Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷாமிலி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாமிலி

‘ரோஜா’ வில்லி ஷாமிலி, சீரியலில் இருந்து வெளியேறியிருக்கிறார். ‘

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில மாதங்களுக்கு முன் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றது, நடிகை மோனிகாவின் குடும்பம் நடத்தி வரும் நிறுவனம். தற்போது அடுத்த முயற்சியாக ‘வெப்சீரிஸ்’ தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள். வெப் சீரிஸுக்கான தொடக்க விழாப் பூஜை சமீபத்தில் நடந்தது. நடிகர், நடிகைகள், ஓ.டி.டி. உள்ளிட்ட விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படுமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘ரோஜா’ வில்லி ஷாமிலி, சீரியலில் இருந்து வெளியேறியிருக்கிறார். ‘‘எல்லாம் நல்ல விஷயத்தாங்க, சீக்கிரம் அம்மா ஆகப்போறேன்’’ எனச் சிரிக்கிறார். இவரது திருமணம் சென்ற ஆண்டு லாக்டௌனில் நடந்தது நினைவிருக்கலாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘மியூசிக் வித் கோமாளி’ என்கிற நிகழ்ச்சியைக் காணொலி நேரலையில் நடத்தி, அதில் சின்னத்திரைப் பிரபலங்கள், குக்கு வித் கோமாளி ஆர்ட்டிஸ்டுகள், எனப் பலரையும் பங்கு பெறச் செய்து, நிகழ்ச்சி மூலம் கிடைத்த ரூபாய் 16 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரை நேரில் சந்தித்துக் கொடுத்திருக்கிறது, ‘சூப்பர் சிங்கர்’ இயக்குநர் ரவூபா தலைமையிலான டீம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குத்து’ படத்தில் ‘போட்டுத்தாக்கு’ பாடலைப் பாடி அன்று பிரபலமான ரோஷினி, பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என அமெரிக்காவில் செட்டிலானார். மீண்டும் சென்னை திரும்பியவர் இங்கு சில டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட, தற்போது மறுபடியும் பாட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ‘ஈஸ்வரன்’ படத்தின் ‘செல்லக்குட்டி ராசாத்தி’யிலிருந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருப்பதாகச் சொல்கிறார்.

டி.வி ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங் இல்லை என்ற சூழலில், ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் பலரும் காணொலி மூலம் நிகழ்ச்சிகளில் பிஸியாகிவிட்டனர். ‘‘பிஸின்னு எல்லாம் சொல்லாதீங்கண்ணே. டெக்னாலஜி உதவியால ஏதோ பண்ணிட்டிருக்கோம். வருமானம்னு ஏதோ ஒண்ணு வருது. ஆனா, ‘ஏங்க, வீட்டுல சும்மாதான இருக்கீங்க; ஃப்ரீயாவே பண்ணித்தரலாம்ல’ன்னு கேக்கறவங்களும் இருக்காங்க’’ என்கிறார் க.போ.யா முல்லை.

யார்கிட்டயும சொல்லாதீங்க

கமிட் ஆன சில மாதங்களிலேயே சீரியலிலிருந்து நடிகரின் மகள் வெளியேறினார் அல்லவா? தற்போது மேற்படி சீரியலில் நடித்த புதுமுக ஹீரோவும் வெளியேறியிருக்கிறார். விசாரித்தால், சீரியலுக்கு வெளியேயும் இருவருக்கிடையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகச் சொல்கிறார்கள். இருவரும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நாள்களில் பரஸ்பரம் பொசஸிவாக இருந்ததாகக் கிசுகிசுக்கிறார்கள் இந்த லவ் மேட்டர் தெரிந்தவர்கள்.