ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ் ( Instagram )

சீரியல் பாக்குற செட்டான அம்மாவையும் பாட்டியையும் ஈஸியா ஓகே சொல்ல வெச்சிட்டேன். ஆனா, அப்பாகிட்ட ஓகே வாங்கதான் டைம் எடுத்துச்சு.

எங்க கெமிஸ்ட்ரி வேற லெவல்! - ஆர்த்தி சுபாஷ்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் `பாண்டவர் இல்லம்' சீரியலில் கலகல மருமகளாக அசத்தி வருகிறார் ஆர்த்தி சுபாஷ். யூடியூபில் 90’ஸ் கிட்ஸை கவர்ந்தவர், இப்போது சீரியல் பிரியர்களை கவர பாண்டவர் இல்லத்தில் களமிறங்கியிருக்கிறாராம்.

யூடியூப் டூ பாண்டவர் இல்லம் சீரியல் பயணம் பற்றி...

காலேஜ் படிச்சிட்டு இருந்தபோதே லோக்கல் சேனல்ல பார்ட் டைமா ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் யூடியூப் பக்கம் திரும்பினேன். என்னோட யூடியூப் வீடியோஸ் மூலமா வந்த வாய்ப்புதான் `பாண்டவர் இல்லம்’ சீரியல். கதை பிடிச் சிருந்துச்சு. ஏன் நம்ம அப்படிக்கா போய் 70’ஸ் கிட்ஸையும் கவர் பண்ணக் கூடா துன்னு மண்டையில பல்ப் எரிய இங்கே வந்துட்டேன்.

ஆர்த்தி சுபாஷ்
ஆர்த்தி சுபாஷ்

நடிக்கிறதுக்கு உங்க வீட்டுல பர்மிஷன் கொடுத்துட்டாங்களா?

சீரியல் பாக்குற செட்டான அம்மாவையும் பாட்டியையும் ஈஸியா ஓகே சொல்ல வெச்சிட்டேன். ஆனா, அப்பாகிட்ட ஓகே வாங்கதான் டைம் எடுத்துச்சு. `ஆங்கரிங் தானே பண்றதா சொன்ன... இப்போ சீரியல்னு சொல்றியேம்மா. வேண்டாம்’னாரு அப்பா. கொஞ்சநாள் பொறுத்து மறுபடியும் கேட்டதும் ஓகே சொல்லிட்டாங்க. `ஃப்ரீடம் வித் ரெஸ்பான்சிபிலிட்டி’ன்னு சொல்லு வாங்க இல்லையா... சின்ன வயசுல இருந்தே பெருசா எதுக்குமே அடம்பிடிக்காம யதார்த்தத்தைப் புரிஞ்சி நடந்துப் பேன். அதனாலயே நான் அடுத்தமுறை கேட்டதும் என் விருப்பத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாரு எங்கப்பா.

உங்கம்மாவும் நீங்களும் போட்டோஷூட்டெல்லாம் பண்றீங்கபோல...

எங்கம்மாதான் எனக்கு ஃபிட்னஸ்ல இன்ஸ்பிரேஷன். ரெண்டு நாள் தொடர்ந்து நான் வொர்க் அவுட் பண்ணலைனா அவங்களைப் பார்த்ததும் பீதி ஆயிடுவேன். அந்தளவுக்கு வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணுவாங்க. இப்போ ஜாலியா நாங்க ரெண்டும் சேர்ந்து போட்டோஷூட் பண்றோம்!

உங்க சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட் வைரல் ஆச்சே... என்ன விஷயம்?

