லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

நான் பக்கா ஹைதராபாத் பொண்ணு. ரோஜா சீரியல் வாய்ப்பு வந்தபோது தமிழ் தெரியாதேன்னு ரொம்பவே பயந்தேன்.

சத்தியமா நான் சிங்கிள்தாங்க... ‘ரோஜா’ பிரியங்கா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் `ரோஜா’ சீரியலில் நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது. `காஞ்சனா 3’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர், இப்போது ‘ரோஜா’ சீரியலில் பிசி. சீரியலில் ‘அர்ஜுன் சார்’ என புருஷனையே ‘சார்’ போட்டுக் கூப்பிடுபவர், `‘அதெல்லாம் ஸ்க்ரீன்லதான்... நிஜத்தில் நான் ரொம்பவே மாடர்ன் கேர்ளுங்க’' எனச் சிரிக்கிறார் ரோஜா.

எப்படி ஆரம்பிச்சுது உங்க மீடியா பயணம்?

சின்ன வயசுலேருந்தே நிறைய ஸ்டேஜ் ஷோஸ் பண்ணியிருக்கேன். அது மூலமாதான் நடிப்புக்குள்ள வந்தேன். காலேஜ் டைம்ல என்னோட உயரத்தையும் லுக்கையும் பார்த்துட்டு, ஏன் நீ மாடலிங் பண்ணக் கூடாதுன்னு ஃபிரெண்ட்ஸ் உசுப் பேத்த... `பண்ணித்தான் பார்ப்போமே'னு மீடியாவுக்குள்ள வந்தேன். கன்னடத்துல படங்களும் சீரியல்களும் பண்ணேன். ஆனா, தமிழ்ல நடிக்க வருவேன்னு நானே கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கல.

தமிழ்ல பேச எப்படிக் கத்துக்கிட்டீங்க..?

நான் பக்கா ஹைதராபாத் பொண்ணு. ரோஜா சீரியல் வாய்ப்பு வந்தபோது தமிழ் தெரியாதேன்னு ரொம்பவே பயந்தேன். ரோஜாவுக்காகத்தான் இப்போ அம்மாகூட சென்னையில இருக்கேன். எல்லார்கூடவும் பேசிப் பேசியே நல்லா இம்ப்ரூவ் ஆயிட்டேன்.

சேனல் சைட் டிஷ்

திடீர்னு டைம் மெஷின் உங்க கைக்கு கிடைச்சா எதை மாத்துவீங்க?

என்னோட எந்தக் கஷ்டத்தையும் சோகத்தையும் வெளியில காட்டிக்கவே மாட்டேன். எங்க வீட்டுல மொத்தம் மூணு ராணிங்க. அதுல நான்தான் மூத்தவ. நான் ஸ்கூல் படிச்ச கால கட்டத்துல ஃபைனான்ஷியலா ரொம்பவே கஷ்டப்பட்டோம். எனக்கு டான்ஸ் ஆடுறதுன்னா ரொம்ப பிடிக்கும். டிவியில ஏதாவது பாட்டு ஓடும்... அதைப் பார்த்து அப்படியே ஆடுவேன். அப்படிதான் எங்க அம்மா டான்ஸ் ஷோஸ்ல என்னைக் கலந்துக்க வச்சாங்க. அந்த ஷோஸ்ல வந்த பணம்தான் எனக்கு எல்லாமே.

ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாததால கிளாசுக்கு வெளியே நின்ன நாள்களும் இருந்திருக்கு. என்னோட ரெண்டு குட்டி தங்கச்சிங்க படிப்பு செலவையும் நானே பார்த்துக்கிட்டேன். என் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். குடும்ப சூழல் சரியானதும் இன்டீரியர் டிசைனிங் படிப்பையும் இப்போ முடிச்சிட்டேன். எத்தனை சவால்கள் வந்தாலும் சிரிச்சுகிட்டே இருப்பேன். அதுதான் என்னோட ஆயுதம். நான் நினைச்சதுக்கும் மேல இப்போ எனக்கு பணமும் புகழும் இருக்கு. சந்தோஷமும் கவலையும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. எதையாவது மாத்தியே ஆகணும்ங்குற அளவுக்கெல்லாம் எனக்கு எதுவுமில்லை.

நிஜமாவே நீங்க சிங்கிள்தானா?

