சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா

நடிப்புக்காகத் தேசிய விருது பெற்ற `வீடு' அர்ச்சனாவை நினைவிருக்கிறதா?

விகடன் TV: ரிமோட் பட்டன்

புதிதாக ஒளிபரப்பாகத் தொடங்கும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லையென்றால், அது டி.ஆர்.பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். தொடர்ந்து ரேட்டிங் கிடைக்காத சீரியல்களை சத்தமில்லாமல் முடித்துவிடுவதும் நடக்கும். இப்போது ஜீ தமிழ் சேனலில் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் `அமுதாவும் ..............' என ஒரு புதிய சீரியலுக்கு புரொமோ வெளியிட்டார்கள். அதாவது சீரியல் பெயரையே முழுவதுமாக வெளியிடாமல் ‘டேஷ்' போட்டு, அந்த மீதிப் பெயர் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்கள். சீரியலுக்காகத் தமிழகத்தின் தென்மாவட்ட‌த்தில் லொகேஷன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரியவந்தது. சீனியர் நடிகை ஒருவரும் முதன்முறையாக இந்த சீரியல் மூலம் டி.வி-க்கு வருவதாகச் சொல்லப்பட்டது. தற்போது திடீரென அந்த சீரியல் கைவிடப் பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்ன காரணம் என்பது சேனலுக்கே வெளிச்சம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தற்போது கர்ப்பமாக உள்ள நகைச்சுவை நடிகை மதுமிதாவுக்கு இது ஆறாவது மாதம். விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே அழைக்கப்படுவார்களெனத் தெரிகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பூவே உனக்காக’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கலர்ஸ் தமிழ் சேனல் சீரியல் வாய்ப்பு வர, அதையும் ஏற்றுக்கொண்டார் சாயா சிங். சம்பளம் இங்கு வாங்கியதைவிட இரண்டு மடங்கு அதிகமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நடிப்புக்காகத் தேசிய விருது பெற்ற `வீடு' அர்ச்சனாவை நினைவிருக்கிறதா? தமிழின் முன்னணி சேனல் ஒன்று பிரைம் டைம் சீரியல் ஒன்றில் நடிப்பதற்காக இவரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதாம். விரைவில் புரொமோவை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

‘கன்டென்ட் கிடைக்கும்னு ஓவரா யோசிச்சு, கட்டம் கட்ட வச்சிடாதீங்கப்பா’ என குழந்தைகளை வைத்து நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று பறந்துள்ளதாம். வடக்கே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பாதிப்பு என்கிறார்கள்.