Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா

தாரணி சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறதாம். ‘சீரியல்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கணும்னு நான் நினைக்கறதில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தாரணி சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறதாம். ‘சீரியல்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கணும்னு நான் நினைக்கறதில்லை.

Published:Updated:
ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
ரேஷ்மா
விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமா பக்கம் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிற ஆங்கர் ரக்‌ஷன் தற்போது பேய்க் கதை ஒன்றில் நடித்துவருகிறாராம். மீண்டும் அதே டைப்பில் ஒரு கதை அவருக்குச் சொல்லப் பட்டிருக்கிறது. `தொடர்ந்து பேய்க் கதையா' என மிரண்டவர், கதை சொல்லப் போனவரிடம் `யோசித்துச் சொல்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`இதயத்தைத் திருடாதே' சீரியலில் நடித்த நவீன் - ஹிமா பிந்து இருவரும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது நவீனுக்கு செய்தி வாசிப்பாளர் கண்மணியுடன் காதல் எனத் தகவல் வந்திருக்கிறது. இந்தச் செய்தி குறித்த விசாரணைகள் தொடர்ந்து ஹிமாவுக்கு வந்துகொண்டிருந்ததில் அப்செட் ஆன பிந்து, மொபைலைத் தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, புது நம்பருக்கு மாறிவிட்டாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஜீ தமிழ் சேனலிலிருந்து `கலர்ஸ் தமிழ்' சேனலுக்குச் சென்றார் ரேஷ்மா. இப்போது மறுபடியும் ஜீ தமிழ் சேனலுக்கு வருகிறாராம். `பூவே பூச்சூடவா' தொடரைத் தயாரித்த அதே தயாரிப்பாளர் அதே யூனிட்டுடன் மறுபடியும் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. `பூவே பூச்சூடவா'வில் ரேஷ்மாவுக்கு ஜோடியாக நடித்தவர் தினேஷ். தினேஷ் தம்பியாக நடித்தவர் மதன். இந்த சீரியல் ஷூட்டிங் சமயத்தில்தான் மதன் - ரேஷ்மா இடையே காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் இணைந்தது இந்த ஜோடி. தற்போது `கலர்ஸ் தமிழ்' சேனலில் ஒளிபரப்பாகிவரும் தொடரில் மதன் - ரேஷ்மாவே ரீல் ஜோடியாகவும் நடித்து வரும் நிலையில், இந்தப் புது சீரியலில் ரேஷ்மாவுக்கு ஜோடியாக அதே தினேஷ் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தினேஷா அல்லது மதனா அல்லது வேறு யாரேனும் புது ஹீரோவா என்பது அடுத்த‌ சில தினங்களில் தெரிந்துவிடும்.

தாரணி சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறதாம். ‘சீரியல்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கணும்னு நான் நினைக்கறதில்லை. நாம நடிக்கிற கேரக்டர் ஆண்டுகள் கடந்தாலும் பேசப்படணும். அதனாலதான் கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் ஏத்துக்கிடாம செலக்டிவா நடிச்சிட்டு வர்றேன்’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

விஜய் டி.வி-யிலிருந்து சன் டி.வி-க்கு வந்து, வந்த வேகத்தில் அங்கு விருதும் வாங்கிவிட்டார், நடிகரும் ஆல்யா மானசாவின் கணவருமான‌ சஞ்சீவ். மகன் பிறந்த நேரம் அப்பா ‘நட்சத்திர நாயகன்’ ஆகிவிட்டார் எனக் குதூகலிக்கிறார் ஆல்யா. அதேநேரம், ‘இன்னும் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள ஏரியாவில் தன் பெயருடன் விஜய் டி.வி-யில் நடித்த‌ கேரக்டரான கார்த்திக் என்கிற பெயரையே உயர்த்திப் பிடிக்கிறார், அதான் கொஞ்சம் நெருடலா இருக்கு’ என்கின்றனர், புது ஏரியா நண்பர்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

முன்னணி சேனல்களுடன் மல்லுக்கு நில்லாமல் தனக்கென சில நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு பட்ஜெட் சீரியல்கள் அல்லது டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிற டி.வி அது. சமீபத்தில் அதில் தயாரிக்கக் களமிறங்கினார் அந்த முன்னாள் ஹீரோயின். தற்போது அந்த சீரியலுக்கான பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஹீரோயினுக்கும் சேனலுக்கும் இடையே பஞ்சாயத்தாம். ஊதியம் சரியாக வந்து சேரவில்லை என தொடரில் நடித்துவரும் பல ஆர்ட்டிஸ்டுகள் கால்ஷீட் தர மறுக்கிறார்களாம்.