என்னோட பர்த்டே செலிபிரேஷன்ல ஃபிரெண்டோட கேக் கட் பண்ணுற போட்டோவை இன்ஸ்ட்டாவுல போட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு அவன்தான் என் பாய் ஃபிரெண்டுன்னு நெனச்சு ஒரே வாழ்த்து மழை... எனக்கான நபரை நான் இன்னும் சந்திக்கலை. சத்தியமா நான் சிங்கிள்தாங்க!

என்ன வாங்குவீங்க... எங்கே வாங்குவீங்க...?சின்னத்திரை நடிகைகளின் ஷாப்பிங் அனுபவங்கள்

பிரபலங்கள் எங்குதான் ஷாப்பிங் செய்வார்கள்... அடிக்கடி என்ன வாங்குவார்கள்..? சாமானியர்களின் மண்டையைக் குடைகிற இந்தக் கேள்விக்கான பதிலை சீரியல் நடிகைகள் சிலரிடம் கேட்டோம்...

சேனல் சைட் டிஷ்

பாப்ரி கோஷ்

“எனக்கு வெஸ் டர்ன் டிரஸ் பிடிக்கும். ஆனா லும் சீரியல்ல புடவை தான் என் னுடைய காஸ்டி யூம். நாயகி சீரி யல்ல நான் கட்டின புடவைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சுது. சென்னையில செளகார் பேட்டை தான் என் ஷாப்பிங் ஏரியா. ரொம்ப கிராண்டான டிரஸ்ஸைகூட குறைஞ்ச விலையில் வாங்கலாம். வித்தியாசமான கலெக்‌ஷன்களும் கிடைக்கும்.

சீரியல்ல நான் கட்டுற புடவைகள் எல்லாம் 100 ரூபாய்தான். பிராண்டு பார்த்து டிரஸ் எடுக்குற பழக்கம் எனக்கு இல்ல. மாசத்துக்கு ஒரு முறைதான் ஷாப்பிங் போவேன். ஷாப்பிங் போனா, தேவையில்லாம பொருள்களை வாங்கிக் குவிக்க மாட்டேன். எத்தனை டிரஸ் எடுக்கணும், அதுக்கு மேட்ச்சிங் என்ன வாங்கணும்னு பிளான் பண்ணி, அதுக்கான பட்ஜெட் ஒதுக்கிதான் ஷாப்பிங் போவேன். சிலர் பிளவுஸுக்கு நிறைய செலவழிப் பாங்க. நான் ஒரு பிளவுஸ் ரெடி பண்ணி ஆறு புடவைகளுக்கு மிக்ஸ் மேட்ச் பண்ணி யூஸ் பண்ணுவேன். சிம்பிளான அக்ஸசரீஸ்தான் என் சாய்ஸ். அடிக்கடி புது காஜல் வாங்கிட்டே இருப்பேன். என் ஹேண்ட் பேகில், காஜலும், மர சீப்பும் எப்போதும் இருக்கும்.”

சேனல் சைட் டிஷ்

ஸ்ரீதேவி அசோக்

``சீரியல்களுக்கு நடிக்க வந்த புதுசுல என் அம்மாதான் எனக்கு ஸ்டைலிஸ்ட். சீரியல்ல வரும் சீன்கள் மட்டும் சொல்லிருவேன். அதுக்குப் பொருத்தமான டிரஸ்ஸையெல்லாம் அம்மாவே வாங்கிட்டு வந்துருவாங்க. இப்போ என்னுடைய ஷாப்பிங் பெரும்பாலும் ஆன்லைன்லதான். நிறைய வெப்சைட்கள் கண்டுபிடிச்சு வெச்சுருக்கேன். தேவைப்படும் போது ஷாப்பிங் பண்ணிப்பேன்.

சீரியல்கள்ல நான் நடிச்ச எல்லா கேரக்டருக்குமே புடவைதான் காஸ்ட்யூம். அதனால் புடவை எனக்கு வசதியான டிரஸ்ஸா மாறிருச்சு. சில்க், காட்டன், லினன் புடவைகள் என்னுடைய ஃபேவரைட். போட் நெக், ஹை காலர், டிசைனர் பிளவுஸ்னு வெரைட்டி காட்டப் பிடிக்கும். புடவைகளுக்குப் பொருத்தமான அக்ஸசரீஸ் ஷாப்பிங் அடிக்கடி பண்ணுவேன். அதிக விலை கொடுத்து டிரஸ் வாங்கி, அதை வார்ட்ரோப்பில் பத்திரப்படுத்துறதை விட குறைஞ்ச விலையில், அடிக்கடி பயன்படுத்த கம்ஃபர்ட்டான ஆடைகள்தான் என்னுடைய சாய்ஸ். வாட்ச் ரொம்ப பிடிக்கும். அதனால நான் அடிக்கடி ஷாப்பிங் பண்ணும் பொருள் வாட்ச்.’’

