சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சைத்ரா ரெட்டி

தமிழ் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா ரெட்டிக்கு உடனடி ஆசையாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

மெட்டி ஒலி இரண்டாவது சீசன் தயாராகி வருவதாகவும் அதில் நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களாக வந்து கொண்டிருக்கும் தகவல்களில் உண்மை இல்லையாம். `மெட்டி ஒலி’ இயக்குநர் திருமுருகன் சத்யஜோதி நிறுவனத்துக்குத் திரைப்படம் இயக்கப் போவதாகத் தெரிகிறது. ஸ்ரீதிவ்யாவைக் கேட்டாலோ, ‘‘இந்த மாதிரிக் கிளம்புகிற கதையை வச்சே ஒரு சீரியல் எடுத்துடலாம் போல’’ எனச் சிரிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதில், சீரியல் நடிகைகளிலேயே அதிகம் மகிழ்ச்சியடைபவர் ஆல்யா மானசாவாகத்தான் இருக்க வேண்டும். மகளைப் பிரிந்து ஷூட்டிங் போய் வந்து கொண்டிருந்தவருக்கு, இப்போது நாள் முழுக்க மகளுடன் செலவிட நேரம் கிடைத்ததே மகிழ்ச்சிக்குக் காரணம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கால் நூற்றாண்டுக் காலமாகச் சின்னத்திரையில் வெற்றிகரமான தயாரிப்பாளராகத் திகழ்ந்துவந்த ‘அபிநயா கிரியேஷன்’ ஜே.கே. என்னும் ஜே.கிருஷ்ணமூர்த்தி கொரோனாவுக்குத் தன் இன்னுயிரைப் பறிகொடுத்திருக்கிறார். இன்று முன்னணி சேனல்களில் ஹிட் சீரியல்களை இயக்கிவரும் பல இயக்குநர்கள் இவரால் டிவிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களே.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஊரடங்கால் பாதிப்பைச் சந்தித்து வருகிறவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துகொண்டிருக்கிற பிரபலங்களின் வரிசையில் பிளாக் பாண்டியின் செயல்பாடுகளும் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றன. சென்னையில் தான் வசிக்கும் பகுதியில் தினமும் பத்துக் குடும்பங்களுக்காவது நண்பர்கள் சிலர் உதவியுடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தமிழ் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா ரெட்டிக்கு உடனடி ஆசையாம். ‘சென்னை வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், தமிழ் பேசத் தெரிந்த அளவு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பதை நினைக்கிறபோது வருத்தமா இருக்கு’ என ஃபீல் ஆகிறார்.

யார்கிட்டயும சொல்லாதீங்க!

சீரியல் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் எல்லாருக்கும் நாட்டாமை பண்ணும் தலைமை அமைப்பில் கடந்த வாரம் சங்கத் தேர்தல் நடந்திருக்கிறது. ‘தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறபோது இவர்கள் எப்படித் தேர்தல் நடத்தலாம், யார் அனுமதித்தது?’ என முணுமுணுக்கும் சிலர், இந்த விவகாரத்தை எங்கு, எப்படிக் கொண்டு போகலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.