சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

கனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
கனிகா

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடிகைகள் பலருக்கும் குரல் கொடுத்தவர் கனிகா. பிறகு சில படங்களிலும் நடித்தார். ஆனால் இவர் எதிர்பார்த்ததுபோல் சினிமா அமையவில்லை.

தொகுப்பாளராகச் சின்னத்திரையில் பயணத்தைத் தொடங்கியவர் நிஷா. தற்போது `திருமகள்' சீரியலில் நடித்துவருகிறார். பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்துவருவது குறித்துக் கேட்டால், ``என்னுடைய முகத்தைப் பார்த்தாலே அதுக்குத்தான் செட் ஆவேன்னு நினைச்சிடுறாங்க போல'’ என்கிறார்.

நிஷா
நிஷா

`சின்னத்திரையில் எப்படி நிலைத்து நிற்க முடிகிறது' என்றால், “பிடித்த வேலையை ரசித்துச் செய்கிறேன். ஆங்கரா இருந்தப்ப `மலையாள வாடை அடிக்குது' என்று என் தமிழைக் கேலி செய்தாங்க. நான் கண்டுக்கலை. பிறகு நான் சீரியல் பண்ணத் தொடங்கினப்பவும்கூட நிறைய விமர்சனங்கள் வந்தன. இதுக்கெல்லாம் காது கொடுத்திட்டிருந்தா, நான் இத்தனை வருஷம் இந்த ஃபீல்டுல இருந்திருக்கவே முடியாது. இன்னொரு கேள்வியையும் நடிகைகள்கிட்ட சுலபமா கேக்குறாங்க. அது, `அட்ஜஸ்ட்மென்ட்' பத்தினது. அதையெல்லாம் கூட நான் ‘ஜஸ்ட் லைக் தட்’ன்னு கடந்து வந்துட்டேன். அந்த வழியில போய்த்தான் உயரத்துக்குப் போகணும்னு சொன்னா, அந்த உயரத்துக்கு எதுக்குப் போகணும்னு கேக்குற டைப் நான்” எனக் கூறுகிறவருக்கு சின்னத்திரையில் இன்னும் நிறைவேறாத ஒரு ஆசையும் இருக்கிறது. அது, தன் கேரக்டர் பெயர் டைட்டிலில் வருமாறு ஒரு சீரியலில் நடிக்க வேண்டும் என்பதுதான்.

கனிகா
கனிகா

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடிகைகள் பலருக்கும் குரல் கொடுத்தவர் கனிகா. பிறகு சில படங்களிலும் நடித்தார். ஆனால் இவர் எதிர்பார்த்ததுபோல் சினிமா அமையவில்லை. இப்போது சீரியல் ஏரியாவுக்கு வந்து விட்டார். ஆனாலும் மீண்டும் சினிமாவுக்கு வந்து பேசப்படுகிற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மனதில் இருக்கிறதாம். ‘அதற்கான நாள் விரைவில் வந்துவிடும்’ என்கிற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

அர்ணவ்
அர்ணவ்

ஜெயிலுக்குப் போய் வந்த பிறகு அர்ணவ் ரொம்பவே மாறி விட்டதாகச் சொல்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர். ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோ ருடனும் முன்பைவிட அதிகமாகப் பேசுவதும், இடை வேளையில் அக்கம் பக்கத்தி லிருந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வருகிறவர்களைச் சந்தித்து போட்டோ, செல்பி என மகிழ்விப்பதுமாக உற்சாகமாக இருக்கிறார்’ என்கின்றனர்.

பப்லு
பப்லு

பப்லு நடித்துவந்த ‘கண்ணான கண்ணே’ சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. எனவே ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் மனிதர் சினிமா பக்கம் செல்வார் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் ‘வயதில் குறைந்த பெண்ணைத் திருமணம் செய்யப்போகிறார்’ எனச் செய்திகளில் அடிபட்டது முதலே சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். கல்யாணம் செய்யப்போகிறாரா, சினிமா பண்ணப்போகிறாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

வளர்ந்துவரும் அந்த நகைச்சுவை நடிகர், தனக்கென ஒரு மக்கள் தொடர்பாளரை நியமித்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். சினிமா ஏரியாவில் நன்கு தெரிந்த அந்தத் தொடர்பாளரிடம் பேசவும் செய்திருக்கிறார். அந்தத் தொடர்பாளரும் ‘தாராளமா பண்ணலாம்’ எனத் தயாராகிவிட்ட சூழலில், ‘அந்தத் தொடர்பாளர் பண விஷயத்தில் ஏற்கெனவே இன்னொரு நகைச்சுவை நடிகரை ஏமாற்றியவர்’ என யாரோ இவர் காதில் போட்டுவிட்டார்களாம். ‘அந்த நடிகர் என்னிடமேகூட இது குறித்துப் புலம்பியிருக்கிறார், அவர்தானா இவர்’ எனச் சுதாரித்துக்கொண்டவர், ‘இப்போதைக்கு தொடர்பாளரே வேண்டாம்’ என முடிவெடுத்துவிட்டாராம்.