சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

மதன் பாண்டியன் - ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
News
மதன் பாண்டியன் - ரேஷ்மா

காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு முதன்முறையாக ‘அபி டெய்லர்ஸ்’ சீரியலில் சேர்ந்து நடிக்கிறார்கள் மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக்பாஸ் காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா, தற்போது அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் காயத்ரியின் அக்காவுடன் வசித்துவருகிறார். சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு இவர்கள‌து வீட்டில்தான் தங்கினாராம். சிகிச்சை முடியும் வரை ரஜினிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் இவர்களே உடனிருந்து செய்து கொடுத்தார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு முதன்முறையாக ‘அபி டெய்லர்ஸ்’ சீரியலில் சேர்ந்து நடிக்கிறார்கள் மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி. கடந்த ஜனவரி முதல் தேதி காதலை அறிவித்தபோது ‘ஆறு மாதத்தில் கல்யாணம் இருக்கலாம்’ என்றார்கள். கோவிட் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை காரணமாக இப்போதைக்குத் திருமணத் தேதி குறித்து முடிவெடுக்கப் போவதில்லை என்கிறார்கள். இந்த ஆறு மாதத்தில் பரஸ்பரம் நிறைய பரிசுகளைப் பரிமாறிக்கொண்டார்களாம்.

கொரோனா 3வது அலை பீதியில் பிக் பாஸ் தமிழ் இவ்வாண்டு இருக்குமா இல்லையா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையில் ‘பிக் பாஸ் இனி ஓ.டி.டி-யில் ஒளிபரப்பாகிறது’ என்கிற செய்தி சமீபமாக வட்டமடிக்கிறது. அதுவும் கலர்ஸ் தமிழ் சேனலின் தளமான ‘VOOT’டில் ஒளிபரப்பாக இருக்கிறது என அந்தத் தகவல் மேலும் குழப்ப, விசாரித்தால், தமிழ் தவிர்த்துப் பிற மொழிகளின் பிக் பாஸை அவ்வாறு ஒளிபரப்பத் திட்டமிட்டிருப்ப‌தாகச் சொல் கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கணவருடன் பிரச்னை’ எனக் கிளம்பிய தகவல் அனிதா சம்பத்தை ரொம்பவே அப்செட் செய்துவிட்டதாம். ‘அவளைப் பிடிக்காத சிலர் சோஷியல் மீடியா மூலம் கிளப்பி விடுகிற வதந்தி இது’ என இந்தத் தகவலை மறுத்திருக்கிற அனிதாவின் தாய், ‘ஏற்கெனவே அவ அப்பாவை இழந்த சோகத்துல இருந்து இன்னும் மீளலை; அதனால ஹேட்டர்ஸ் தயவு செய்து அவளை விட்டுடுங்க’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி’ தொடரில் நடித்த கார்த்திக் தன் ரசிகர்களிடமிருந்து பணம் திரட்டிப் படமெடுக்கப்போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். படத்தின் பட்ஜெட் சுமார் இரண்டு கோடி என அவர் திட்டமிட, இப்போது சில லட்சங்கள் மட்டுமே ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக் கிறதாம். ‘அந்த சீரியல்ல இருந்து அவரை சேனல் வெளியேத்தலை; அவராதான் போனார், இப்ப இப்படியொரு வீடியோவை வெளியிட்டு, ‘என்னை முன்னேற விடாம சதி செய்றாங்க’ என்கிற ரீதியில் புலம்பிக் கொண்டி ருக்கிறார், தேவையா இது’ என ‘உச்’ கொட்டுகிறார்கள் அவருடன் நடித்தவர்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பலரையும் ஆட்டுவிக்கிற‌ ஆட்டக்காரர் அவர். ஆனால் வீட்டில் மனைவி பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியவில்லையாம். ‘பெரிய பெரிய நடிகர்களை யெல்லாம் ஆட வெச்சு பெரிய ஆளானது சந்தோஷம்தான். ஆனா வீட்டுக்காரிக்கு அடங்கிப் போய் எங்களை எட்டிப் பார்க்கவே வர்ற தில்லை’ என வருத்தப்படு கிறார்களாம் அவரின் பெற்றோர்.