சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV: ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV: ரிமோட் பட்டன்

சிவாஜி ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்றபடியான கதாநாயகனை வலைவீசித் தேடி வருகிறார்களாம். சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த சீரியல்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`ஷூட்டிங் தேதிகளில் பிரச்னை வராத‌படி சமாளித்து விடலாம்' என முடிவு செய்தே ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடிக்க கமிட் ஆனார் காயத்ரி ஜெயராம். ஆனால் ஷூட்டிங் ஷெட்யூலில் பிரச்னை உண்டாகவே `கயல்' தொடரிலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டதாம். தற்போது `வள்ளி திருமணம்' தொடர் போய்க்கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் சினிமா பக்கமும் கவனம் செலுத்தலாமென்கிற ஐடியாவில் இருக்கிறாராம்.

சினிமாக் கதைகள் அப்படியே சீரியலாக உருமாற்றம் செய்யப்படுவது தற்போது சகஜமாகிவிட்டது. ‘ஆனந்தம்’ படத்தின் தழுவல்தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் அடுத்து, நடிகர் சிவாஜியை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இயக்குநர் பாரதிராஜா காட்டிய ‘முதல் மரியாதை’ படம் சீரியலாக உருவாகத் தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள். சிவாஜி ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்றபடியான கதாநாயகனை வலைவீசித் தேடி வருகிறார்களாம். சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த சீரியல்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தன்னுடைய சொந்தச் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ‘விக்ரம்’ படத்தையும் முதல் நாளிலேயே பார்த்து ரசித்தவர், சில தினங்களுக்கு முன்பு கமலை நேரில் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமி ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறாராம். ‘நிகழ்ச்சிக்கு வெளிநாடுகளுக்கெல்லாம் போறோமில்லையா, தஸ் புஸ்னு பேச வேண்டாமா’ எனச் சிரிக்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க..

சில மாதங்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த சீனியர் நடிகரின் உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவருகிறது. விஷயம் என்னவெனில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது பணத்துக்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறது நடிகரின் குடும்பம். நீண்ட காலம் அவர் நடித்துவந்த அந்தப் பிரபல சீரியல் தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று, அவருக்கான ஊதிய நிலுவையைத் தந்தால் உதவியாக இருக்குமெனக் கேட்டிருக்கிறார் நடிகரின் மனைவி. ஆனால் கடைசிவரை அசைந்தே கொடுக்கவில்லையாம் தயாரிப்புத் தரப்பு.