Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
சாந்தினி

`ரெட்டை ரோஜா' சாந்தினி மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப் படங்களை வைரல் ஆக்கத் தொடங்கியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`ரெட்டை ரோஜா' சாந்தினி மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப் படங்களை வைரல் ஆக்கத் தொடங்கியிருக்கிறார்.

Published:Updated:
சாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
சாந்தினி
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

`குக்கு வித் கோமாளி'க்குப் பிறகு சினிமாவில் பிஸியாகிவிட்ட ஷிவாங்கிக்குத் தற்போதும் பட வாய்ப்புகள் வந்தபடியேதான் உள்ளன. அதேநேரம் சிலர், அவரது உடல் எடையைச் சுட்டிக் காட்டி `இன்னும் கொஞ்சம் குறைத்தால் கூடுதல் வாய்ப்புகள் வரலாம்' எனச் சொன்னார்களாம். எடைக் குறைப்பு முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் ஷிவாங்கி.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

`ரெட்டை ரோஜா' சாந்தினி மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப் படங்களை வைரல் ஆக்கத் தொடங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படி போட்டோஷூட் நடத்தித்தான் `பிக் பாஸ்' வாய்ப்பைப் பெற்றார் ரம்யா பாண்டியன். `வரும் பிக் பாஸ் 6வது சீசனில் எதிர் பார்க்கலாமா' என சமூக வலைதளத்தில் சாந்தினியிடம் கேட்கத் தொடங்கியிருக்கி றார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`சந்திரலேகா' தொடரில் ஆரம்ப எபிசோடுகளில் இருந்தே அதாவது சுமார் எட்டு வருடங்களாக நடித்து வந்தவர் அருண். சமீபத்தில் கொடைக்கானல் அடிவாரத்தில் விவசாயம் செய்யத் தொடங்கிய இவருக்கு, சீரியலையும் விவசாயத்தையும் பேலன்ஸ் செய்வது சிரமமாக இருந்ததால் இப்போது சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். `அதிகபட்சம் மாசத்துல பத்து நாள்கள் வரைக்குமே சீரியல் ஷூட் இருக்கும். மீதி நாள்களுக்கு ஏதாவது ஒரு வேலை நிச்சயம் இருந்தாகணும். அந்த வேலை மனசுக்குப் பிடிச்சமாதிரி இருக்கணும். அந்த வேலையா நான் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இப்ப பீன்ஸ் விதைச்சிருக்கேன். ஷூட் இருக்கிற அந்தப் பத்து நாள்கள் சேர்ந்த மாதிரி கிடைச்சா ஷூட் போய்க்கிட்டே, விவசாயத்தையும் கவனிக்கலாம். எனக்கு அந்த மாதிரி வாய்ப்பு அமையலை. அதனால வேற வழி தெரியாம, சீரியலை விட வேண்டிய சூழல் உண்டாகிடுச்சு' என்கிறார் அருண்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல்களில் திருமணக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதையடுத்து எல்லா சீரியல்களிலும் ரீல் திருமணங் களை ரியல் திருமணம் போலவே நடத்தத் தொடங்கிவிட்டனர். பிரதான ஜோடிகளுக்கு சில மாதங் களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்த ஜீ தமிழ் சேனல், மீண்டும் ஒரு மெகா திருமண வைபவத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி சீரியல்களில் இரண்டாம், மூன்றாம் கட்ட ஜோடிகளுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கவுள்ளதாம். இந்த எபிசோடுகள் இம்மாதம் ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகலில் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சினிமாவில் ஒரு ரவுண்டை முடித்து விட்டு சீரியல் பக்கம் வந்த சீனியர் நடிகைகள் சிலர் சமீபத்தில் சந்தித்துப் பேசினார்களாம். அப்போது, தொடர்ச்சியாக சினிமா, டி.வி நடிகைகள் குறித்துப் பொதுவெளியில் தாறுமாறாகப் பேசிவரும் அந்த நபர்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism