லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

குழந்தைக்குப் படிப்பு மட்டும்தான் எதிர்காலம்னு நான் நினைச்சதில்ல. அவளுக்கு என்ன பிடிக்குமோ அதில் ஜெயிக்கணும்னு நினைச்சேன்.

அம்மாவை நல்லா பாத்துக்கணும்! - ‘மெளன ராகம்’ ரவீணா

சேனல் சைட் டிஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மௌனராகம்’ சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருப்பவர் ரவீணா. சீரியலில் பாவாடை தாவணியில் சத்யாவாக வலம் வருபவர், நிஜத்தில் மாடர்ன் பொண்ணு.

“சின்ன வயசுல நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட ஒரு பொருள் டிவி. மனுஷங்க எப்படி அந்தக் குட்டி டிவிக்குள்ள போனாங்கன்னு அடிக்கடி அம்மாகிட்ட கேட்டுட்டே இருப்பேன். ஒரு கட்டத்துல நானும் டிவில வரணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசையை நிறைவேற்றி வெச்சவங்க என் அம்மா. அம்மோவோட முயற்சியாலதான், சன் டிவியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ சீரியல்ல சின்ன வயசு ரம்யா கிருஷ்ணனா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது.

அதுக்கு அப்புறம் சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நிறைய சீரியல்கள்ல நடிச்சாலும் `மெளன ராகம்’ சீரியல் மக்கள்கிட்ட நல்ல வரவேற்பை வாங்கிக் கொடுத்திருக்கு. இந்த அடையாளத்துக்கு என் அம்மாவோட முயற்சிதான் காரணம்” என அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொள்ளும் ரவீணாவை தொடர்கிறார் அம்மா லதா...

“குழந்தைக்குப் படிப்பு மட்டும்தான் எதிர்காலம்னு நான் நினைச்சதில்ல. அவளுக்கு என்ன பிடிக்குமோ அதில் ஜெயிக்கணும்னு நினைச்சேன். ரவீணாவோட அப்பா வெளிநாட்டுல இருந்தாங்க. அவளுக்கு 12 வயசு இருக்கும்போது அவங்க அப்பா தவறிட்டாங்க. ரவீணாவையும் அவ அண்ணனையும் அப்பா இல்லைன்ற குறை தெரியாம வளர்க்க எல்லா சூழலையும் ரொம்ப தைரியமா எதிர்கொண்டேன். ரவீணாவோட ஆசைக்கு நான் துணையா நின்னப்போ சினிமா, சீரியல்னு ரவீணாவை நான் தப்பா வழி நடத்துறதாகூட சொந்த பந்தமெல்லாம் சொன்னாங்க. ஆனா, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன், தினமும் வேலை முடிச்சு வந்து ரவீணாவை ஷூட்டிங் கூட்டிட்டுப் போவேன். ரவீணாவுக்கு 12 வயசு இருக்கும்போது, ஒருநாள், ‘எனக்கு தலைபின்ன, சாப்பிடுறதுக்கு எல்லாம் கஷ்டமா இருக்கு. நீ வேலைக்குப் போகாதம்மா. என் கூடவே இரு’ன்னு சொன்னா அவளுக்காகத்தான் இந்த வாழ்க்கையே. அவ சந்தோஷமா இல்லைன்னா நான் ஓடுறதுல என்ன அர்த்தம் இருக்குனு வேலையைவிட்டேன்’’ - நெகிழும் அம்மாவைத் தொடர்கிறார் ரவீணா...

“மெளன ராகம் சீரியல்லகூட நான் சிங்கிள் மதரோட பொண்ணுதான். சீரியலில் நான் பேசுற டயலாக், காட்சிகள் எல்லாமே ஏற்கெனவே நானும் என் அம்மாவும் பேசுன மாதிரியேதான் இருக்கு. அதனால் அந்த சீரியல் என் மனசுக்கு இன்னும் நெருக்கமாயிருச்சு” என்ற ரவீணா, ஃப்ளஸ் டூ படிக்கிறார். ‘`அம்மாவை நல்லா பாத்துக்கணும். அவங்க வளர்ப்பு தப்பு இல்லைனு நிரூபிக்கணும்”

- லட்சியங்கள் சொல்லி விடைபெறுகிறார் ரவீணா.

பரவட்டும் பாசிட்டிவிட்டி... சின்னத்திரை நடிகைகளின் கொரோனா கால மெசேஜ்

கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங்கெல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன. விதம்விதமான கேரக்டர்களில் வலம் வந்துகொண்டிருந்த சின்னத்திரை நடிகைகள் சிலரிடம், ‘அப்புறம்... என்ன நடக்குது?’ என விசாரித்தோம்.

சேனல் சைட் டிஷ்

பாசிட்டிவிட்டி ப்ளீஸ்... - ‘ஊர்வம்பு’ லட்சுமி

‘செம்பருத்தி’ சீரியலில் வனஜாவாக வலம்வரும் லட்சுமி நிஜத்தில் ரொம்பவே சாஃப்ட்டாம். ‘`ஒவ்வொரு வீட்டுலயும் குசும்புத்தனத்தோட ஒருத்தங்க கண்டிப்பா இருப்பாங்க. அப்படியான ஒரு கேரக்டர்லதான் நான் கச்சிதமா பொருந்தியிருக்கேன். என்னைப்போய் டெரர்ன்னு சொன்னா எப்படிங்க. ஊர் வம்பு லட்சுமின்னு பேரு வந்ததுக்கும் நான் நடிக்கிற கேரக்டர்களுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்ல’’ எனச் சிரிக்கிறார் லட்சுமி.

``என்னதான் ஷூட்டிங்ல கதாபாத்திரமாவே மாறினாலும் எங்க வீட்டுல நான் சாதாரண குடும்பப் பொண்ணுதான். எந்த கேரக்டர்னாலும் அதோட நான் இணைஞ்சிடுவேன். குடும்பத் திலேயே நான் மட்டும்தான் நடிப்புத்துறையில இருக்குறதால செலிபிரிட்டிங்குற நினைப்பே எனக்கு வந்ததில்ல’’ என்பவர் எக்கச்சக்கமாக வெயிட் குறைத்திருக்கிறார்.

``என் வெயிட்லாஸை பத்தி நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துச்சு... கூடவே, ‘நல்லா இருந்த உடம்பை எப்படி கெடுத்து கிச்சு பாரு?’ங்கிற மாதிரியான கமென்ட்ஸும் வந்துச்சு. எனக்கு பிடிச்சிருக்கு அவ்ளோ தான். இதுதான் என்னோட பதில். ஓரிடத்துல நெகட்டிவிட்டி பரவுதுன்னா அது மொத்தமா காணாம போகற அளவுக்கு அங்கே பாசிட்டி விட்டியை விதைக்கணும். குறிப்பா, கோவிட் நேரத்துல இது ரொம்பவே தேவைப்படுது. நம்மால முடிஞ்ச அளவுக்கு பாசிட்டிவிட்டியை பரப்புவோமே...’’ என்கிறார்.

சேனல் சைட் டிஷ்

சேஃபா இருங்க... சந்தோஷமா இருங்க... - ஸ்ரீதேவி அஷோக்

‘பூவே உனக்காக’ சீரியலில் தனலட்சுமி யாகவும், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ஷியாமளா தேவியாகவும் அசத்திவரும் ஸ்ரீதேவி அசோக், `` ‘எவ்ளோ பொல்லாதவளா இருக்கா இவ’ என்ற பெயர்தான் நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்குறவங்களுக்கு வெற்றியே. ஆனா, சோஷியல் மீடியா வுல வரும் கமென்ட்ஸைப் படிக்கப் படிக்க மனசே கஷ்டமாகிடுது. இப்போ கொஞ்சம் மாறியிருக்கு. சீரியல் எது ரியாலிட்டி எதுன்னு புரிஞ்சுக்க ஆரம் பிச்சிருக்காங்க’’ என்பவர் லாக்டெளன் வரை தன் கர்ப்பகாலத்திலும் வேலைக் குச் சென்று கொண்டுதான் இருந்தாராம்.