எனக்கு முகத்துல அதிகமா பிம்பிள்ஸ் வந்துச்சு. அந்த நேரத்துல எனக்குத் தன்னம்பிக்கை ரொம்ப கம்மியா இருந்துச்சு. அந்த அனுபவத்தைதான் பகிர்ந்துகிட்டேன். நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துச்சு. மீடியால இருக்குற பொண்ணுங்க ‘பக்கத்து வீட்டு பொண்ணுங்க’ மாதிரி இருந்தா மக்களுக்கு அதிகம் பிடிக்குது. சிலர் ‘அவசரப்பட்டு பிம்பிள்ஸ் போட்டோவை போஸ்ட் பண்ணிட்டே... தப்பு பண்ணிட்டேன்னு’ சொன்னாங்க. ஆனா, எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல. நான் எப்படி இருக்கேனோ அதுதான் எனக்குப் பிடிக்கும் அதை வெளிப்படுத்தறதுல எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை.

யூடியூப்ல உங்ககூட நடிச்ச ஃபேபியும் நீங்களும் நிஜத்துலயும் ஜோடியாமே..?

உலகமே அப்படித்தான் நம்புது. ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டருக்கும் அதே கன்ஃபியூஷன்தான். அங்கே எங்க கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருக்கும். ஷூட்டிங்ல பண்ற அலப்பறைகளோட சரி. வீட்டுக்குப் போயிட்டா ஒரு மெசேஜ்கூட பண்ணிக்க மாட்டோம். அவன் கேர்ள் ஃபிரெண்ட்ஸை சமாளிக்கவே அவனுக்கு நேரம் சரியா இதுக்கும். இதுல நான் வேறயா... எங்க ஜோடி நல்லா இருக்குன்னு சொல்றதாலேயே ‘ஏன் சேர்ந்து அடுத்த புராஜெக்ட் பண்ணக் கூடாது’ன்னு ஒரு யோசனை மண்டைக் குள்ள ஓடுது...’’ - சிரிக்கிறார் ஆர்த்தி சுபாஷ்.

எப்படிப் போகுது லைஃப்!

கொரோனா இரண்டாவது அலையில் பல சவால்களைச் சந்தித்து வருகிறோம். சவாலான காலத்திலும் ஊடகப் பணியில் இருக்கும் பெண்கள் பலர். நியூஸ் சேனல்களில் டிபேட் ஷோக்களை நடத்தும் சிலரிடம் ‘அப்புறம் எப்படிப் போகுது லைஃப்...’ என்ற கேள்வியோடு பேசினோம்.

சுகிதா சாரங்கராஜ்
சுகிதா சாரங்கராஜ்

சுகிதா சாரங்கராஜ் - வொர்க் லைஃப் பேலன்ஸ் ஒரு கலை!

“கொரோனா... கொரோனா... இது தானே நியூஸ்... வேற என்ன இருக்கு அதுல” அப்படிங்குற பார்வை அதிகரிச்சிருக்கு. வெளி வர்ற ஒவ்வொரு செய்திக் குப் பின்னாடியும் இருக்கும் தகவல்கள் கடல் அளவு பெருசு. ஒரு செய்தி மக்களை வேகமா சென்றடையுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதோட நம்பகத்தன்மையும் அவசியம். தடுப்பூசிகள் அப்டேட் தொடங்கி டிபேட் ஷோக்களில் எடக்குமடக்காகப் பேசுபவரை வழிக்குக் கொண்டுவந்து சரியா பேசவைப்பது வரை நிறைய விஷயங்கள் இருக்கு. அதுவும் டிபேட் ஷோக்கள் நடத்தும்போது திடீர்னு டாபிக் அப்போதைய சூழலுக்குத் தகுந்தது போல மாறும்... அதையெல்லாம் எதிர்கொள்ளணும்னா படிச்சிகிட்டே இருக்கணும். ‘பெண்களுக்கு என்ன அரசியல் தெரியும்...’ என்ற பார்வை இங்கே அதிகம். பொண்ணுங்குறதால தொடர்ந்து நிரூபிச்சிக்கிட்டே இருக்குற நிலைமைதான் இன்னமும் இருக்கு.

