Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

 லக்‌ஷ்மிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
லக்‌ஷ்மிப்ரியா

‘வீட்டைச் சுற்றிக் காட்டுகிறோம்' என சொந்த வீட்டையோ, அல்லது குடியிருக்கும் வாடகை வீட்டையோ காட்டி வீடியோ வெளியிடுவது சமீபத்திய ட்ரெண்ட்.

ஸ்ரீநிதி
ஸ்ரீநிதி

அம்மா ஆகப்போகிற செய்தியை முறைப்படி ஊருக்குச் சொல்லியிருக்கும், ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்த நட்சத்திராவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீநிதி. இருவருக்குமிடையிலான நட்பில் சில மாத காலம் விரிசல் உண்டாகியிருந்த நிலையில் தற்போது பழைய நட்பு புதுப்பிக்கப் பட்டிருக்கிறதாம்.

லக்‌ஷ்மிப்ரியா
லக்‌ஷ்மிப்ரியா

வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த லக்‌ஷ்மிப்ரியாவுக்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தி ருக்கிறது. அந்த ஆர்வத்தில் மாடலிங் துறையில் இறங்கி சில விளம்பரப் படங்களில் நடித்தார். தொடர்ந்து சில படங்களிலும் தலைகாட்டினார். இந்த நேரத்தில் தான் `மகாநதி' சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடரில் இவரது காவேரி கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறதாம். ‘‘விஜய் டி.வி-யில் பிரைம் டைம் சீரியலில் நடித்தால் சினிமாவுக்கு நிகரான புகழ் கிடைக்கும்னு சொன்னாங்க’' என இப்போது பேசத் தொடங்கிவிட்டார்.

`செம்பருத்தி' லக்‌ஷ்மி
`செம்பருத்தி' லக்‌ஷ்மி

‘வீட்டைச் சுற்றிக் காட்டுகிறோம்' என சொந்த வீட்டையோ, அல்லது குடியிருக்கும் வாடகை வீட்டையோ காட்டி வீடியோ வெளியிடுவது சமீபத்திய ட்ரெண்ட். `செம்பருத்தி' லக்‌ஷ்மி இதில் ஒருபடி மேலே சென்றுவிட்டார். சென்னைப் புறநகரில் தான் பிளாட் வாங்கவிருப்பதாகச் சொல்லும் கட்டுமான நிறுவனத்தின் மாதிரி வீட்டையே சுற்றிக் காட்டி ‘ஹோம் டூர்' வீடியோ வெளியிட்டுள்ளார். ‘‘பில்டருக்கு விளம்பரம் தர்றது மூலமா பணத்தை மிச்சப்படுத்தலாம், பிசினஸ் ஐடியாங்க’' என்கிறார்கள் சிலர்.

விக்ரமன், கமல்
விக்ரமன், கமல்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சீமானைச் சந்தித்திருந்தார் அசீம். அதை வைத்து அசீம் கட்சி மாறி ‘நாம் தமிழர்' இயக்கத்தில் சேர்ந்துவிட்டார் என்றார்கள் சிலர். இன்னொரு பக்கம், ‘விக்ரமனும் கட்சி மாறி கமலுடன் சேரப் போகிறார்' என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. விசாரித்தால், ‘‘பிக் பாஸ் முடிஞ்சு ஒரு மாசத்துக்கு மேலாகியும் இன்னும் இவங்களுக்கிடையிலான பனிப்போர் விலகிய மாதிரி தெரியலை, அந்தப் பின்னணியிலதான் இந்த மாதிரி தகவல்கள் பரப்பப்படுது'’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க, விரைவில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலை இயக்கப்போகிற இயக்குநர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் சன் டி.வி-யில் பகல் நேர சீரியல்கள் சிலவற்றை இயக்கிவிட்டு, ஜீ தமிழுக்கு வந்த நீராவிப்பாண்டியன் பெயர்தான் அது. இந்தத் தகவலைக் கேட்ட ஆர்ட்டிஸ்டுகள் சிலர் ஜெர்க் ஆனார்களாம். காரணம், ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் நடிகைகளைக் கடுமையாகத் திட்டினார்’ என சில வருடங்களுக்கு முன் இவர்மீது போலீஸ்வரை பறந்த புகார்தான்.

அசீம், சீமான்
அசீம், சீமான்

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சின்னத்திரை வட்டாரத்தில் பலராலும் காமெடியாகப் பார்க்கப்படும் நடிகர் அவர். ‘சீரியல் வாய்ப்பு வராதா' என நீண்ட நாள்களாகத் ‘தவமிருந்து' காத்துக்கிடந்த அவரிடம், ‘ஒரு கேரக்டர் இருக்கு' என அழைத்தார்களாம் அந்த சேனலில். உற்சாகமாக ஷூட்டிங் கிளம்பினார். என்ன நடந்ததோ தெரியவில்லை, கொஞ்ச நாளிலேயே ‘மாப்பிள்ளை வெளிநாட்டுக்குப் போயிட்டார்' என இவரது பகுதியை முடித்துவிட்டார்களாம். ரொம்பவே நொந்துபோய் இருக்கிறார். ‘என்னாச்சு ப்ரோ, காரணம் கேட்க வேண்டியதுதானே' எனச் சிலர் வாயைக் கிளற, ‘ஏன், நடிச்ச சம்பளமும் எனக்கு முழுசா வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?' எனக் கடுகடுக்கிறாராம்.