சேனல் சைட் டிஷ்

ரேகா

``தெய்வமகள் சீரியல்ல என் னுடைய உடைகளை நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அதெல்லாம் டைரக்டர் டீமின் சாய்ஸ்தான். நிஜத்தில் போல் டான கலர்கள்தான் எனக்குப் பிடிக்கும். ஷாப்பிங்னாலே நான் ரொம்ப குஷியாயிடுவேன். எந்த ஊர், எந்த நாட்டுக்குப் போனாலும் ஷாப்பிங் பண்ணாம வர மாட்டேன். டிரெடிஷனல், டிரெண்டினு ரெண்டு விதமான ஆடைகளும் பிடிக்கும். ஸ்டோன் ஜுவல்லரி, ஃபேன்ஸி ஜுவல்லரி ரொம்ப பிடிக்கும். கலர், டிசைன்னு நிறைய சொதப்பல்கள் இருப்பதால பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் பண்ணமாட்டேன். நேர்ல போயி டிரையல் பார்த்து தான் வாங்குவேன். எனக்கு லிப்ஸ்டிக் ரொம்ப பிடிக்கும். பிங்க் , சிகப்பு நிற லிப் ஷேட்கள் எப்போதும் என் ஹேண்ட் பேக்ல இருக்கும். அடிக்கடி லிப்ஸ்டிக் வாங்கிட்டே இருப்பேன்.’’

சேனல் சைட் டிஷ்

நீலிமா ராணி

``புடவைதான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். ஆனா சில நேரங்களில் வெஸ்டர்ன் டிரஸ்ஸும் வாங்குவேன். சிவப்பு, டார்க் க்ரீன், வெந்தய கலர்கள்ல டிரெடிஷனலான பட்டுப்புடவைகள் ரொம்ப பிடிக்கும். நேர்ல போயி ஷேடு பார்த்துதான் வாங்குவேன். என்னுடைய ஷாப்பிங் பார்ட்னர் என் கணவர் இசைதான். கூட வர முடியலனாகூட ஷாப்பிங் போயிட்டு, வீடியோ கால் பண்ணி அவரை செலக்ட் பண்ணிக் கொடுக்கச் சொல்லுவேன். புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் பிளவுஸ் போடறதுதான் என் விருப்பம். பிளவுஸ்ல ரஃபில், க்ளோஸ் நெக், ஹை காலர்னு வித்தியாசமா டிரை பண்ணுவேன். இப்போ என் பொண்ணுக்காகவும் அடிக்கடி ஷாப்பிங் பண்றேன்.’’

சேனல் சைட் டிஷ்

ஹீமா பிந்து

``நானே காஸ்டியூம் டிசைனர் தான். வெஸ்டர்ன் டிரஸ்தான் எப்போதும் என்னுடைய சாய்ஸ். மிக்ஸ் மேட்ச் பண்ணி நிறைய நியூ ஸ்டைல் கிரியேட் பண்ணிப் பார்ப்பேன். நான் எப்போதும் என்னுடைய ஸ்கின்னுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால ஷாப்பிங் போகும்போதெல்லாம் மாய்ஸ்ச்சரைசர் வாங்கிட்டு வந்துருவேன். எனக்கு பிராண்டடு டிரஸ் ரொம்ப பிடிக்கும். புதுப்புது பிராண்டு டிரை பண்ணுவேன். நேரம் கிடைக்கும்போது மால் களுக்குப் போய், பிடிச்ச டிரஸ்ஸை பில் போட்டுட்டு வந்துருவேன். என் ஹேண்ட் பேக்ல பெர்ஃபியூம் பாட்டில்கள் நிறைய இருக்கும். அடிக்கடி ஷாப்பிங் பண்றதும் பெர்ஃபியூமும் ஷூஸும்தான்.’’

சேனல் சைட் டிஷ்