Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

 சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சைத்ரா ரெட்டி

`வெப் சீரிஸ் ஒன்றில் ஜோடி சேர்கிறார்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் மற்றும் ‘கயல்’ சைத்ரா ரெட்டி

விகடன் TV: ரிமோட் பட்டன்

`வெப் சீரிஸ் ஒன்றில் ஜோடி சேர்கிறார்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் மற்றும் ‘கயல்’ சைத்ரா ரெட்டி

Published:Updated:
 சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சைத்ரா ரெட்டி
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரையையும் விட்டு வைக்கவில்லை 90ஸ் கிட்ஸ் ஜுரம். டி.வி-யில் உள்ள 90ஸ் கிட்ஸ்களை லிஸ்ட் எடுத்து ஒரு குரூப் உருவாக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்களாம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா, காவ்யா, ஆங்கர் பிரியங்கா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட தொண்ணூறுகளில் பிறந்த பலரையும் சேர்க்கும் முயற்சி நடக்கிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

`ராஜா ராணி’ ஆல்யா மானசாவிடம், குழந்தை பெற்ற பிறகு ஒரு மாதத்தில் திரும்ப வந்துவிடுவதாக இருந்தால், பதிலுக்கு வேறு ஆர்ட்டிஸ்ட் தேடாமல் கதையை நகர்த்துவதாகச் சொன்னதாம் யூனிட். தன்னால் அப்படி வர முடியாது என அவர் தெரிவித்ததையடுத்தே தற்போது அவர் இடத்துக்கு ரியா என்பவரை கமிட் செய்திருக்கிறார்கள்.

`வெப் சீரிஸ் ஒன்றில் ஜோடி சேர்கிறார்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் மற்றும் ‘கயல்’ சைத்ரா ரெட்டி. சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இந்த வெப் சீரிஸில் ஆரம்பத்தில் சைத்ரா ரெட்டியுடன் நடித்த அமித் பார்கவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஷூட்டிங் ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளனர் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதியினர். ‘எங்களுக்கு முகவரி தந்தது, இன்னும் சொல்லணும்னா சோறு போடறதே சீரியல், சினிமாதான். அதனால அது மூலமாச் சம்பாதிச்சதை அதுலயே போடலாமேன்னுதான் இந்த ஐடியா’ என்கிறார்கள் இருவரும்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததாலேயே சீரியல் பக்கம் வந்தார் நடிகர் விக்னேஷ். சன் டி.வி சீரியலில் நடித்துக்கொண்டிருந்தவர் திடீரென விஜய் டி.வி-க்குப் போனார். ஆனால் அந்த புராஜெக்டும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இரிடிய பிசினஸில் பணத்தை இழந்து நிற்பதால் வருத்தத்தில் இருக்கிறார் விக்னேஷ்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

முன்னணி சேனல் ‘குடும்ப விருது’களுக்கு ஆர்ட்டிஸ்டுகளைத் தேர்வு செய்திருக்கிறது. இதில் சிறந்த நடிகருக்கான நாமினேஷன் லிஸ்டில் அந்த நடிகர் இடம் பிடித்ததைத்தான் சக நடிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். ‘‘அந்த சீரியல்ல ஹீரோவுக்கு முக்கியத்துவமே கிடையாது. ஒரு வார எபிசோடுல ரெண்டு நாள் ஸ்க்ரீன்ல அவர் வந்தாலே அதிகம். அப்படி இருக்க, யாரையோ பிடிச்சு நாமினேஷன் பட்டியல்ல இடம் பிடிச்சுட்டார்’’ எனப் பொருமுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism