
முதல் சீரியலான ‘குலதெய்வம்’ முதல் இப்போது கமிட் ஆகியிருக்கும் ‘மலர்’ வரை பவித்ரனுக்குத் தொடர்ச்சியாக நெகட்டிவ் கேரக்டர்களே அமைந்துவருகிறதாம்

ஷூட்டிங் இல்லாத நாள்களில் மகள்களுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தால்கூட, குடும்பத்துடன் சென்னை புறநகரில் இருக்கும் பண்ணை வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார் தேவயானி. ‘‘அங்கு செடி கொடிகள், தோட்டத்தைப் பராமரிக்கிற வேலை மனதுக்கு ரொம்பவே இஷ்டமானதா இருக்கு’’ என்கிறார்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுகளை உள் வாடகைக்கு விடும் ஒரு பிசினஸ் செய்துவந்தார் மகாலட்சுமி. ஆரம்பத்தில் நன்கு போவதுபோல் தெரிந்தாலும் சமீபமாக பிசினஸ் சரியில்லையாம். முதலுக்கே மோசம் வந்ததுபோல் நஷ்டம் கையைக் கடித்ததாம். எனவே ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற கதையாய் பிசினஸை விட்டுவிட்டாராம்.

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியைத் தயாரித்து வந்த மோனிகாவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பொறுப்பிலிருந்து தன்னுடைய நிறுவனத்தை விடுவித்துக் கொண்டாராம். “முழுக்க வெப்சீரிஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தவேண்டிவந்தது’’ எனக் காரணம் கூறுகிறார்.

முதல் சீரியலான ‘குலதெய்வம்’ முதல் இப்போது கமிட் ஆகியிருக்கும் ‘மலர்’ வரை பவித்ரனுக்குத் தொடர்ச்சியாக நெகட்டிவ் கேரக்டர்களே அமைந்துவருகிறதாம். ‘‘ஹீரோவாக ஜீ தமிழ் மற்றும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக கலர்ஸ் தமிழ் சேனலில் வாய்ப்பு வந்தது. அப்போது திரைப்படம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமப் போயிடுச்சு’’ என்கிறார்.

‘பூஜை’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்கிற எதிர்பாப்பை உண்டாக்கினார் சித்தாரா. ஆனால் ஓரிரு படங்களைத் தாண்டி வாய்ப்புகள் அமையவில்லை. எனவே இப்போது சின்னத்திரைப் பக்கம் வருவதென முடிவெடுத்து விட்டாராம். விரைவில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் லீடு ரோலில் நடிக்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க...
இரண்டாமிடம் வந்தவருக்கு இப்போது புதிதாக ஒரு உதவியாளர் வந்துவிட்டாராம். ‘எதுன்னாலும் நீங்க நேரடியா அவருக்குப் பேசக் கூடாது’ என்கிற ரீதியில் அலம்பல் செய்கிறாராம் அந்த உதவி. ‘‘சமையல் நிகழ்ச்சியில் புகழடைந்தவரும் இப்படித்தான் உதவியாளர் வச்சுக்கிட்டு அலம்பல் பண்ணி வளர்ச்சியைக் கெடுத்துக்கிட்டார். இப்போ இவர் ஆரம்பிச்சிருக்காராக்கும்’’ என முணுமுணுக்கிறது டி.வி ஏரியா.