
க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது ‘செம்பருத்தி’ சீரியல். இந்த ஒரேயொரு சீரியல் மூலம் சின்னத்திரையில் பெரிய அளவில் ரீச் ஆனவர் சபானா.

புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் ‘மாரி' தொடரில் ஹீரோயினாக நடிக்கும் ஆஷிகா படுகோன், கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்தவர். கன்னட சீரியலில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு, தமிழ் என வந்திருக்கிறார். மகள் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டுமெனக் கனவு கண்டிருக்கிறார்கள் இவரின் பெற்றோர். நடிப்பின் மீதான ஆர்வத்தால் டி.வி பக்கம் வந்துவிட்டாராம் இவர்.
க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது ‘செம்பருத்தி’ சீரியல். இந்த ஒரேயொரு சீரியல் மூலம் சின்னத்திரையில் பெரிய அளவில் ரீச் ஆனவர் சபானா. ‘செம்பருத்தி’க்குப் பிறகு பல சீரியல்களில் நடிக்கக் கேட்டு, இப்போதே இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறதாம். விஷன் டைம் நிறுவனம் சன் டி.வி-யில் தயாரிக்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றிற்காகப் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

விவசாயம் செய்வதற்கு நடிப்பு இடையூறாக இருப்பதாகச் சொல்லி, நடித்துக்கொண்டிருந்த சீரியலில் இருந்து வெளியேறிய அருண், சென்ற வேகத்தில் மீண்டும் சீரியலுக்குத் திரும்பியிருக்கிறார். ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிற ‘கண்ட நாள் முதல்’ சீரியலில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார் அருண்.
கிளினிக் திறப்பு விழா ஒன்றிற்குச் சென்ற இடத்தில், ஆல்யா மானசாவிடம் ‘சினிமா, டி.வி நடிகைகள் பற்றி யூ டியூபில் அவதூறு பேசுகிறார்களே’ என்கிற கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். ‘ரிலேஷன்ஷிப்ல இருக்கிறாங்க டைப் விஷயங்கள் வேற எங்கதான் நடக்கலை. நடிகைகள்னா அது வெளியில வருது’ எனப் பதிலளித்து பரபரப்பு உண்டாக்கியிருக்கிறார்.

திண்டுக்கல் செல்வதற்காக தனியார் விரைவுப் பேருந்தில் டிக்கெட் புக் செய்திருந்தனர் நாஞ்சில் விஜயனும் அமுதவாணனும். சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனம் கடைசி நேரத்தில் சொல்லாமல்கொள்ளாமல் பேருந்தை ரத்து செய்துவிட்டது. டென்ஷனான விஜயன் அந்தக் கோபத்தை வீடியோவாக்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ‘பணம் திரும்பக் கிடைத்ததா’ எனக் கேட்டால், ‘‘பணத்தை வாங்கிட்டேன்; ஆனா வருத்தம் என்னன்னா, அன்னைக்கு பிரச்னை ஆனதும் போலீஸ் வந்தது. பொறுப்பு இல்லாம நடந்துகிட்ட போக்குவரத்து நிறுவன ஊழியர்கள்மீது புகார் தந்தா, அதை அவங்க வாங்க மறுக்கிறாங்க. ‘காவல்துறை பொதுமக்களின் நண்பன்’னு சொல்றது எல்லாம் சும்மாவா சார்’னு நல்லா கேட்டு விட்டுட்டேன்” என்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
கதையை மறந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியலின் ஹீரோ நடந்துகொள்ளும் விதம் குறித்து கதை கதையாகச் சொல்கிறார்கள். நேரத்துக்கு ஷூட்டிங் வருவதில்லை; அப்படியே வந்தாலும், பாதி நாள் பாதி நேரத்திலேயே கிளம்பிவிடுவது என்று ஏக குடைச்சல் தருகிறாராம். பொறுத்துப் பார்த்த தயாரிப்பாளர், சேனல் தலைமையிடமே ‘‘இது இப்படியே தொடர்ந்தா, நான் சீரியல் தயாரிக்கறதைக் கைவிட வேண்டியிருக்கும்’’ எனப் புகார் வாசித்திருக்கிறாராம்.