``கர்ப்பகாலத்துல ஒரு வேலையும் செய்ய வேணாம்னு பலரும் நினைச்சுக்கிறாங்க. எங்க வீட்டுல எல்லா வேலையையும் நானேதான் செய்வேன். ப்ரெக்னென்சி பீரியட்ல நல்லா வேலை செஞ்சாதான் சுகப்பிரசவம் ஆகும். கோவிட் டைம்ல கர்ப்பிணிகள் எல்லாரும் சேஃபா இருங்க... சந்தோஷமா இருங்க’’ என டிப்ஸ் கொடுக்கிறார் அவர்.

சேனல் சைட் டிஷ்

எல்லாம் மாறும்... பிடிச்சதைச் செய்வோம்... - சோனியா போஸ்

‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியலில் புஷ்பாவாகவும் `பாண்டவர் இல்லம்’ சீரியலில் முல்லையாகவும் நடித்து வரும் சோனியா போஸ், ``எனக்கு பிடிச்சது ரெண்டே விஷயம். ஒண்ணு, ஷாப்பிங்... அடுத்தது, நல்லா சாப்பிடறது. லாக் டௌன்ல ஷாப்பிங்தான் பண்ண முடியல. பிடிச்சதை சாப்பிடவாவது செய்ய லாமேன்னு சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா புசுபுசுன்னு ஆயிட்டேன். எல்லாம் நார்மல் ஆனதும் டயட்டை ஆரம்பிச்சிக்கலாமே’’ எனச் சிரிக்கிறார்

``போன லாக்டௌன் லூடோ, டல்கோனா காபின்னு வெரைட்டியா போச்சு. இப்ப உயிர காப்பாத்திக்க சண்டே, மண்டேன்னு ஷெட்யூல் போட்டு என்ன கஷாயம் குடிக்குறதுன்னு போகுது. சிரிக்குறதா அழுவுறதான்னு கூட தெரியல. என்னோட ஸ்கூல் டைம் ஃபிரெண்டை சோஷியல் மீடியா மூலமா சமீபத்துல கண்டுபிடிச்சேன். அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. இந்த மாதிரியான சந்தோஷங்களைத் தேடித்தேடி எடுக்குறது இந்த மாதிரி சூழல்ல மனசுக்கு ஒருவித இதத்தை தருது. இறப்பு செய்திகளாவே குவியுது. மனசு ஒருவித பயத்திலேயே இருக்கு. எல்லாம் மாறும்... மாறணும்... இக்கட்டான சூழல்ல இந்த படிப்பினைக்கூட இல்லாட்டி எப்படி... வாழ்க்கையில பிடிச்சதை எந்தத் தயக்கமும் இல்லாம தாராளமா செய்வோமே...’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சேனல் சைட் டிஷ்

அசத்தல் பிளான் ரெடி! - அகிலா

`அபியும் நானும்' சீரியலில் கிரிஜா வாக மிரட்டிவரும் அகிலா, ``ஆங்கரிங் ஆக்ட்டிங்ன்னு சினிமா, சீரியல்ல என் பயணம் ரொம்பவே பெருசு. இப்போதான் டிக் டாக் ரீல்ஸ் எல்லாம் இருக்கு. நான் சீரியல்ல நடிக்க ஆரம் பிச்ச காலகட்டத்துல அதெல்லாம் கிடையாது. சீரியல்கள்ல நடிச்சிட்டு இருந்ததால ரொம்ப வருஷங்கள் கழிச்சுதான் என் டிகிரியை முடிச்சேன். என்னதான் சினிமாவுல இருந்தாலும் படிப்பு மூலமா கிடைக்கிற அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமில்லை’’ என மனம் திறக்கும் அகிலா, இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸையும் முடித்திருக்கிறார்.

‘‘போன லாக்டௌன் செம போரிங்கா இருந்துச்சுன்னு நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டேன். ஆனா, எனக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாம பிசியா போச்சு. இந்த முறை யூடியூப் ஆரம்பிக்கிற ஐடியாவோட இருக்கேன். வழக்கமான மேக்கப் டுட்டோரியல்ஸ் பாத்ரூம், கிச்சன் டூர் மாதிரி இல்லாம அசத்தல் கன்டன்ட்டோட மக்களைச் சந்திக்க எக்சைட்மென்ட்டோடு காத்திட்டிருக்கேன்’’ என்கிறார்.

சேனல் சைட் டிஷ்