சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நக்‌ஷத்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
நக்‌ஷத்திரா

சீரியல் கல்யாணம் நடப்பதற்குள் சிம்பிளாக நடந்து முடிந்திருக்கிறது, நிஜ கல்யாணத்துக்கான தொடக்கமான நிச்சயதார்த்தம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நடிகை காயத்ரி யுவராஜ் கருத்து தெரிவித்ததாகக் கிளம்பிய தகவல் குறித்து காயத்ரிக்கே எதுவும் தெரியாதாம். ‘`என் பெயரில் போலிக் கணக்கு இருக்குன்னு தெரியும்; ஆனா அரசியல்ல எல்லாம் கோத்துவிட மாட்டாங்கன்னு நம்பிட்டிருந்தேன். அது தப்புன்னு இப்ப புரிஞ்சிருக்கு’’ என்கிறவர் சைபர் க்ரைமில் போலிக் கணக்கு குறித்துப் புகார் தரவிருக்கிறாராம்.

நக்‌ஷத்திரா
நக்‌ஷத்திரா

‘கலர்ஸ்’ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `வள்ளி திருமணம்’ சீரியலில் ஹீரோயின் நக்‌ஷத்திராவுக்கு கடந்த வாரம் கல்யாண எபிசோடு.ஆனால் சீரியல் கல்யாணம் நடப்பதற்குள் சிம்பிளாக நடந்து முடிந்திருக்கிறது, நிஜ கல்யாணத்துக்கான தொடக்கமான நிச்சயதார்த்தம். நிஜத்தில் நக்‌ஷத்திராவைக் கரம் பிடிக்கப் போகும் மாப்பிள்ளை, ஜீ தமிழ் சேனலில் புரொடியூசராக இருக்கும் விஷ்வா என்கிறவராம். விஷ்வா – நட்சத்திரா இருவரும் சில தினங்களுக்கு முன் மோதிரம் மாற்றிக்கொண்டதை நக்‌ஷத்திராவின் குடும்பத்தினர் உறுதி செய்திருக்கிறார்கள். `புதுப்புது அர்த்தங்கள்’, ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ ஆகிய சீரியல்களின் தயாரிப்புப் பொறுப்பைக் கவனித்துவருகிறது விஷ்வாவின் குடும்பம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சீரியல் பக்கம் வந்திருக்கிறார் நடிகை மாளவிகா அவினாஷ். ‘அண்ணி’ மாளவிகா என்றால் சீரியல் ரசிகர்களுக்குப் பரிச்சயம். கலைஞர் தொலைக்காட்சியில் ஜூன் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது, மாளவிகா நடிக்கும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ தொடர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

அஜித்தின் ‘வலிமை’ குறித்த விமர்சனம், மற்றும் நடிகர் சிம்பு தொடர்பாகச் சர்ச்சையான கருத்துகள் என சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஸ்ரீநிதி, தற்சமயம் அவரின் அம்மாவுடன் கோபித்துக்கொண்டு தனியாக வசித்துவருகிறாராம். ‘அப்பா இல்லாத பொண்ணுங்கிறதால தைரியமா வளரணும்னு அதிகமா சுதந்திரம் கொடுத்தது நான் செய்த ஒரு பெரிய தவறாகிடுச்சு’ என தற்போது ரொம்பவே வருத்தப்படுகிறார் ஸ்ரீநிதியின் அம்மா.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சில மாதங்களுக்கு முன் மளிகைக் கடை சீரியலில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து வைத்த விதம் தொடர்பாக அந்த சீனியர் நடிகை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக தற்போது புதிய தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களாம்.