கிறார் ஸ்ரீநிதியின் அம்மா.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

குழந்தைப் பருவத்தில் தன்னைத் தூக்கி வளர்த்த தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக சில தினங்களுக்கு முன் அவசரமாகத் திருமணம் செய்துகொண்டார் நட்சத்திரா. தன்னுடைய ஆசை நிறைவேறிய திருப்தியோ என்னவோ, நட்சத்திராவின் திருமணம் முடிந்த மூன்றாவது நாள் அந்தத் தாத்தாவும் இறந்துவிட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மனைவி பெயரில் கிளினிக் ஆரம்பித்துச் சில மாதங்களே ஆன நிலையில், பெரிய மருத்துவமனை ஒன்றில் பணி கிடைத்துள்ளது, சஹானாவின் கணவருக்கு. வீடு உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பணி என்பதால், சொந்த கிளினிக்கை மூடிவிட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டு போடப் போகவில்லையா என ஆனந்தியிடம் கேட்டதற்கு, ‘‘நான் ‘ஜோடி' நிகழ்ச்சியில் ஆடியபோது ‘அப்படி ஆடக் கூடாது, இப்படி ஆடக் கூடாது' எனப் புகார் வாசித்ததே சங்க ஆட்கள்தான். இன்றைக்கு சீரியல்களிலேயே கிளாமர் காட்சிகள், ரியாலிட்டி ஷோக்களில் உருவக் கேலி போன்ற விஷயங்கள் சாதாரணமாக நடக்கின்றன. இப்போது யாரும் யாரையும் கேள்வி எழுப்புவதில்லை. அதுவும் போக நான் சங்க உறுப்பினராகிப் பல வருடங்கள் ஆகியும் இதுவரை உறுப்பினர் அட்டைகூட என் கைக்கு வரவில்லை. பிறகு எதற்கு சங்கச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட வேண்டும்'’ என எதிர்க் கேள்வி கேட்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கோபி’ என்ற பெயருக்கும் சீரியல்களுக்கும் ஒற்றுமை இருக்கிறதுபோல! முன்பு சீரியல் ரசிகர்களால் ‘கோபி’ என கேரக்டர் பெயர் கொண்டே அழைக்கப்பட்டு வந்தார் இயக்குநர் திருமுருகன். இப்போது திருமுருகனின் இடத்தைப் பிடித்துவிட்டார் ‘பாக்யலட்சுமி’ சதீஷ். இவரையும் பொது இடத்தில் பார்க்கிற ரசிகர்கள் ‘கோபி’ என்றே அழைக்கிறார்களாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

மலைப்பிரதேசத்தில் தனியாக இருந்த நடனக்காரரை ஒரேயொரு நிகழ்ச்சி பிரபலமாக்கிவிட்டது. நிகழ்ச்சி மூலம் புதிய நட்பு கிடைத்ததும், மலையில் ஆதரவு தந்தவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறாராம். தற்போது மலை நகரிலிருந்து தலை நகருக்கு இடம்பெயர்ந்திருப்பதுடன் தலைநகரின் புற நகரில் அந்தப் புதிய நட்புடன் ஒரே வீட்டில் வாழத் தொடங்கி விட்டாராம். முறைப்படியான இல்வாழ்க்கைத் தொடக்கம் குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்கிறார்கள்.