இதையெல்லாம் தாண்டி எனக்கான சந்தோஷம் என் மகள்தான்... அவளுக்கு டைம் கொடுக்குறதில்லையேங்குற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. ‘உங்க அம்மா ஏன் டிவியில இப்படி சண்டை போடுறாங்கன்னு’ அவ ஃபிரெண்ட்ஸ் கேட்குறதா சொல்லியிருக்கா... அது சண்டை இல்ல டிபேட் ஷோ’ன்னா இப்படித் தான் இருக்கும்ங்குற தெளிவு அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சுது. நியூஸ் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்லாதவ, `இது ஏம்மா அது எதனாலம்மா’ன்னு கேட்குறப்போ பொண்ணு வளர்ந்துட்டே இருக்காங்குற மனநிறைவு இருக்கும். ஊடகத்துறை பெண்களுக்கு வொர்க் லைஃபையும் பர்சனல் லைஃபையும் பேலன்ஸ் பண்ணிக்கொண்டுபோறது நிச்சயம் ஒரு கலைதான்.’’

ஹேமா ராகேஷ்
ஹேமா ராகேஷ்

ஹேமா ராகேஷ் - என்ன சவால் வந்தாலும் பாத்துக்கலாம்!

‘`டீச்சிங் லைன்ல போகணும்னு எங்க வீட்டுல எல்லாருமே விருப்பப்பட்டாங்க.. ஆனா, பிடிச்சதைப் பண்றதுதானே வாழ்க்கை. ஊடகவியலாளரா தொடங் கின பயணம் நல்லா போயிட்டு இருக்கு. ஆனா, கொரோனா சூழல்ல வொர்க் லைஃப்பை பேலன்ஸ் பண்றது ரொம்பவே சவாலானதா இருக்கு.

ஒரே நேரத்துல வரிசையா வீட்டுல கொரோனாவால பாதிக்கப்பட்டாங்க. அவங்கள எப்படியாவது மீட்டுக் கொண்டுவந்துடணும்னு ரொம்ப உறுதியா இருந்தேன். அலைச்சல்கள், மனக்குமுறல் கள்னு என்னை நான் உடைஞ்சு போகாதபடி பார்த்துக்கிட்டது. எனக்கு நானே தைரியம் கொடுத்துக்கிட்டதுன்னு ஒன்பது நாள்கள் மருத்துவமனை வாழ்க்கை என்னை இன்னுமே பக்குவப்படுத்தியிருக்கு. இதுக்கு மேல என்ன சவால் வந்தாலும் பாத்துக்கலாம்ங்குற நம்பிக்கை கிடைக்குறது அவ்வளவு சுலபமில்லை. அதைத்தான் இந்த நாள்கள் எனக்கு கத்துக்கொடுத்திருக்கு.’’

சேனல் சைட் டிஷ்

சுமையா கவுசர் - என் ஃபேவரைட் டாபிக்கே அரசியல்தான்!

``பி.டெக் முடிச்ச நான் ஆரம்பத்துல என்டர்டெயின்மென்ட் ஷோஸ்தான் பண்ணிட்டு இருந்தேன். அப்பல்லாம் எனக்கு அரசியல் அறிவு அவ்வளவா கிடையாது. பொலிடிக்கல் டிபேட் ஷோஸ் பண்ண ஆரம்பிச்சபோது ரொம்பவே பயந்திருக்கேன். மக்கள் என்ன கேள்வி கேட்பாங்களோ... அப்படியான கேள்விகளோடு தைரியமா ஷோ பண்ண ஆரம்பிச்சேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே வளர்த்துக்கிட்டேன். இப்போ என் ஃபேவரைட் டாபிக்கே அரசியல்தான்.

சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடற மாதிரியான வேலையில சேருன்னு ஆரம்பத்துலயே அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ நேரங்காலம் பார்க்க முடியாத வேலையில இருக்கேன். என்னோட வீடியோஸ், மீம்ஸ் எல்லாம் ஷேர் ஆகும்போது பொண்ணு வளர்ந்துட்டான்னு பெருமைப் படுவாங்க. எங்க ரெண்டு பேருக்குமான அந்த பாண்டிங் ரொம்ப ஸ்பெஷல்.’’

சேனல் சைட் டிஷ்